பத்தாம் வகுப்புதமிழ்புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்உள் வினாக்கள்கூடுதல் – ஒரு மதிப்பெண் வினாக்கள்
இயல்
– 1
1. துரை.மாணிக்கம் என்ற இயற்பெயர்
கொண்டவர் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
2. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்
எந்நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்துள்ளது? – திருக்குறள் மெய்ப்பொருளுரை
3. சாகும் போது தமிழ்படித்துச்
சாக வேண்டும் எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் எனக் கூறுபவர் – க.சச்சிதானந்தன்
4. “ நாடும் மொழியும் நமதிரு
கண்கள் “ எனக் கூறுபவர் – பாரதியார்.
5. ஒரு நாட்டின் வளமும், அங்கு
வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன எனக் கூறுபவர் – பாவாணர்.
6. மொழி ஞாயிறு எனப் போற்றப்படுபவர்
- பாவாணர்
7. உலகத்திலேயே ஒரு மொழிக்காக
உலக மாநாடு நடத்திய முதல் நாடும், முதல் மொழியும் எது? – மலேசியா, தமிழ்
8. பன்மொழிப் புலவர் என அழைக்கப்படுபவர்
– கா.அப்பாத் துரையார்
9. அடிமரத்தினின்று பிரியும்
மாபெரும் கிளை – கவை
10. காய்ந்த தாள், தோகையைக்
குறிப்பது – சண்டு
11. காய்ந்த இலையைக் குறிப்பது
– சருகு
12. தாவரங்களில் விளையும் தானியங்கள்
– மணி
13. பனையின் இளநிலை – மடலி
( அ ) வடலி
14. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி
அதன் தலைவராக இருந்தவர் - பாவாணர்
15. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர்
– லிசுபன்
16. 1554 இல் முதன் முதலாக தமிழ்மொழியில்
மொழிபெயர்க்கப்பட்ட நூல் – கார்டிலா
17. “ முத்தையா “ என்னும் இயற்பெயர்
கொண்டவர் – கண்ணதாசன்
18. கண்ணதாசன் திரைப்பட பாடலாசிரியரான
திரைப்படம் – கலங்காதிரு மனமே
19. கண்ணதாசனுக்கு சாகித்திய
அகாதெமி விருது பெற்று தந்த நூல் – சேரமான் காதலி
20. திரைப்படப்பாடல்கள் வழியே
மெய்யிலை மக்களிடையே கொண்டுச் சேர்த்தவர் – கண்ணதாசன்
21. நதிவெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றமில்லை எனப் பாடுபவர் – கண்ணதாசன்
22. ஓர் எழுத்து தனித்தோ,பல
சேர்த்துகள் சேர்ந்தோ பொருள் தருமாயின் அது – சொல்
23. ஒரு வினைமுற்று பெயரின்
தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது
– வினையாலணையும் பெயர்.
24. கூட்டப் பெயரைக் காண்க
:- ஆடு - ஆட்டு மந்தை
25. நேற்று என்னைச் சந்தித்தார்.
அவர் என் நண்பர் – இத்தொடரில் உள்ள வினைமுற்றிற்கான வினையாலணையும் பெயரைத் தேர்க - சந்தித்தவர்.
26. பசுப்போல் சாந்தமும்
புலி போல் தீரமும் யானை போல் உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்-
இத்தொடரில் தடித்த எழுத்துகளில் உள்ள சொற்களுக்கு அதே பொருளைத் தரகூடிய வேறு சொற்களைத்
தேர்க – ஆ , அமைதி, வேங்கை , வீரமும், களிறு
27. எறும்புந்தன் கையால் எண்
சாண் – இத்தொடரில் காணும் எண்ணுப்பெயரைத் தேர்க – எண்
28. HOMOGRAPH – இச்சொல்லின்
கலைச்சொல்லாக்கம் தருக – ஒப்பெழுத்து
