மாதிரி
முழு ஆண்டுத் தேர்வு-1– 2026
மொழிப்பாடம் – தமிழ்
வகுப்பு : 9
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
குறிப்புகள் : I ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
II) கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
அ) சரியான விடையைத் தேர்வு
செய்க. 15×1=15
1. பின்வருவனவற்றில்
அளபெடை இடம் பெறாத தொடர் எது?
அ) குக்கூஉ எனக் குயில் கூவியது ஆ) கொக்கரக்கோஒ
எனச் சேவல் கூவியது
இ) அண்ணாஅ என அழைத்தான் ஈ) ஓடி வா ஓடி வா
2. சரியான
விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று -
பெரியார் உயிர் எழுத்துகளில் ’ஐ’ என்பதனை ’அய்’ எனவும், ’ஒள’ என்பதனை
’அவ்’ எனவும் சீரமைத்தார்.
காரணம் – சில
எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
என்று எண்ணினார்.
அ)
கூற்று சரி,
காரணம்
தவறு ஆ) கூற்று, காரணம்
இரண்டும் சரி
இ)
கூற்று,
காரணம்
இரண்டும் தவறு ஈ) கூற்று தவறு, காரணம்
சரி
3. கல்வி
இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
அ) நஞ்சை நிலம் ஆ) களர் நிலம் இ) உவர் நிலம் ஈ) புஞ்சை நிலம்
4. தீரா
இடும்பை தருவது எது?
அ.
ஆராயாமை,
ஐயப்படுதல்
ஆ.
குணம்,
குற்றம்
இ.
பெருமை,
சிறுமை ஈ. நாடாமை, பேணாமை
5. பொருத்தமான விடையைத் தேர்க.
அ) நீரின்று அமையாது உலகு - திருவள்ளுவர்
ஆ) நீரின்று அமையாது யாக்கை - ஓளவையார்
இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
அ) க,௩ ஆ) ௨ , ௩ இ) க,௨ ஈ)
க, ௨ , ௩
6. கீழ்க்காண்பனவற்றுள் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின்
சரியான குழுவினைக் கண்டறிக.
அ)
நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், பண்டித ரமாபாய்
ஆ)
நப்பசலையார், பொன்முடியார், நீலாம்பிகை அம்மையார், ஒளவையார்
இ) நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார்,
பொன்முடியார், ஒளவையார்
ஈ)
நக்கண்ணையார், ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், மூவலூர் இராமாமிர்தம்
7. ஒன்றறிவதுவே
உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக்
குறிக்கிறது?
அ)
நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ) கேட்டல் ஈ) காணல்
8. பழமொழியை நிறைவு
செய்க. :கற்றோருக்குச்
சென்ற ___________
அ) பயில் ஆ) சொல்லாடம் செய்யாதே இ) இடமெல்லாம்
சிறப்பு ஈ) மூன்றுநாள்
9. மரபு பிழையற்றத் தொடரைத் தேர்க________
அ) இல்லத்தின்
அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
ஆ) கயல்
பானை வனையக்
கற்றுக் கொண்டாள் .
இ) நேற்று
தென்றல் காற்று அடித்தது.
ஈ) தென்னை
மட்டையிலிருந்து நார் எடுத்தார்
10. ‘ஒந்து’ என்ற
கன்னடச் சொல்லின் தமிழ்ச்சொல்லைத் தேர்க
அ) ஒற்றுமை ஆ) ஒலி இ) ஒன்று ஈ) ஒப்புமை
11.தெற்கு ஆசியாவின்
சாக்ரடீஸ் என அழைக்கப்படுபவர்______
அ) அண்ணா ஆ) கால்டுவெல் இ) பெரியார் ஈ) காமராஜர்
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15)
விடையளிக்க:-
நெறிமருப்பு எருமையின் ஒருத்தல் நீள்இனம்
செறிமருப்பு ஏற்றினம் சிலம்பப் பண்உறீஇப்
பொறிவரி வராலினம் இரியப் புக்குடன்
வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே
12.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ.
பெரிய புராணம் ஆ. சீவக சிந்தாமணி இ. இராவண காவியம் ஈ. குடும்ப விளக்கு
13.
இப்பாடலின் ஆசிரியர் ___________
அ. குடபுலவியனார் ஆ. குழந்தை இ. திருத்தக்கத்
தேவர் ஈ. சேக்கிழார்
14.
கழனி என்ற சொல்லின் பொருள்
அ.
எருமை ஆ. கொம்பு இ. வயல் ஈ. மணம்
15.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்கள்
அ.
எருமை-நீள்இனம் ஆ. வராலினம் – உழுநர்
இ.
கழனி – ஒருத்தல் ஈ. நெறிமருப்பு – செறிமருப்பு
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )
பிரிவு – 1
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
4×2=8
(21 ஆவது வினாவிற்கு
கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)
16. விடைக்கேற்ற
வினா அமைக்க.
அ. சொற்களின் இன்றியமையாத பகுதி வேர்ச்சொல் அல்லது அடிச்சொல் எனப்படும்.
ஆ. மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் ஆவார்.
17. கனவிலும்
கூட இன்னாதது எவர் நட்பு?
18.’ பகுத்தறிவு’ என்றால் என்ன?
19. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
20. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
21. விடல் – என முடியும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
5×2=10
22. காலவாகு
பெயர் – குறிப்பு தருக.
23. ‘ கொடு ‘ என்பது முதல் வினையாகவும் துணை வினையாகவும் அமையுமாறு தொடர்கள்
எழுதுக.
24. விடையைத் தமிழ் எண்களில் எழுதுக
அ) திருக்குறளின் அதிகாரங்கள் ஆ) சைவத் திருமுறைகள்
25. பகுபத
உறுப்பிலக்கணம் தருக. : போக்குக
26. படிப்போம்;
பயன்படுத்துவோம்! அ. Embossing ஆ. Lexicon
27. ‘ மகனே கொடு
‘ – இத்தொடரில் வல்லினம் மிகுமா? விளக்கம் தருக.
குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உவமைத் தொடர்களை
உருவகத் தொடர்களாக மாற்றுக.
அ) மலர்விழி வீணை வாசித்தாள்; கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
ஆ) முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
28. மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
அ) மேடும் பள்ளமும் ஆ) கண்ணும் கருத்தும்
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. பத்தியைப்
படித்து பதில் தருக
நிலம், நீர், காற்று என்பவை மனிதனின் அடிப்படைத்
தேவைகளாகும். இயற்கை நமக்குக் கொடையாகத் தந்திருக்கும் இவற்றை உரிய முறையில் பேணிப்
பாதுக்காக்க வேண்டும். நீரின் இன்றியமையாமையை உணர்ந்த நம் முன்னோர்கள், நீர் நிலைகளை
உருவாக்குபவர்களை “ உயிரை உருவாக்குபவர்கள் “ என்று போற்றினர்.
அ) மனிதனின்
அடிப்படைத் தேவைகள் எவை?
ஆ) நீர்நிலைகளை
உருவாக்குபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
இ) உரிய முறையில்
பேணிப் பாதுக்காக்க வேண்டியவை எவை?
30. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
31. பனியிலும்,
மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து
இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக
பிரிவு – II
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க
வேண்டும்.)
32. ‘ என் சமகாலத்
தோழர்களே ‘ கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
33. தமிழ்விடுதூது
உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.
34. அ) “ காடெல்லாம்
“ எனத் தொடங்கும் பெரிய புராணப் பாடலை அடிமாறாமல்
எழுதுக
(அல்லது )
ஆ) “கல்லிடைப் ” எனத் தொடங்கும் இராவண காவியம்
பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35.எண்ணுப்பெயர், திசைப் பெயர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் விளக்குக.
36. அளவையாகு பெயர்களின் வகைகளை விளக்குக.
37. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – இக்குறட்பாவிற்கு அலகிட்டு
வாய்பாடு தருக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க.
5×5=25
38. அ) பெரியபுராணம்
காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக. ( அல்லது )
ஆ) ஏமாங்கத நாட்டு
வளம் குறித்த வருணனைகளை உங்கள் ஊரின் வளங்களோடு ஒப்பிட்டு எழுதுக.
39. பள்ளி நேரம் முடிவதற்கு
முன்பு வீட்டிற்குச் செல்ல அனுமதி வேண்டி வகுப்பாசிரியர் அவர்களுக்கு கடிதம் எழுதுக. ( அல்லது )
ஆ. வார
இதழ் ஒன்றில் படித்த கவிதையைப்/கதையைப் பாராட்டி அந்த இதழாசிரியருக்கு அஞ்சலட்டையில்
கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41. நாமக்கல்
மாவட்டம், மோகனூரில் வசிக்கும் கணேசன் மகள் ரூபிணி தனது அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில்
ரூபாய் 3000 ஐ செலுத்த விரும்புகிறார். அவருக்குரிய விண்ணப்பம் நிரப்புக.
42. இலக்கிய நயம்
பாராட்டுக
கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்
கிழக்கு வானம் தூரமில்லை
முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்
பூமி ஒன்றும் பாரமில்லை - கவிஞர். வைரமுத்து ( அல்லது
)
ஆ) மொழிபெயர்க்க:-
Once Buddha and his disciples were
thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished
washing their clothes. Buddha asked his disciples to take a little rest there
by the tree. After half an hour the disciples noticed that the water was very
clear. Buddha said to them,” You let the water and the mud be settled down on
its own. Your mind is also like that. When it is disturbed, just let it be.
Give a little time. It will settle down on its own. We can judge and take best
decisions of our life when we stay calm.”
குறிப்பு : செவி
மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க.
(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை]
மானாமதுரை ஒரு அழகான ………
நீண்டவயல்களும் ………………களும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய
கோவில் குளத்தில் எங்கும் …………பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் ………… வீசிட சோலைப்
…….களின் ……………கேட்போரைப்…………………………..அடையச் செய்கிறது.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும்
விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) ஏறுதழுவுதல்
தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
( அல்லது )
ஆ) மொழியிலும் இலக்கியத்திலும்
பெரியார் வலியுறுத்திய சீரமைப்புகளை விளக்குக.
44. அ) புலம் பெயர்ந்த
மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை
வாயிலாக விவரிக்க. ( அல்லது )
ஆ) ‘ தாய்மைக்கு வறட்சி இல்லை ‘ என்னும்
சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.
45. அ) குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதுக.
அ) முன்னுரை – சிற்பக்கலை
– வகைகள் – தனிச்சிறப்புகள் – நாம் செய்ய வேண்டியவை - முடிவுரை ( அல்லது )
ஆ)
‘ எனது பயணம் ‘ என்னும் தலைப்பில் உங்களின் அனுபவங்களை வருணித்து
எழுதுக
.png)