பத்தாம் வகுப்பு தமிழ்
இயல் 1–4 — மதிப்பீட்டு வினாக்கள்
தலைப்பு வாரியாக முழுத் தொகுப்பு
📚 பயன்பாடு:
பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் முதல் நான்கு இயல்களில் இடம்பெறும் மதிப்பீட்டு வினாக்கள், மொழிப்பயிற்சிகள் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் தலைப்பு வாரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் முதல் நான்கு இயல்களில் இடம்பெறும் மதிப்பீட்டு வினாக்கள், மொழிப்பயிற்சிகள் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் தலைப்பு வாரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
1. பலவுள் தெரிக
1. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
2. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது –
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
3. ‘எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் –
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
4. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே –
அ) பாடிய; கேட்டவர்
ஆ) பாடல்; பாடிய
இ) கேட்டவர்; பாடிய
ஈ) பாடல்; கேட்டவர்
5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது –
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
6. பரிபாடல் அடியில் ‘விசும்பில், இசையில்’ ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
7. கீழ்க்காணும் செய்திகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
செய்தி 1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம்.
செய்தி 3: இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
8. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
கொண்டல் – கிழக்கு
கோடை – மேற்கு
வாடை – வடக்கு
தென்றல் – தெற்கு
கொண்டல் – கிழக்கு
கோடை – மேற்கு
வாடை – வடக்கு
தென்றல் – தெற்கு
9. ‘மகிழுந்து வருமா?’ என்பது –
அ) விளித்தொடர்
ஆ) எழுவாய்த்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) பெயரெச்சத்தொடர்
10. ‘அறிஞருக்கு நூல், அறிஞரது நூல்’ ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது –
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
11. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
12. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது –
அ) சுட்டி
ஆ) கிண்கிணி
இ) குழை
ஈ) சூழி
13. காசிக்காண்டம் என்பது –
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
14. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்தோம்பல் நிலை –
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
15. ‘நன்மொழி’ என்பது –
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
16. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள்
ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
17. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் / இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் –
அ) அமைச்சர், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன், மன்னன்
ஈ) மன்னன், இறைவன்
18. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது –
அ) இட வழுவமைதி
ஆ) பால் வழுவமைதி
இ) திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி
19. இரவீந்திரநாத் தாகூர் ______ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ______ மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காளம்
ஆ) வங்காள, ஆங்கில
இ) வங்காள, தெலுங்கு
ஈ) தெலுங்கு, ஆங்கில
20. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
அ) யாம்
ஆ) நீவிர்
இ) அவர்
ஈ) நாம்
2. குறுவினா
1. ‘பலகை’ என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
2. “மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
4. “கொள்வோர் கொள்க! குறைப்போர் குறைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது.” பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
5. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
6. உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
7. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
8. ‘கட்டுரை படித்த’ – வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.
9. மென்மையான மேகங்கள் வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
10. தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயரிட்டுள்ளனர்?
11. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
12. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
13. செங்கீரை ஆடுதலில் சூட்டப்படும் அணிகலன்கள் யாவை?
14. அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.
15. ‘தண்ணீர் குடி, தயிர்க்குடம்’ ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.
16. “கழிந்த பெரும் கேள்வியினான்...” என்ற பாடலடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?
17. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
18. ‘அமர்ந்தான்’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
19. கொடுக்கப்பட்ட தொடரில் கால வழுவமைதி எவ்வாறு அமைகிறது?
20. கொடுக்கப்பட்ட தொடரில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.
3. சிறுவினா
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
2. இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
3. கொடுக்கப்பட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
4. ‘நீர்’ தன்னைப் பற்றிப் பேசினால் உங்கள் கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
5. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
6. கொடுக்கப்பட்ட பத்தியில் வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.
7. ‘இன்மையிலும் விருந்தோம்பல்’ குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
8. வைத்யநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
9. ‘தனித்து உண்ணாமை’ பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
10. கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிக.
11. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது ஏன்?
12. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
13. கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
14. கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
15. ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
4. நெடுவினா
1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி என்றால் இயம்புவதென் தொழில்
இவைதவறாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
3. புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகள், அடுக்குத்தொடர்கள், ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகியவை புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
4. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
5. “பிரும்மம்” கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
6. கண்ணதாசனின் பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
7. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
8. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
9. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
10. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
11. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அவளுடைய வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்கள் கருத்துகளை விவரிக்க.
12. ‘செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
5. மொழியை ஆள்வோம்
1. ‘மரம்’ என்னும் சொல் பல்வேறு பொருள்களில் இடம்பெறும் தனிப்பாடலைப் படித்துப் பொருள்களைப் பொருத்துக.
2. நெல்சன் மண்டேலா கூறிய மொழி தொடர்பான ஆங்கிலக் கருத்தைத் தமிழில் மொழிபெயர்க்க.
3. ரீட்டா மே பிரவுன் கூறிய மொழி தொடர்பான ஆங்கிலக் கருத்தைத் தமிழில் மொழிபெயர்க்க.
4. “தேணிலே ஊரிய செந்தமிழின்…” பாடலில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
5. கல், புல், பழம், ஆடு ஆகியவற்றுக்கான கூட்டப்பெயர்களைக் கண்டறிக.
6. வினைமுற்றுகளை வினையாலணையும் பெயராக மாற்றி தொடர்களை இணைக்க.
7. ஒரே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மாற்றி எழுதுக.
8. ‘சான்றோர் வளர்த்த தமிழ்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
9. கொடுக்கப்பட்ட பாடலைப் படித்து திரண்ட கருத்து, பொருள் நயம், சொல் நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவற்றுடன் நயம் பாராட்டுக.
10. இயற்கை–செயற்கை, கொடு–கோடு, கொள்–கோள், சிறு–சீறு, தான்–தாம், விதி–வீதி ஆகியவற்றைக் கொண்டு தொடர்கள் அமைக்க.
11. கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பகுதியைத் தமிழில் மொழிபெயர்க்க.
12. பூக்கள் பற்றிய இலக்கியச் செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
13. ‘மரம் இயற்கையின் வரம்’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
14. ‘பாரதியின் வசனநடை – சிட்டுக்குருவி’ என்ற பத்தியைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க.
15. கொடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு புதிரை விடுவிக்க.
16. நயமிகு தொடர்களுக்குப் பொருத்தமான தலைப்புகளைத் தேர்ந்தெடுக்க.
17. கொடுக்கப்பட்ட காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
18. பணி வாய்ப்பு வேண்டித் தன்விவரப் படிவத்தை நிரப்புக.
19. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டிப் பொது நூலகத்துறை இயக்குநருக்கு கடிதம் வரைக.
20. ‘சர்க்கரைப் பொங்கல்’ பகுதியைப் படித்துச் சுவைக்க.
21. கொடுக்கப்பட்ட ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்க்க.
22. கொடுக்கப்பட்ட பழமொழிகளை நிறைவு செய்க.
23. ‘பழையசோறு’ பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக.
24. கொடுக்கப்பட்ட கருப்பொருளைக் கதையாக்குக.
25. உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
26. கொடுக்கப்பட்ட பாடலைப் படித்து நயம் பாராட்டுக.
27. விடுபட்ட எழுத்துகளை நிரப்பி ஒளிந்துள்ள அறநூலின் பெயரைக் கண்டுபிடிக்க.
28. சிலை–சீலை, தொடு–தோடு, மடு–மாடு, மலை–மாலை, வளி–வாளி, விடு–வீடு ஆகியவற்றை ஒரே தொடரில் அமைக்க.
29. ஊண்–ஊன், திணை–தினை, அண்ணம்–அன்னம், வெல்லம்–வெள்ளம் ஆகியவற்றின் பொருளை அகராதியில் கண்டு எழுதுக.
30. கொடுக்கப்பட்ட காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
31. கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பாடலைத் தமிழில் மொழிபெயர்க்க.
32. கொடுக்கப்பட்ட மொழிபெயர்ப்புப் பகுதியைப் படித்துப் புரிந்துகொள்ள.
33. வேர்ச்சொல்–எழுவாய்த்தொடர்–பெயரெச்சத்தொடர்–வினையெச்சத்தொடர்–விளித்தொடர் அட்டவணையை நிறைவு செய்க.
34. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமைப்படுத்துக.
35. கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக.
36. நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
6. படிப்போம்; பயன்படுத்துவோம்
இயல் 1
Vowel –
Consonant –
Homograph –
Monolingual –
Conversation –
Discussion –
Vowel –
Consonant –
Homograph –
Monolingual –
Conversation –
Discussion –
இயல் 2
Storm – புயல்
Land Breeze –
Tornado –
Sea Breeze –
Tempest –
Whirlwind –
Storm – புயல்
Land Breeze –
Tornado –
Sea Breeze –
Tempest –
Whirlwind –
இயல் 3
Hospitality –
Wealth –
Baby shower –
House warming –
Feast –
Hospitality –
Wealth –
Baby shower –
House warming –
Feast –
இயல் 4
Translation –
Culture –
Human Resource –
Transfer –
Multi media –
Translation –
Culture –
Human Resource –
Transfer –
Multi media –
7. நிற்க அதற்குத் தக
1. இன்சொல் வழி / தீய சொல் வழி
இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
2. புயலின்போது
உங்களையும் குடும்பத்தினரையும் காப்பாற்றும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.
உங்களையும் குடும்பத்தினரையும் காப்பாற்றும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.
3. பாரம்பரிய உணவை விட்டு இளைய தலைமுறை விலகிச் செல்வது குறித்த உரையாடலைப் படித்து சமூக அக்கறையுடனான உங்கள் பதிலை எழுதுக.
4. பள்ளியில் நான் / வீட்டில் நான்
நேரத்தைக் கடைப்பிடித்தல்; வீட்டுப் பணிகளைப் பகிர்தல்; உடன்பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுதல்.
நேரத்தைக் கடைப்பிடித்தல்; வீட்டுப் பணிகளைப் பகிர்தல்; உடன்பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுதல்.
8. செயல்திட்டம்
1. வாழும் பகுதியில் உள்ள ஐந்து பயிர்வகைச் சொற்களுக்கான படத்தொகுப்பு உருவாக்குக.
2. தூய்மையான காற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
3. உணவு, விருந்து சார்ந்த பழமொழிகளையும் விழிப்புணர்வுத் தொடர்களையும் திரட்டி அகரவரிசைப்படுத்தி வகுப்பறையில் காட்சிப்படுத்துக.
4. பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் குறித்த செயல்திட்ட வரைவை உருவாக்கித் தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துக.
9. அகராதியில் காண்க
இயல் 1:
அடவி, அவல், சுவல், செறு, பழனம், புறவு.
அடவி, அவல், சுவல், செறு, பழனம், புறவு.
இயல் 2:
அகன்சுடர், ஆர்கலி, கட்புள், கொடுவாய், திருவில்.
அகன்சுடர், ஆர்கலி, கட்புள், கொடுவாய், திருவில்.
இயல் 3:
ஊண், ஊன், திணை, தினை, அண்ணம், அன்னம், வெல்லம், வெள்ளம்.
ஊண், ஊன், திணை, தினை, அண்ணம், அன்னம், வெல்லம், வெள்ளம்.
இயல் 4:
மன்றல், அடிச்சுவடு, அகராதி, தூவல், மருள்.
இதை PDF ஆக பெற கீழே தோன்றும் DOWNLOAD பட்டனை அழுத்தவும்
மன்றல், அடிச்சுவடு, அகராதி, தூவல், மருள்.
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...
Tags:
CLASS10
