அன்பிற்கினிய ஆசிரியப்பெருமக்களுக்கு வணக்கம். ஏழாம் வகுப்பு தமிழ்ப்பாடத்திற்கு தேவையான வளரறி மதிப்பீடு FA(B) வினாத்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் பத்து மதிப்பெண் கொண்ட வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் ஒரு A4 இல் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு தாளில் இரு மாணவர்களுக்கு வழங்கலாம். மேலும் இந்த வினாத்தாளில் விடையினை மாணவர்கள் தங்கள் தேர்வு ஏட்டில் எழுதலாம். மேலும் அந்த வினாத்தாளுக்கு OMR SHEET வழியாகவும் விடையளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. விடைகளை குறிப்பதற்குரிய OMR SHEET இந்த ஒவ்வொரு பாடத்திலும் வினாத்தாளுடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த OMR SHEETயும் ஒரு A4 தாளில் இரு மாணவர்களுக்கு வழங்கலாம். நீங்கள் தாளின் முன்ப்பக்கம் வினாத்தாளினையும், தாளின் பின் புறம் OMR SHEET யும் நீங்கள் நகல் எடுத்துக் கொள்ளலாம். இதனைக் கொண்டு மாணவர்கள் முன்புறம் வினாவினைப் படித்து, பின் புறத் தாளில் OMR SHEETஇல் விடையினைக் குறிக்கலாம்.
சரி இந்த OMR SHEET ஐ எவ்வாறு SCAN செய்வது என்று உங்களுக்கு ஐயம் ஏற்படும். அதற்கான பிரத்தேயக செயலி GOOGLE PLAY STORE இல் EVALBEE என்ற செயலியை பதிவிறக்கம் செய்து நீங்கள் SCAN செய்யலாம். முதல் முன்னோட்டமாக ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் முதல் இயலுக்குரிய வினாத்தாளும் OMR SHEET யும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
குறிப்பு : OMR SHEET மதிப்பீடு என்பது மதிப்பீட்டின் நவீன தொழில் நுட்பம். தேவைப்படின் ஆசிரியர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நீங்கள் எத்தனை விடைத்தாள்களையும் SCAN செய்துக் கொள்ள முடியும். மேலும் பத்து மதிப்பெண் என்பதனைக் கூட நீங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம். இதனைக் கொண்டு விரைவாக நீங்கள் மதிப்பிடலாம். SCAN செய்வதற்கு முன் ANSWER KEY நீங்கள் தயார்ப் படுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்த வினாத்தாளினைக் கொண்டு ஏடுகளில் தேர்வு வைக்கலாம். இல்லையெனில் வினாத்தாளின் பின்ப்புறம் விடைகளை எழுதி மதிப்பீடு செய்துக் கொள்ளலாம்.