சேலம் – மூன்றாம் திருப்புதல் தேர்வு – பிப்ரவரி -2026
பத்தாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச
விடைக்குறிப்பு
நேரம் : 3.00 மணி மதிப்பெண் : 100
|
பகுதி – 1 மதிப்பெண்கள் - 15 |
|||||||||||||||||||||||||||
|
வினா.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||
|
1. |
ஆ) இன்மையிலும்
விருந்து |
1 |
|||||||||||||||||||||||||
|
2. |
ஆ) வங்காள,ஆங்கில |
1 |
|||||||||||||||||||||||||
|
3. |
இ) உழவு,
ஏர்,மண்,மாடு |
1 |
|||||||||||||||||||||||||
|
4. |
அ) வேற்றுமை
உருபு |
1 |
|||||||||||||||||||||||||
|
5. |
இ) 5 |
1 |
|||||||||||||||||||||||||
|
6.
|
ஆ) மணிப்பெயர்
வகை |
1 |
|||||||||||||||||||||||||
|
7. |
ஆ) கலைஞர்
என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது? |
1 |
|||||||||||||||||||||||||
|
8. |
ஈ) சிலப்பதிகாரம் |
1 |
|||||||||||||||||||||||||
|
9. |
அ) தொடுதல்
– தொடுத்தல் |
1 |
|||||||||||||||||||||||||
|
10. |
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் |
1
|
|||||||||||||||||||||||||
|
11.
|
ஈ) வலிமையை நிலைநாட்டல் |
1
|
|||||||||||||||||||||||||
|
12
. |
அ) மன மகிழ்ச்சி |
1
|
|||||||||||||||||||||||||
|
13
. |
இ) எண்ணும்மை |
1
|
|||||||||||||||||||||||||
|
14
. |
அ) திருவிளையாடற்புராணம் |
1
|
|||||||||||||||||||||||||
|
15
|
அ) வையை |
1
|
|||||||||||||||||||||||||
|
பகுதி – 2 – பிரிவு – 1
4x2=8 |
|||||||||||||||||||||||||||
|
16 |
|
2 |
|||||||||||||||||||||||||
|
17. |
Ø பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
2 |
|||||||||||||||||||||||||
|
18. |
ஏளனம்
செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் காணும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும். |
2 |
|||||||||||||||||||||||||
|
19 |
v அறம்
கூறும் மன்றங்கள் v துலாக்கோல்
போல் நடுநிலையானது. |
2 |
|||||||||||||||||||||||||
|
20 |
பேசுதல்,
விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல் ( எவையேனும் 4 ) |
2 |
|||||||||||||||||||||||||
|
21. |
இன்மையின்
இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே
இன்னா தது |
2 |
|||||||||||||||||||||||||
|
பிரிவு – 2 – பிரிவு – 2
5x2=10 |
|
||||||||||||||||||||||||||
|
22 |
அழைப்பு
மணி ஒலித்ததும் கயல்விழி கதவைத் திறந்தார் |
2 |
|||||||||||||||||||||||||
|
23 |
அனைத்து புறத்திணைகளில் உள்ள பொதுவான செய்திகளையும் அவற்றுள் சொல்லாத செய்திகளையும்
கூறுவது பொதுவியல் திணை |
1 1 |
|||||||||||||||||||||||||
|
24. |
வேங்கை – புலி – தனிமொழி வேம் + கை – வேகின்ற கை – தொடர்மொழி |
2 |
|||||||||||||||||||||||||
|
25 |
மயங்கிய – மயங்கு + இ (ன்) + ய் +
அ மயங்கு – பகுதி இ(ன்) – இறந்த கால இடைநிலை; ‘ன்’-புணர்ந்து கெட்டது. ய் – உடம்படு மெய் அ – பெயரெச்ச விகுதி |
1 1 |
|||||||||||||||||||||||||
|
26 |
அ) புயல் ஆ) எல்லை |
2 |
|||||||||||||||||||||||||
|
27 |
கம்பர்,
உமறுப் புலவர் |
2 |
|||||||||||||||||||||||||
|
27 |
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான
மாற்று வினா அ) மரம்வீடு - மரவீடு ஆ) அவிழும் - கவிழும் |
2 |
|||||||||||||||||||||||||
|
28 |
வருக, வணக்கம், வாருங்கள்,
அமருங்கள், நலமா?, நீர் அருந்துங்கள் |
2 |
|||||||||||||||||||||||||
|
பகுதி – 3 – பிரிவு – 1
2x3=6 |
|||||||||||||||||||||||||||
|
29 |
தாஜ்
மஹால் நிறம் மாறுவதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது, அதனை சுற்றி இருக்கும்
பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதால், மாசு அதிக அளவில் தாக்குவதாலும், புற ஊதா கதிர்களின்
தாக்கமும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. தீர்வு : |
3 |
|||||||||||||||||||||||||
|
30 |
அ)
நேசமணி ஆ)
1956 நவம்பர் 1 இ)
வழக்கறிஞர், நாகர் கோவில் நகர்மன்றத் தலைவர், சட்ட மன்ற உறுப்பினர், நாடாளு
மன்ற உறுப்பினர் |
3 |
|||||||||||||||||||||||||
|
31 |
Ø கல்வி
துறையை பள்ளி மற்றும் உயர் கல்வியாக பிரித்தார். Ø புதிய
துறையாக தமிழ் வளர்ச்சித் துறை உருவாக்கினார். Ø தமிழ்த்தாய்
வாழ்த்து பாடலை எல்லா அரசு விழாக்களில் பாடச் செய்தார். |
3 |
|||||||||||||||||||||||||
|
பகுதி -3 / பிரிவு – 2
2x3=6 |
|||||||||||||||||||||||||||
|
32 |
தேம்பா
+ அணி = வாடாத மாலை தேன் + பா
+ அணி = தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு சூசையப்பர்
என்னும் யோசேப்பினைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல். 3 காண்டங்கள்,
36 படலங்கள், 3615 பாடல்களைக் கொண்டது. 17ஆம் நூற்றாண்டில்
படைக்கப்பட்டது. இயற்றியவர்
: வீரமாமுனிவர் |
3 |
|||||||||||||||||||||||||
|
33
|
|
3 |
|||||||||||||||||||||||||
|
34அ |
பொய்யோவெனு
மிடையாளொடு மிளையானொடும் போனான்; மையோமர
கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோவிவன்
வடிவென்பதொ ரழியாவழ குடையான்.
-கம்பர் |
3 |
|||||||||||||||||||||||||
|
34ஆ |
வெள்ளம்தீப்
பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம் கைச்சிறகால்
பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல்
கோக்கோதை நாடு |
3 |
|||||||||||||||||||||||||
|
பகுதி – 3 / பிரிவு – 3
2x3=6 |
|||||||||||||||||||||||||||
|
35 |
Ø ஆசிரியப்பா
அகவல் ஓசையுடன் வரும். Ø காய்ச்சீர்
அதிகம், ஈரசைச்சீர் குறைவு. Ø ஆசிரியத்தளை
அதிகமாக இருக்கும். Ø மூன்று
அடிகளுக்கு மேல் எழுதலாம். Ø ஏகாரத்தில்
முடிவது சிறப்பு. |
3 |
|||||||||||||||||||||||||
|
36 |
உவமை அணி : ஒரு பொருளை, அதனுடன் தொடர்புள்ள மற்றொரு பொருளுடன்
ஒப்பிட்டு கூறுவது உவமை அணி.
|
3
|
|||||||||||||||||||||||||
|
37
|
இத்திருக்குறளின்
இறுதிச்சீர் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது. |
3 |
|||||||||||||||||||||||||
|
பகுதி – 4
5x5=25 |
|||||||||||||||||||||||||||
|
38அ |
முன்னுரை : பெரியாரைத்
துணைகோடல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளையும், எனது கருத்தையும்
நாம் காணலாம். பொருள் : ü கிடைத்தற்கரியபேறுகளுள்
எல்லாம் பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும். ü நமக்கு கிடைத்த
பயன்களில் மிகச்சிறந்த பயனாக இருப்பது நமது பெற்றோர்களும், பெரியோர்களுமே ஆகும்.
இவர்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். ü குற்றங்கண்டபொழுது இடித்துக் கூறும்
பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகைவர் இன்றியும்
தானேகெடுவான். ü நான் தவறான
முடிவு எடுக்கும் போது என்னை திட்டியோ, அடித்தோ நல்வழிபடுத்த பெரியோர் இல்லை
எனில் நான் நிச்சயம் பகைவரால் அழியக் கூடும் என்பது உண்மை. ü தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும். ü வீரம், திறமை இவற்றைக் கொண்டு நாம் பகைவரை
எதிர்க்கொண்டாலும் நல்ல பண்புக் கொண்ட பெரியோர்கள் இல்லையெனில் அது எனக்கு பல
மடங்கு தீமை தரும். முடிவுரை : ·
பெரியாரைத் துணைக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் நமக்கு தீங்கு ஏற்படும் என்பதனை பெரியாரைத் துணைகோடல் என்ற அதிகாரத்தின்
மூலம் கண்டோம். நாமும் நமது வீட்டில் உள்ள பெற்றோர்களையும், பெரியோர்களையும், ஆசிரியர்களையும்
மதித்து நடப்போம் |
5
|
|||||||||||||||||||||||||
|
38ஆ |
|
5
|
|||||||||||||||||||||||||
|
39அ |
இடம்,நாள் விளித்தல்
( அன்புள்ள நண்பனுக்கு ) கடிதச் செய்தி இப்படிக்கு, உறை மேல்
முகவரி |
5 |
|||||||||||||||||||||||||
|
39ஆ |
அனுப்புநர் பெறுநர் ஐயா, பொருள் கடித செய்தி இப்படிக்கு இடம் நாள் உறை
மேல் முகவரி |
5 |
|||||||||||||||||||||||||
|
40அ)
|
காட்சிக்கு பொருத்தமான
கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
|||||||||||||||||||||||||
|
41 |
பணிவாய்ப்பு வேண்டிய விண்ணப்பப்
படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||
|
42அ |
1.பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்வி –
ஆல்பிரட் ஐன்ஸ்டீன் 2. நாளையே
இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி 3. நம்
வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாட்டில் 4. வெற்றி
என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது – வின்ஸடன் சர்ச்சில். 5. மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி
பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள்
என்பதை உணர்த்தும் – ரீடா மேக் ப்ரெளன் |
5 |
|||||||||||||||||||||||||
|
42ஆ |
|
5 |
|||||||||||||||||||||||||
|
42 |
செவி மாற்றுத்
திறனாளர்களுக்கான மாற்று வினா நிகழ்வினைக்
கொண்டு கதையாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
|||||||||||||||||||||||||
|
பகுதி – 5
3x8=24 |
|||||||||||||||||||||||||||
|
43அ |
முன்னுரை சங்க காலத் தமிழர்கள் விருந்தினரை அன்புடன் வரவேற்ற நல்ல
மக்கள். அவர்களின் விருந்தோம்பல் இக்கட்டுரையில் காணலாம். விருந்தினர் Ø
விருந்தினர்
என்றால் புதிதாக வரும் மனிதர்கள். Ø
அவர்களை
மகிழ்ச்சியாக வரவேற்றனர். தமிழர்
மரபு Ø
தமிழர்கள்
இல்லறம் நடத்துவதில் விருந்தை முக்கியமாகக் கருதினர். Ø
விருந்தினரைப்
போற்ற முடியாவிட்டால் வருத்தப்பட்டனர். தனித்து
உண்ணாமை Ø
தமிழர்கள்
தனியாக உண்பது தவறு என்று நினைத்தனர். Ø
கிடைத்த
உணவை பிறருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அல்லிலும்
விருந்து Ø
இரவு
நேரம் வந்தாலும் விருந்தினரை வரவேற்று உணவு கொடுத்தனர். இன்மையிலும்
விருந்து Ø
வீட்டில்
உணவு இல்லை என்றாலும் விருந்து அளித்தனர். Ø
தானியம், பொருள்
இல்லாதபோதும் விருந்து செய்தனர். விருந்தை எதிர்கொள்ளுதல்
இரவில் கதவை மூடுவதற்கு முன் “உணவு தேவையா?” என்று
கேட்டுப் பார்த்தனர்.
முடிவுரை
சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல்
மிக உயர்ந்தது. இன்று அது குறைந்திருந்தாலும், பழைய தமிழர்
பண்பு போற்றத்தக்கது. |
8 |
|||||||||||||||||||||||||
|
43ஆ |
முன்னுரை :
நான் உங்கள் காலடிகளால் மிதிபட்ட போதும் வருந்தாமல் மகிழ்ச்சி
அடைகிறேன். ஆனால் மனிதர்கள் எனக்கு எதிராக செய்யும் செயல்களை எண்ணி மிகுந்த
வேதனையடைகிறேன். நான்தான் நிலம் பேசுகிறேன். பல பெயர்களில் நான்: என்னுடைய தன்மை, வளம் இவற்றைக் கொண்டு தமிழர்களாகிய நீங்கள் பல
பெயர்களைச் சூட்டியுள்ளீர்கள். அவை…
ஐவகை நிலங்கள் : சங்க இலக்கியங்களில் நான் ஐவகை நிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளேன். அவை
அகப்பொருள் இலக்கணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளேன். குறிஞ்சி – மலையும்,
மலைசார்ந்த இடம் முல்லை – காடும் காடு
சார்ந்த இடம் மருதம் – வயலும் வயல் சார்ந்த
இடம் நெய்தல் – கடலும் கடல்
சார்ந்த இடம் பாலை – மணலும் மணல்
சார்ந்த இடம். என் குணம் : நான் மிகவும் பொறுமை மிக்கவன். என்னை நீங்கள் எவ்வளவுத் தூரம்
கொடுமைப்படுத்தினாலும் நான் பொறுமையாகவே இருப்பேன். என்னை வள்ளுவரும் “அகழ்வாரை
தாங்கும் நிலம்போல” என என்னை ஒப்புமைப்படுத்தி குறளில் கூறியுள்ளார். மனிதனால் மாசு அடையும்
நான் : என்னை மக்களாகிய நீங்கள் பலவாறாக மாசுபடுத்துகிறீர்கள். என்னில்
ஆழமாக துளையிட்டு என் ஜீவ ஊற்றான நீரை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறீர்கள். இதனால் பல
இடங்களில் நான் வளம் இல்லாமல் இருக்கிறேன். என் மீது அடுக்கடுக்காக வீடுகள்
கட்டுவது, பாதாளச் சாக்டைகளுக்கு குழி தோண்டுவது, நெகிழிகளை பயன்படுத்தி அப்படியே
வீசுவது, குப்பைகளை எரிப்பது என பல தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளை நீங்கள்
செய்து வருவது எனக்கு மிகுந்த வேதனையே. என் வேண்டுகோள் : என்னை நீங்கள் பாதுகாப்பாக வைத்து பாதுகாத்துக் கொண்டால் உங்களை
போன்ற பல உயிர்களை நான் பல்லாயிரம் ஆண்டுகள் நன்றாக வாழ வைப்பேன். நீங்கள் செய்ய
வேண்டியது நிலத்தடி
நீரை சேமியுங்கள் மரங்களை
நடுங்கள் மழைநீரை
சேமியுங்கள் குப்பைகளை
எரிக்காதீர்கள் நெகிழி
பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். |
8
|
|||||||||||||||||||||||||
|
44அ |
முன்னுரை
புத்தகம்
பறிக்கப்பட்ட அவமானம் மேரியின் வாழ்க்கையில் கல்வி தீபம் ஏற்றியது. மேரி
Ø சாம்–பாட்சி
மகளான மேரி ஏழை குடும்பத்தில் வாழ்ந்தாள். அவமானம்
Ø பென்
வில்ஸன் வீட்டில் “உனக்குப் படிக்கத் தெரியாது” என்று இகழப்பட்டு மனம்
உடைந்தாள். புதிய நம்பிக்கை
Ø மிஸ்
வில்ஸன் ஊக்கமளித்ததால் மேரியில் கல்வி கற்கும் ஆசை அதிகரித்தது. கல்வி
Ø ஐந்து
மைல் நடந்தே பள்ளிக்குச் சென்று ஆர்வத்துடன் படித்தாள். Ø பட்டமளிப்பு
விழாவில் “இவர் படிக்கவும் எழுதவும் கூடியவர்” எனப் பாராட்டப்பட்டது. உதவிக்கரம் – மேல்படிப்பு
Ø ஒருவர்
அனுப்பிய பண உதவியால் மேல்படிப்பிற்குச் செல வாய்ப்பு கிடைத்தது. Ø கிராமமெங்கும்
அவளைக்கொண்டு பெருமைப்பட்டனர். முடிவுரை
Ø மேரியின்
சாதனை கல்வியின் வலிமையை நிரூபிக்கிறது. Ø கல்வி
வாழ்க்கையை உயர்த்தும் என்பதற்கு மேரி சிறந்த எடுத்துக்காட்டு. |
8
|
|||||||||||||||||||||||||
|
44ஆ |
முன்னுரை ·
இராமானுசர் தன்னை விட மக்களின் நலனை
முதலில் நினைத்தவர். திருமந்திரம் ·
கூரேசர், முதலியாண்டாருடன்
திருமந்திரம் பெறுகிறார். ·
பூரணர், இதை யாருக்கும்
சொல்லக்கூடாது என எச்சரிக்கிறார். திருகோட்டியூர்
திருக்கோவில் ·
திருமந்திரம் மக்களுக்கு உதவும் என
எண்ணுகிறார். ·
கோவில் மதில்மேல் ஏறி கூறத்
தயாராகிறார். திருமந்திரம்
பகிர்தல் ·
எல்லோருக்கும் பிறவிப்பிணியை
நீக்குகிறது என அறிவிக்கிறார். ·
மக்களுக்கு திறந்தவெளியில்
திருமந்திரத்தை சொல்லிறார். பூரணரிடம்
விளக்கம் ·
“நரகம் எனக்கு வரட்டும்; ஆனால் மக்கள் நலமுடன் வாழட்டும்” என்கிறார். ·
அனைவருக்கும் நன்மை செய்யவே
விரும்பினார். முடிவுரை ·
இராமானுசரின் தன்னலமற்ற செயல்
மனிதர்க்கு முன்மாதிரியாக உள்ளது. |
8 |
|||||||||||||||||||||||||
|
45அ |
சாலை பாதுகாப்பு
முன்னுரை
சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள்
அதிகரித்து வருவதால்,
சாலை பாதுகாப்பு மிகவும் அவசியமானதாகியுள்ளது. சாலை பாதுகாப்பு – உயிர்பாதுகாப்பு
Ø அரசும்
காவல்துறையும் சாலை விதிகளை மக்களுக்கு அறிவித்து விழிப்புணர்வு
ஏற்படுத்துகின்றன. சாலை விதிகள்
Ø நடைமேடை
பயன்படுத்துதல்,
சுரங்க நடைபாதை, வெள்ளைக்கோட்டில் கடத்தல்
போன்ற அடிப்படை விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்
Ø சிக்னல்
விதிகள்,
உரிமம் வைத்திருத்தல், அதிவேகத்தை
தவிர்த்தல் மற்றும் மதுவிலக்கு போன்ற நெறிகள் முக்கியமானவை. விபத்துகளை தவிர்ப்போம் – விழிப்புணர்வு தருவோம்
Ø விதிகளை
பின்பற்றுதல்,
பாதுகாப்பாக ஓட்டுதல், முதலுதவி செய்தல்
மற்றும் பொறுப்பற்ற செயல்களைத் தவிர்த்தல் அவசியம். முடிவுரை
சாலை விதிகளை மதிப்பதால் மட்டுமே
உயிர்களை காப்பாற்ற முடியும்; சாலை பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு
என்பதை உணர்வோம். |
8 |
|||||||||||||||||||||||||
|
45ஆ |
இடம் :
பள்ளி, வகுப்பறை பங்கேற்பாளர்கள் : தமிழாசிரியர், வளர்தர்ஷினி, ரித்திஷ்கா, கனிஷ்கா, வளர்தர்ஷினி
: கயல், தாரணி நமது தமிழ் ஆசிரியர் அன்றைய
வகுப்பில் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் எனக் கூற வந்தார். அதற்குள்
மணி அடித்துவிட்டது. இன்று நாம் அவரிடம்
முதலில் கேட்டிடுவோம். கயல் : ஆம், வந்தவுடன் கேட்கலாம். மாணவிகள் : வணக்கம். ஐயா, தமிழாசிரியர் : வணக்கம் மாணவர்களே, எல்லோரும் உணவு உண்டீர்களா? மாணவர்கள் : உண்டோம் ஐயா. வளர்தர்ஷினி :ஐயா நேற்றைய வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை
கூற வந்தீர்கள். அதற்குள் மணி அடித்துவிட்டது. இப்போது கூறுங்கள். ரித்திஷ்கா,
கனிஷ்கா: ஆமாம். ஐயா. தமிழாசிரியர் : ஆம். மூன்று உதாரணங்களுடன்
கூறுகிறேன். கேளுங்கள் மாணவிகள்
: கூறுங்கள் ஐயா. தமிழாசிரியர்
: 1. மாணவர்கள் கொக்கைப்
போல இருக்க வேண்டும். காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொறுமை அவசியம். வளர்தர்ஷினி
: ஐயா, இனிமேல் நாங்கள்
அவசரப்படமாட்டோம். தமிழாசிரியர் : அடுத்து, இரண்டாவது
கோழியைப் போல குப்பையைக் கிளறினாலும். தனக்கான உணவினை மட்டும் உட்கொள்வது போல
சமூகத்தில் கெட்டது இருந்தாலும், நல்லதை மட்டுமே எடுத்துக்
கொள்ள வேண்டும். ரித்திஷ்கா : ஆமாம் ஐயா, நாங்கள் நல்லதை மட்டுமே எடுத்துக்
கொண்டு எங்கள் பண்பினை வளர்த்துக் கொள்வோம். தமிழாசிரியர்
: மூன்றாவதாக உப்பைப்
போல உணவில் உப்பின் சுவையை நாக்கு உணர்வதை போல , ஒவ்வொருவரின்
வெளித்தோற்றத்தைக் காணாது அவரின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து பழக வேண்டும். கனிஷ்கா
: சரி ஐயா, இனிமேல் குணநலன்களை
மட்டுமே பார்க்கிறோம். மாணவிகள்
: ஐயா, அருமை. மிக சரியாக விளக்கினீர்கள். இனி நாங்கள் இவ்வாறே நடந்து
கொள்வோம். நன்றி ஐயா. |
8
|
|||||||||||||||||||||||||
இளந்தமிழ்
மெல்லக் கற்போருக்காக 2026 -2027 கல்வி ஆண்டிற்கான சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பின் 70+ மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது.
வழிகாட்டி பற்றிய விபரங்களுக்கு…….. சிறப்பு தள்ளுபடி விலையில் பெற - தொடர்பு எண்
: 80724-26391
தொடர்ந்து கல்விசார்ந்த பதிவுகள் பெற
8695617154 என்ற எண்ணை உங்கள் குழுக்களில் இணைக்கவும். www.tamilvithai.com www.kalvivithaigal.com
தொடர் பதிவுகள் இந்த வலைதளத்தில் பெறலாம்.
.png)


Super very nai
ReplyDelete