சேலம் – முதல் இடைத் மாதத் தேர்வு
-2026
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
|
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 10 |
|||
|
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
|
1. |
இ) சிற்றிலக்கியம் |
1 |
|
|
2. |
ஈ) புலரி |
1 |
|
|
3. |
இ) மலையாளம் |
1 |
|
|
4. |
ஆ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் |
1 |
|
|
5. |
இ) வளர்க |
1 |
|
|
6. |
இ) புறநானூறு |
1 |
|
|
7. |
அ) குடபுலவியனார் |
1 |
|
|
8 |
ஆ) உடம்பு |
1 |
|
|
எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்க:-
6×2=12 |
|||
|
9 |
திராவிட
மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. |
2 |
|
|
10 |
இரண்டிரண்டு
அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும்
செய்யுள் வகை. |
2 |
|
|
11 |
தமிழ் மலையாளம் கன்னடம் துளு |
2 |
|
|
12 |
இரண்டு வகைப்படும்.
1. உயிரளபெடை 2.ஒற்றளபெடை |
2 |
|
|
13 |
உவர்மண்
நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை |
2 |
|
|
14 |
குளம், குட்டை,
ஏரி, கிணறு |
2 |
|
|
15 |
அ) இலக்கியம் ஆ) ஒலிப்பியல் |
2 |
|
|
16 |
அ) பயில் ஆ) இடமெல்லாம் சிறப்பு |
2 |
|
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி 4×3=12 |
|||
|
17 |
Ø தமிழ், அமுதை விட மேலானது. Ø இனிக்கும் சுவையான கனியை விட சிறப்பானது Ø முத்தமிழாகவும் விளங்குகிறது. Ø அறிவுக்கு தேனாகவும் விளங்குகிறது. Ø தமிழின் சிறப்பு அறிந்து குறவஞ்சி, பள்ளு என நூல்கள்
இயற்றி சிறப்புச் செய்துள்ளனர் புலவர்கள். Ø தாழிசை, துறை , விருத்தம் என மூவகை பாவினங்களைக்
கொண்டுள்ளது தமிழ்மொழி Ø என்றும் சிந்தா மணியாய் தமிழ் விளங்குகிறது. |
3 |
|
|
18 |
Ø மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பும் போது நீரினைத் தூர் வார நீந்துபவர் கழிமுகத்தை அடைந்து, குமிழித்தாம்பினைத்
தூக்குவர் Ø நீரோடி துளையிலுருந்து நீரும், சேறோடி துளையிருந்து சேற்று நீரும் வெளியேறும். Ø
நீரைத் தூர் வார வேண்டி பயன்படுத்தப்பட்டது. |
3 |
|
|
19அ |
தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன்
முத்தமிழே – புத்திக்குள் உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம் உண்டு
விளம்பக்கேள் – மண்ணில் குறம்என்றும்
பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு உறவுஎன்று
மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம் வந்துஎன்றும் சிந்தா
மணியாய் இருந்த உனைச் சிந்துஎன்று சொல்லிய
நாச்சிந்துமே* -யார் என அறியப்படவில்லை |
3 |
|
|
19ஆ |
காடெல்லாம் கழைக்கரும்பு
காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை
வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்* - சேக்கிழார் |
3 |
|
|
20 |
Ø அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்குகிறது. Ø அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின்
மீது பாய்கிறது. Ø இந்த காட்சி நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்றது. Ø வானவில்லை ஒப்பிட்டுப் பெரிய புராணம் கூறும் இயற்கை எழிலின் செய்தி. |
3 |
|
|
21 |
மூன்று
– தமிழ் மூணு – மலையாளம் மூடு – தெலுங்கு மூரு – கன்னடம் மூஜி – துளு |
3 |
|
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விரிவாக விடையளி 2×5=10 |
|||
|
22 |
குறிப்புச் சட்டம் முன்னுரை தமிழின் தனித்தன்மைகள் முடிவுரை முன்னுரை
: காலத்தால்
அழியாதது , காலம் தோன்றுவதற்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ். அத்தகைய தமிழ்மொழியானது
காலந்தோறும் தன்னை புதுபித்துக் கொள்ளும் திறனும் உண்டு. அத்தகைய தமிழ் மொழியின்
தனித்தன்மைகளை இக்கட்டுரை வாயிலாக காணலாம். தமிழின்
தனித்தன்மைகள்: “ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல்
இனிதாவது எங்கும் காணோம் “ என்னும் பாரதியின் கூற்று தமிழின் சிறப்பை பறைசாற்றுகிறது. Ø தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழி. காலத்தால் முன் தோன்றியது. Ø தமிழ்மொழி, திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக விளக்குகிறது Ø உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாக பேசவும் ,எழுதவும் கூடிய மொழியாக இன்று
தமிழ் உள்ளது. Ø அனைத்து நிலைகளுக்கும், அனைத்து பொருட்களுக்கும் தமிழில் பெயர் உண்டு. Ø இன்று கணினியில் வலம் வந்து உலக நாடுகள் எல்லாம் அறிந்த மொழியாக மாறி வருகிறது. Ø தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்களும் உண்டு. Ø பலசொற்களுக்கு ஒரு பொருள் தரக் கூடிய வளமும் தமிழில் உண்டு. Ø இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன. முடிவுரை : “ தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை
செய்தல் வேண்டும்” என்னும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப தமிழின் தனித்தன்மையை
உணர்ந்து உலகம் முழுமைக்கும் தமிழைப் பரவச் செய்ய நம்மால் முடிந்த அளவு முயற்சிகளை
செய்ய வேண்டும். |
5 |
|
|
23 |
முன்னுரை நீரும்,
வேளாண்மையும் நீர்
சேமிப்பு நீர்
நிலைகள் நீரும்
தமிழும் முடிவுரை முன்னுரை “ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் “ என இயற்கையை வாழ்த்திப்
பாடியுள்ளார் இளங்கோவடிகள். “ நீரின்று அமையாது உலகம் “ என திருவள்ளுவர் கூறியுள்ளார்.
உயிர்கள் உயிர் வாழ உணவு மிக முக்கியம். அந்த உணவுக்கு அடிப்படை தேவையான நீரின் அவசியம்
குறித்து இக்கட்டுரையில் காண்போம். நீரும்
வேளாண்மையும் ·
மனித வாழ்வின் அடிப்படைத் தேவை உணவு,
உடை, உறைவிடம். ·
வேளாண்மை நீரை அடிப்படையாகக் கொண்டது. ·
மழை உழவுக்கு உதவுகிறது. ·
விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. ·
நிலமும், மரமும் உயிர்கள் நோயின்றி
வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன – மாங்குடி மருதனார். நீர்
சேமிப்பு · நீரை அனைவரும் சேமிக்க வேண்டும். · மழை
நீர், ஆற்றுநீர், ஊற்று நீர் ஆகியவற்றைச் சிறிய, பெரிய நீர் நிலைகளில் சேகரிக்க
வேண்டும். · அதனை
வேளாண்மைக்குப் பயன்படுத்த வேண்டும். நீர்
நிலைகள் · ஏரிகளும்
குளங்களும் பாசனத்திற்கான அமைப்புகள் · பாண்டி
மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என அழைப்பர். · மணற்பாங்கான
இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு உறைக் கிணறு. · மக்கள்
பருகுநீர் உள்ள நீர் நிலை ஊருணி · கரிகால்
சோழன் கட்டிய
கல்லணையே விரிவான பாசனத்திட்டமாக இருந்துள்ளது. நீரைப்
பற்றி தமிழ் ·
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும்
உடையது அரண் – திருவள்ளுவர். · இக்குறட்பாவில்
நீருக்கே முதலிடம் தந்துள்ளார் திருவள்ளுவர். · உணவெனப்படுவது
நிலத்தொடு நீரே – புறநானூறு.
நீரின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறது. முடிவுரை ஒரு நாட்டின் வளர்ச்சிப்போக்கை நெறிப்படுத்துவதே
நீர் மேலாண்மை தான். தமிழர்கள் தண்ணீரின் தேவையை நன்றாகப் புரிந்துகொண்டு, நீர் மேலாண்மையை
அறிவியல் நோக்கில் கட்டமைத்தனர். இன்றைய தலைமுறையினர் நாம் அவற்றைப் புரிந்துக் கொண்டு
அவற்றை பாதுகாக்க வேண்டும் |
5 |
|
|
24 |
ü ஊர்,நாள் ü விளித்தல் ü கடிதச் செய்தி ü இப்படிக்கு ü உறை மேல் முகவரி |
5 |
|
|
ஏதேனும்
ஒன்றனுக்கு விடையளிக்க. 1×8=8 |
|||
|
25அ |
குறிப்புச் சட்டம் முன்னுரை இலங்கை தமிழ்க் குடும்பம் அகதிமுகாம் உயிர் வாழும் திறமை இலக்கியங்களில் புலம் |
8 |
|
|
25ஆ
|
முன்னுரை கிராமத்தின் நிலை இரயில் நீர் இந்திரா மக்கள் தேடல் திரும்பிய இந்திரா முடிவுரை |
8 |
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
இளந்தமிழ் வழிகாட்டிக் குழு
