🔥 Public Exam 2026: தமிழ் தேர்வில் 90+ பெற இந்த வினாத்தாளை பார்த்தாலே போதும்-pdf

 


பத்தாம் வகுப்பு

சிறப்பு பொதுத் தேர்வு – வினாத்தாள்- 2026

 மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                              மதிப்பெண் : 100

அறிவுரைகள் :

1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்  உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்    

பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

            ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்

                வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )             

           i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்

   குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                             15×1=15

1. சித்திரை, வைகாசி மாதங்களை ____________ காலம் என்பர்.

அ) முதுவேனில்        ஆ) பின்பனி       இ) முன்பனி           ஈ) இளவேனில்

2. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

அ) ஒரு சிறு இசை   ஆ) முன்பின்     இ) அந்நியமற்ற நதி           ஈ) உயரப் பறத்தல்

3. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

   கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும் அணி

அ) உவமை அணி                       ஆ) தீவக அணி  

இ) வஞ்சப்புகழ்ச்சி அணி               ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி

4. கூற்று 1 : போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

   கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது

அ) கூற்று 1 சரி 2 தவறு             ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு

இ) கூற்று 1 தவறு 2 சரி               ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது.

அ) வேற்றுமை உருபு       ஆ) எழுவாய்          இ) உவம உருபு     ஈ) உரிச்சொல்

6. வேர்க்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ____

) குலைப்பெயர் வகை             ) மணிப்பெயர் வகை  

) கிளைப்பெயர் வகை              ) இலைப்பெயர் வகை

7. பழமொழியை நிறைவு செய்க:- அளவுக்கு ______

அ) மூன்று நாள்      ஆ) மீறினால் அமுதமும் நஞ்சு    

இ) பண்டம் குப்பையிலே                        ஈ) உள்ளளவும் நினை

8.இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு வழங்கியவர்.

அ) சந்தாசாகிப்  ஆ) சுல்தான்       இ) நாகூர் ரூமி          ஈ) சீதக்காதி

9. “ இந்த கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர் “ என்று கூறினான். இத்தொடரில் இடம் பெற்றுள்ள வழுவமைதியைக் காண்க

அ) மரபு வழுவமைதி                    ஆ) இட வழுவமைதி         

இ) கால வழுவமைதி                   ஈ) திணை வழுவமைதி

10. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

அ) நிலத்திற்கேற்ற விருந்து                 ஆ) இன்மையிலும் விருந்து         

இ) அல்லிலும் விருந்து                        ஈ) உற்றாரின் விருந்து

11. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….

          அ) உழவு,மண்,ஏர்,மாடு    ஆ) மண்,மாடு,ஏர்,உழவு   

இ) உழவு,ஏர்,மண்,மாடு     ஈ) ஏர்,உழவு,மாடு,மண்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“ கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்

 பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்

 பொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன்

வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல்

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. கம்பராமாயணம் ஆ.முல்லைப்பாட்டு  இ. திருவிளையாடற் புராணம்       ஈ. சிலப்பதிகாரம்

13. இப்பாடலை இயற்றியவர்

அ. இளங்கோவடிகள்   ஆ. பரஞ்சோதி முனிவர்      இ. கீரந்தையார்  ஈ. அதிவீரராம பாண்டியர்

14. இப்பாடலில் ‘ பனுவல் ‘ என்பதன் பொருள்

அ) செய்யுள்    ஆ. கவிஞர்        இ. நூல்    ஈ. மாலை

15. ‘ நட்பினன் ‘ என்பதனை உணர்த்தும் சொல்லைத் தேர்க.

அ. பனுவல்       .கேள்வியினான்   இ.கேண்மையினான்   ஈ. தாரனை

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                        4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ.  உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் பாவாணர்.

ஆ. பெருநாவலர்,முதற்பாவலர்,பொய்யில்புலவர் முதலிய சிறப்புப் பெயர்களால் திருவள்ளுவர் குறிக்கப்படுகிறார்.

17.  மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

18. சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?

19. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

20. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

21.  தது – என முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                               5×2=10

22. சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக

23. பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

          அ) கொஞ்சம் அதிகம்.  ஆ) மறக்க நினைக்கிறேன்

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : அறியேன்

25. படிப்போம்; பயன்படுத்துவோம்!

அ) Conversation                           ஆ) House Warming

26. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

அ ) விடு – வீடு                 ஆ)   கொடு – கோடு

27. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

          அ) இருக்கும் போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை

          ஆ) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொல் எழுதுக.

          அ) கோல்டு பிஸ்கட்                     ஆ) ஈக்வலாக

28. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                   2×3=6

29. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் இடம் சுட்டிப் பொருள் தருக.

30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

         மலேசிய மண்ணில், சுபாஷ் சந்திரபோசின் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு வீரர் ‘மலேயா கணபதி ‘ என்பவர். ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டு இறந்ததை அறிந்து கலைஞர் ‘ கயிற்றில் தொங்கிய கணபதி ‘ என்ற சிறிய கட்டுரை நூலை எழுதிய போது அவருக்கு வயது இருபத்தி இரண்டு. அனைத்து இந்தியர்களிடமும் இருந்த ஆங்கிலேய எதிர்ப்புணர்வு, கலைஞரிடமும் இருந்தது என்பதைக் காட்டும் நூல் இது.

          அ) கலைஞரிடம் இருந்த எதிர்ப்புணர்வைக் காட்டிய நூல் எது?

          ஆ) இந்திய இராணுவத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டு வீரர் யார்?

          இ) கலைஞர் கயிற்றில் தொங்கிய கணபதி என்ற நூலை எழுதும் போது அவருடைய வயது  யாது?

31. “ இன்மையிலும் விருந்தோம்பல் “  குறித்துப் புறநானூற்றுப் பாடல்  தரும் செய்தியை எழுதுக..

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                  2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

33. சேர,சோழ,பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

34. அ) “ மாற்றம் “ எனத் தொடங்கும்  காலக்கணிதம் பாடலை  எழுதுக. (அல்லது )

      ஆ) “ அள்ளல் ” எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரம் பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                               2×3=6

35.தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

     மேவன செய்தொழுக லான் – இக்குறளில் இடம் பெற்றுள்ள அணியை விளக்குக.

36. தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைத் தருக.

37. “அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

        பேணித் தமராக் கொளல்“    - இக்குறளை அலகிட்டு வாய்பாடு தருக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                      5×5=25

38. அ)  முயற்சியின் சிறப்புகளை ஆள்வினை உடைமை என்னும் அதிகாரம் வழியாக திருவள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக. ( அல்லது )

ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக

39. அ) புதியதாக திறன்பேசி வாங்கியிருக்கும் உன் தங்கைக்கு அதனை பயன்படுத்தும் விதம் குறித்தும், பாதுகாப்பாக பயன்படுத்துக் குறித்தும் உன் தங்கைக்குக் கடிதம் எழுதுக. ( அல்லது )

ஆ. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதுக

40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

41. எண்-6,பாரதியார் தெரு, காமராஜர் நகர், சேலம் மாவட்டத்தில் வசிக்கும் தமிழரசுவின் மகன் முகிலன். எம்.எஸ்.சி. முடித்து, கணினிப் பயிற்றுநர் பணி வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புகிறார். தேர்வர் தன்னை முகிலனாகப் பாவித்து பணிவாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியலை நிரப்புக.

42. அ)  மாணவ  நிலையில் பின்பற்றப்படும் அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பட்டியலிடுக.   ( அல்லது )

ஆ) நயம் பாராட்டுக:-

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

          தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

  ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

          உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

  வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

          மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

  தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

          தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே    - கா.நமச்சிவாயர்

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

சங்க பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன.  ‘ அறநெறி முதற்றே அரசின் கொற்றம், அறன் நெறி பிழையாத் திறனறி மன்னர்’ மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.நீர் நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமைச் சொல்லப்பட்டது.

( I ). சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் எவற்றை முதன்மைப்படுத்தியது?

( ii ). அறத்தின் குறியீடுகள் யாவை?

( iii ) அரசனின் செங்கோல் பற்றி பாடல்கள் வலியுறுத்துவது எதனை?

( iv ) அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது எது?

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

                                                        பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                       3×8=24

43.அ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.(அல்லது)

ஆ) உங்களுக்குப் பிடித்த/ நீங்கள் படித்த அறிஞர் ஒருவரின் வாழ்க்கை நிகழ்வைத் தன் வரலாறாக எழுதுக.

44.அ) “ பிரும்மம் “ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விளக்குக.      (அல்லது)

ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.

45.அ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம் மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.               (அல்லது)

ஆ)  குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக.

 பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக

          குறிப்பு – நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர்.

 click here to get pdf

click here


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post