9TH - TWO MARKS - QUESTION AND ANSWER

குறுவினாக்கள்

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

குறுவினாக்கள்

2 மதிப்பெண்

குறைக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்திற்கான இரண்டு மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு மாணவர்கள் அனுதினமும் பயிற்சி எடுத்து வந்தால் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உண்டு. இந்த வினாக்கள் அனைத்தும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து புத்தக வினாக்கள் மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்கள் இதனை பயிற்சி பெறவும். நாள் ஒன்றுக்கு ஐந்து வினாக்கள் வீதம் பயிற்சி பெற்று வந்தால் நீங்கள் அனைத்து வினாக்களுக்கும் விடையை விரைவில் புரிந்துக் கொண்டு படிக்க இயலும்.

இங்கு வினாக்கள் இயல் வாரியாக தொகுக்காமல் மொத்த வினாக்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கபட்டுள்ளது. எனவே மாணவர்கள் இதனை வழிகாட்டியாக பயன்படுத்திக் கொண்டாலும் சரி. இங்கு கொடுக்கப்பட்ட விடைகள் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மீத்திற , நடுநிலை, மெல்லக் கற்கும் மாணவர்கள் என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் இது மிகுந்த பயன் அளிக்கும்.

மீத்திற மாணவர்கள் சற்று அதிக மதிப்பெண் பெற உங்கள் கையில் உள்ள தமிழ் புத்தகத்தில் மேலும் சில பதில்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கவும். அல்லது தங்களின் தமிழாசிரியரிடம் இதற்கு மேலும் சில பதில்களை குறித்துத் தர நீங்கள் கேட்டு குறித்து, படித்து உங்களின் கற்றலை மேம்படுத்தி மதிப்பெண்களை உயர்வாக வைத்துக் கொள்ளவும்.

வினாக்கள் தொகுப்பு

மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் அடங்கிய தொகுப்பினை ஒரு தாளில் எழுதிக் கொண்டால் நீங்கள் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு முறை ஆசிரியர் வைக்கும் போதும் வினாக்கள் எழுத வேண்டிய அவசியம் இருக்காது. மாணவர்கள் இந்த குறுவினாக்கள் அடங்கிய தொகுப்பினை ஒரு தாளில் எழுதிக் கொள்க. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இங்கு வரிசையாக 33 வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இவை யாவும் புத்தகத்தின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் மட்டுமே. மேலும் சில உள்ளார்ந்த வினாக்கள் எவையும் இங்கு சேர்க்கப்படவில்லை என்பதனை நினைவில் கொள்க.

வினாக்கள் தொகுப்பு

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

குறுவினா – வினாக்கள் தொகுப்பு

குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது?

2. தமிழோவியம் கவிதையில் உங்க்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

4. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை

     அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்- இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள்   

     உணர்த்துவன யாவை?

5. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை  

     எடுத்துக்காட்டுடன் எழுதுக.

6. வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடர்களின் வகைகைளை எழுதுக.

7. . நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடப்புலவியனார் கூறும் வழிகள் யாவை ?

8. அடுத்த தலைமுறைக்கும்  தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

9. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

10. தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களிய அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?

11. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.

12. பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

13. பட்டிமண்டபம், பட்டிமன்றம் - இரண்டும் ஒன்றா? விளக்கம் தருக.

14. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

15. நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?

16. தீயவை தீய பயத்தலான் தீயவை

        தீயினும் அஞ்சப் படும் - இக்குறளின் கருத்தை விளக்குக.

17. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

       ஒற்றினால் ஒற்றிக் கொளல்- - இக்குறளிலுள்ள நயங்களைக் எழுதுக.

18. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு ?

19. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.

20. மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

        நாலறிவதுவே அவற்றொடு கண்ணே

       ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே - இவ்வடிகளில் தொல்காப்பியார் குறிப்பிடும் மூவறிவு,   நாலறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை ?

21. செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றி திரு.சிவன் கூறுவது யாது?

22. தலைவியின் பேச்சில் வளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

23. நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?

24. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?

25. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

26. இடிகுரல், பெருங்கடல் - இலக்கணக் குறிப்புத் தருக.

27. பாலநிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?

28. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத்தகுந்த த,மிழக வீரர்கள் யாவர்?

29. தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

30. கருக்கொண்ட பச்சைப்பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

31. ‘டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ என்ற  முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

32. ‘பகுத்தறிவு’ என்றால் என்ன?

33. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

 வினா - விடைகள்

மாணவர்கள் மேற்கண்ட வினாத்தொகுப்பினை ஒரு தாளில் எழுதிக் கொண்டப்பின் ஒர் ஏட்டில் இந்த வினாக்களுக்கான விடைகளை எழுதிக் கொள்ளவும்.  ஏன் PDF வடிவம் கொடுக்கப்படவில்லை என்றால் பல மாணவர்கள் அதனை நகல் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு எழுதுவும் பழக்கம் முற்றிலும் கைவிட்டு விட்டார்கள். முன்னர் விழாக்காலங்களில் இருந்த வாழ்த்து மடல் செய்தி அனுப்பும் பழக்கம் வழக்கொழிந்து போனதற்கு இன்றைய முகநூல், புலனம், மற்றும் இன்னும் பிற சமூக வலைதளங்கள் தான். இதனால் மாணவர்களுக்கு  எழுதும் பழக்கம் குறைந்து விடுகிறது. நாளடைவில் எழுத்துகளே அடையாளம் தெரியாத வண்ணம் ஆகிவிடுகிறது. இன்று பல மாணவர்கள் எழுத்துப் பிழையுடன் எழுதுவதை ஆசிரியர்கள் பலரும் கூறுவதை நானும் கூறி இருக்கிறேன். இதன் காரணம் சரியான எழுத்துப் பயிற்சி இன்மை என்பதே. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பது போல தினமும் எழுத்துப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  எழுத்துப் பயிற்சி மாணவர்களுக்கு வர வேண்டும் என்ற காரணத்திற்காக தான் PDF வடிவில் இந்த விடைகள் கொடுக்கப்படவில்லை.

 வினா - விடைகள்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

குறுவினா

குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது?

               நான் பேசும் மொழி தமிழ். இது திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

 

2. தமிழோவியம் கவிதையில் உங்க்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

               “விரலை மடக்கியவன் இசையில்லை-எழில்

               வீணையில் என்று சொல்வதுபோல்”- என்ற அடிகள் என்னை மிகவும் ஈர்த்தன. விரலை மடக்கிக் கொண்டு வீணையில் இசையில்லை என்று சொல்வதுபோல் தமிழில் புதுமைகளை படைக்காமல் குறை சொல்லிக் கொண்டிருக்ககூடாது என்கிறார்

 

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

               கண்ணி - இரண்டு இரண்டு பூக்களாக வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெய®. அதுபோல், இரண்டு இரண்டு அடிகளாக எதுகையோடு பாடப்படும் செய்யுள் கண்ணி எனப்படும்

 

4. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை

     அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்- இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள்   உணர்த்துவன யாவை?

               அகப்பொருளும் புறப்பொருளும் இலக்கியங்களின் பாடுபொருள்களாகும்.

 

5. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை   எடுத்துக்காட்டுடன் எழுதுக.

               செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் :

 உண், போனது

கோவலன் கொலையுண்டான் ,  பணம் காணாமல் போனது.

 

6. வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடர்களின் வகைகைளை எழுதுக.

               வீணையோடு வந்தாள் - மூன்றாம் வேற்றுமைத் தொடர்

               கிளியே பேசு                          -  விளித்தொடர்

 

7. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடப்புலவியனார் கூறும் வழிகள் யாவை ?

               நிலம் குழிந்த இடமெங்கும் நீர்நிலைகளைப் பெருகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.


8. அடுத்த தலைமுறைக்கும்  தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

·  மரங்களை நட்டு மழைவளம் பெருக்க வேண்டும்

·  மழைநீரைச் சேமிக்க வேண்டும்.

 

9. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

   மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு, மாடு விடுதல், மாடு பிடித்தல்.

 

10. தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களிய அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?

·  நம் முன்னோர்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிந்து கொள்ளவும்

·  கடந்த கால வரலாற்றிய அறிந்துகொள்ளவும்  அகழாய்வு செய்ய வேண்டியது அவசியம்.


11. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.

·  கலித்தொகை                                     -  காளைகளின் பாய்ச்சல்

·  சிலப்பதிகாரம்                                    - ஏறுகோள்

·  புறப்பொருள் வெண்பாமாலை              -  ஏறுகோள்

·  கண்ணுடையம்மன் பள்ளு    - எருதுகட்டி

 

12. பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

·  இடம் : மணிமேகலை - விழாவறை காதை

·  பொருள் : விழாக்கள் நிறைந்த மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் உள்ள பழைய மணலை மாற்றுங்கள்; புதிய மனலைப் பரப்புங்கள்.

 

13. பட்டிமண்டபம், பட்டிமன்றம் - இரண்டும் ஒன்றா? விளக்கம் தருக.

   இரண்டும் ஒன்றுதான். பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கியவழக்கு. ஆனால் இன்று நடைமுறையில்  பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகின்றனர். பேச்சுவழக்கையும் ஏற்றுக்கொள்கிறோம்.

 

14. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

·  சேலம், கருவந்துறை

·  கரிக்கையூர்

·  கல்லூத்து மேட்டுப்பட்டி

·  சித்திரக்கல் புடவு


15. நிலம் போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?

   தன்னைத் தோண்டுபவரையும் நிலமானது தாங்குகிறது. அதுபோல, நம்மை இகழ்பவரிடமும் பொறுமை காக்க  வேண்டும்.

16.. தீயவை தீய பயத்தலான் தீயவை

        தீயினும் அஞ்சப் படும் - இக்குறளின் கருத்தை விளக்குக.

               தீய செயல்கள் தீமையையே தரும். அதனால் அவற்றைத் தீயைவிடக் கொடியதாக எண்ணி விலக்க வேண்டும்.

17. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

       ஒற்றினால் ஒற்றிக் கொளல்- - இக்குறளிலுள்ள நயங்களைக் எழுதுக.

               மோனை : ற்றொற்றி- ற்றினால்

               எதுகை   - ஒற்றொற்றி- ஒற்றினால் - மற்றுமோர்

18. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு ?

               செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.

19. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.

               கூட்டுப்புழு தன்னைப் பொறுமையாய் அடக்கிகொண்டு பட்டாம்பூச்சியாய் மாறுகிறது, அதுபோல நாமும் பொறுமை, அடக்கம் ஆகியவற்றைக் கொண்டிருந்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும்.

20. மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

        நாலறிவதுவே அவற்றொடு கண்ணே

       ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே - இவ்வடிகளில் தொல்காப்பியார் குறிப்பிடும் மூவறிவு,  நாலறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை ?

               மூவறிவு உயிர்கள் : கரையான், எறும்பு  முதலியன

               நாலறிவு உயிர்கள்  - நண்டு, தும்பி முதலியன

               ஐந்தறிவு உயிர்கள்  - பறவை, விலங்கு

21. செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றி திரு.சிவன் கூறுவது யாது?

               சித்தாரா - இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும். அதைப் பயன்படுத்தி, வாகனத்தின் செயல்பாடு  எப்படி  இருக்கும் என்பதை முங்கூட்டியே கணிக்கலாம்.

22. தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

               தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் பெண்கல்வி ஆகும்.

23. நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?

               திருக்குறள், நீதிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள்

24. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?

               குழந்தைத் திருமணத்தைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது.

25. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

               முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலாக இருந்தது.

26. இடிகுரல், பெருங்கடல் - இலக்கணக் குறிப்புத் தருக.

·                  இடிகுரல்                   -  வினைத்தொகை

·                  பெருங்கடல்             -  பண்புத்தொகை

 

27. பாலநிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?

               சிறுவர்கள் பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு கோலினால் அடித்தனர். அந்தச் சத்தம் கேட்டுப் பருந்துகள் அச்சத்துடன் பறந்தன.

 

28. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத்தகுந்த த,மிழக வீரர்கள் யாவர்?

               ஜானகி, இராஜாமணி, கேப்டன் இலட்சுமி, சிதம்பரம் லோகநாதன்

 

29. தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

               தாய்நாட்டை எதிரிகளிடமிருந்து காக்க, இராணுவப் பணியையே விரும்புவேன்.

 

30. கருக்கொண்ட பச்சைப்பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

               கருக்கொண்ட பச்சைப்பாம்பு நெற்கதிர்களுக்கு உவமையாக்கப்பட்டுள்ளது.

 

31. ‘டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ என்ற  முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

               நேதாஜியால் 1943 ஆம் ஆண்டு ‘டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ என்ற முழக்கம் சிங்கப்பூரில் செய்யப்பட்டது.

 

32. ‘பகுத்தறிவு’ என்றால் என்ன?

               எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி, ஏன்? எதற்கு, எப்படி? என்று கேள்விகள் கேட்பது பகுத்தறிவு எனப்படும்.

 

33. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

               அசை இரண்டு வகைப்படும். அவையாவன நேரசை, நிரையசை.      



 

 

நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post