ஒன்பதாம் வகுப்பு – தமிழ்
ஒருமதிப்பெண் – வினாக்கள் தொகுப்பு - 2026
இயல் – 1
அமுதென்று பேர்
அ) சரியான விடையைத்
தேர்ந்தெடு:-
1. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட
மொழி__________
அ) தமிழ் ஆ)
தெலுங்கு இ) மலையாளம் ஈ) கன்னடம்
2 தமிழ்விடுதூது ____ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை
இ) சிற்றிலக்கியம் ஈ)
தனிப்பாடல்
3. பின்வருவனவற்றில் அளபெடை இடம் பெறாத தொடர் எது?
அ) குக்கூஉ எனக் குயில் கூவியது ஆ) கொக்கரக்கோஒ எனச் சேவல் கூவியது
இ) அண்ணாஅ என அழைத்தான் ஈ) ஓடி வா ஓடி வா
4. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்த
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!............. - இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
அ) முரண்,எதுகை, இரட்டைதொடை ஆ)இயைபு,அளபெடை,
செந்தொடை
இ) மோனை, எதுகை, இயைபு ஈ)
மோனை, முரண், அந்தாதி
5. சிந்தா மணி என்பதன் இலக்கணக் குறிப்பு__________
அ) வேற்றுமை தொகை ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
இயல் – 2
உயிருக்கு வேர்
அ) சரியான விடையைத்
தேர்ந்தெடு:-
1. “ மாடு “ என்பதன் பொருள் என்ன?
அ) கீழே ஆ)
மேலே இ) பக்கம் ஈ) தொலைவு
2 நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி ஆ) ஆறு இ) இலஞ்சி ஈ)
புலரி
3. பொருத்தமான விடையைத் தேர்க.
அ) நீரின்று அமையாது உலகு - திருவள்ளுவர்
ஆ) நீரின்று அமையாது யாக்கை - ஓளவையார்
இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
அ) க,௩ ஆ) ௨ , ௩ இ) க,௨ ஈ)
க, ௨ , ௩
4. பகுதி, விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?
அ) வென்றார் ஆ) நடந்த இ)
வளர்க ஈ) பொருந்திய
5. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரிய
இயல் – 3
உள்ளத்தின் சீர்
அ) சரியான விடையைத்
தேர்ந்தெடு:-
1. பெயரடை இடம்பெறாத தொடரைக் காண்க.
அ) நல்ல நண்பன் ஆ) இனிய வணக்கம் இ) எந்த ஓவியம்? ஈ) கொடிய விலங்கு
2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்புடுக.
அ) தமிழர்களின் வீர
விளையாட்டு தொன்மையான ஏறு தழுவுதல்
ஆ) தமிழர்களின் வீர
விளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான
இ) தொன்மையான வீர
விளையாட்டு தமிழர்களின் ஏறு தழுவுதல்
ஈ) தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல்
3. பைங்கூழ் வளர்ந்தது. ஆகுபெயரின் வகையைக் கண்டறிக.
அ) காலவாகு பெயர் ஆ) காரியவாகு பெயர்
இ) கருவியாகு பெயர் ஈ) கருத்தாவாகு
பெயர்
4. தோரண வீதியும், தோமறு கோட்டியும் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்.
அ) ஏவல் வினைமுற்று ஆ)
வினைத் தொகை
இ) எண்ணும்மை ஈ)
பண்புத் தொகை
5. பொருந்தாத தொடரைக் கண்டறிக
அ) பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்
ஆ) சூடிக் கொடுத்த
சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.
இ) திருவெம்பாவை இயற்றியவர்
ஆண்டாள்
ஈ) நம்மாழ்வாரின்
மகளாவார் ஆண்டாள்
இயல் – 3
திருக்குறள்
அ) படத்திற்கேற்ற குறளைத்
தேர்வு செய்க.
அ)
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
ஆ)
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
இ)
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.
2.
பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.
1)
பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று - அ)
ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
2)
தத்தம் கருமமே கட்டளைக்கல் – ஆ) அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்
3)
அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - இ) சுடாத
மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல
3. தீரா
இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை, ஐயப்படுதல்
ஆ. குணம், குற்றம்
இ. பெருமை, சிறுமை ஈ. நாடாமை, பேணாமை
இயல் – 4
எட்டுத்திக்கும் சென்றிடுவீர்
அ) பலவுள் தெரிக.
1. கல்வி
இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
அ) நஞ்சை நிலம் ஆ) களர் நிலம் இ) உவர் நிலம் ஈ) புஞ்சை நிலம்
2. கீழ்க்காண்பனவற்றுள் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின்
சரியான குழுவினைக் கண்டறிக.
அ) நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார்,
நப்பசலையார், பண்டித ரமாபாய்
ஆ) நப்பசலையார், பொன்முடியார், நீலாம்பிகை
அம்மையார், ஒளவையார்
இ) நக்கண்ணையார்,
ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார், ஒளவையார்
ஈ) நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார்,
நப்பசலையார், மூவலூர் இராமாமிர்தம்
3. “ இரு
“ என்பது துணைவினையாக உள்ள தொடர் எது?
அ) பட்டம் இருக்கிறது. ஆ) பட்டம் செய்திருக்கிறேன்.
இ) எங்கே இருக்கிறது? ஈ) வானில் மேகம் இருக்கிறது.
4. சரியான
கூற்றினைத் தெரிவு செய்க.
அ) வில்லுப்பாட்டு
ஓர் இலக்கிய வடிவம்
ஆ) தமிழகத்தின்
முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி
1. அ மட்டும் சரி 2. அ,ஆ இரண்டும் சரி
3.
அ, ஆ இரண்டும் தவறு 4. ஆ மட்டும் சரி
5. ஒன்றறிவதுவே
உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக்
குறிக்கிறது?
அ) நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ) கேட்டல் ஈ) காணல்
இயல் – 5
கலை பல வளர்தல்
அ)
பலவுள் தெரிக.
1. பல்லவர்
காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ________
அ) மாமல்லபுரம் ஆ) பிள்ளையார்பட்டி இ)
திரிபுவனவீரேசுவரம் ஈ) தாடிக்கொம்பு
2. ’பொதுவர்கள்
பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப் பகுதி ____
அ)
குறிஞ்சி ஆ) நெய்தல் இ) முல்லை ஈ) பாலை
3.
இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்பதற்கான எடுத்துக்காட்டு
அ) தனிச்சிறப்பு ஆ) தைத்திங்கள் இ) வடக்குப் பக்கம் ஈ) நிலாச் சோறு
4. திருநாதர்குன்றில்
ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை _____
அ) விலங்கு உருவங்கள் ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
இ) தெய்வ உருவங்கள் ஈ) நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்
5. ‘ வசிபட முதுநீர் புக்கு
மலையெனத் துவரை நன்னீர் ‘ – பாடல்
அடிகளில் முதுநீர் என்பது எது?
அ) மழை நீர் ஆ) கடல் நீர் இ) ஆற்று நீர்
ஈ) நிலத்தடி நீர்
இயல் – 5
திருக்குறள்
அ) பலவுள் தெரிக.
1. படத்திற்கேற்ற
குறளைத் தேர்வு செய்க.
அ) இன்பத்துள்
இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
ஆ) ஏவவும்
செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர்நோய்
இ) சுழன்றும்
ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
2. பொருளுக்கேற்ற
அடியை கண்டுப்பிடித்து பொருத்துக
|
பகைவரையும் நட்பாக்கும் கருவி |
கண்டானாம் தான்கண்ட வாறு |
|
தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான் |
அறம்நாணத் தக்கது உடைத்து |
|
அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும் |
மாற்றாரை மாற்றும் படை |
3. ஐந்து
சால்புகளில் இரண்டு
அ) வானமும் நாணமும் ஆ) நாணமும் இணக்கமும்
இ)
இணக்கமும் சுணக்கமும் ஈ) இணக்கமும்
பிணக்கமும்
4. கோடிட்ட
இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக
அ.
அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள் –
ஆ.
உலகத்துக்கு அச்சாணி போன்றவர் –
இ. தான்
நாணான் ஆயின் …… நாணத் தக்கது. –
ஈ. ஆழி
என்பதன் பொருள் –
உ.
மாற்றாரை மாற்றும் -
ஊ.
ஒழுக்கமான குடியில் பிறந்தவர் ______செய்வதில்லை.
இயல் – 6
வாழிய நிலனே
அ) பலவுள் தெரிக.
1. சொல்லும்
பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை - இருக்கை ஆ) மடுத்து – பெரிய மலை
இ) அடிசில் – சோறு ஈ) மடிவு –
தொடக்கம்
2. தேமாங்கனி
என்பது ____________ ஆகும்.
அ) பண்புத் தொகை ஆ) வினைத்தொகை
இ) வேற்றுமைத் தொகை ஈ) உவமைத்
தொகை
3. தவிர்தலின்றிக்
காவல் செய்யும் பாதுகாவலர் ஆயிரம் பேர் உள்ளது _________
அ) கோக்கிள்ளி நாடு ஆ) ஏமாங்கத
நாடு இ) திருநாடு ஈ) கோசலை நாடு
4. கூற்று -
இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், ”இந்திய
தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார்.
காரணம் -
இந்திய தேசிய இரா ணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.
அ) கூற்று சரி; காரணம்
சரி
ஆ) கூற்று சரி; காரணம்
தவறு
இ) கூற்று தவறு; காரணம்
சரி
ஈ) கூற்று தவறு; காரணம்
தவறு
5.
ஆடுகளம் – இச்சொல்லில் வல்லினம் மிகாது என்பதற்கான காரணம் யாது?
அ) எழுவாய்த் தொடரில்
வல்லினம் மிகாது
ஆ)
வினாப்பெயரின் பின் வல்லினம் மிகாது
இ) வினைத்தொகையில் வல்லினம் மிகாது
ஈ) இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது
இயல் – 7
என் தலை கடனே
அ) பலவுள் தெரிக.
1. சரியான
விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று -
பெரியார் உயிர் எழுத்துகளில் ’ஐ’ என்பதனை ’அய்’ எனவும், ’ஒள’ என்பதனை
’அவ்’ எனவும் சீரமைத்தார்.
காரணம் – சில எழுத்துகளைக்
குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று
எண்ணினார்.
அ) கூற்று சரி, காரணம்
தவறு ஆ) கூற்று, காரணம்
இரண்டும் சரி
இ) கூற்று, காரணம்
இரண்டும் தவறு ஈ) கூற்று தவறு, காரணம்
சரி
2. காலத்தினால்
செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின்
வாய்பாடு யாது?
அ)
நாள் ஆ) மலர் இ)காசு ஈ) பிறப்பு
3. விடுபட்ட இடத்திற்கான விடை எது?
‘ இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க
_____________ புதியவைதாம்’
அ)
சாதியும் மதமும் ஆ) இனமும் மொழியும் இ) இனமும்
மதமும் ஈ) மதமும் மொழியும்
4. பெரியார்
என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ____
அ) ஈரோட்டுச் சிங்கம் ஆ)
பகுத்தறிவுக் கொள்கை
இ) எழுத்துச் சீர்திருத்தம் ஈ) அ,ஆ,இ அனைத்தும்
5. போக்குக
என்ற சொல்லின் பகுதி -
அ)
போகு ஆ) போக்கி இ)
போக்கு ஈ) போகி
.png)