🔥 9ஆம் வகுப்பு-தமிழ் இயல் 1–3 | காலாண்டு தேர்வு-26- MUST READ வினாக்கள்!

 



காலாண்டுத் தேர்வு - 2026

ஒன்பதாம்  வகுப்பு – தமிழ்

புத்தக மதிப்பீடு வினாக்கள் தொகுப்பு / ( இயல் 1 முதல் 3 வரை )

இளந்தமிழ் – வழிகாட்டிக் குழு

பலவுள் தெரிக

இயல் 1

  1. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?
    அ) தமிழ்      ஆ) தெலுங்கு        இ) மலையாளம்      ஈ) கன்னடம்
  2. தமிழ்விடு தூது ________ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
    அ) தொடர்நிலைச் செய்யுள்        ஆ) புதுக்கவிதை
    இ) சிற்றிலக்கியம்                      ஈ) தனிப்பாடல்
  3. பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?
    அ) குக்கூஉ எனக் குயில் கூவியது.    ஆ) கொக்கரக்கோஒ எனச் சேவல் கூவியது.
    இ) அண்ணாஅ என அழைத்தான்.       ஈ) ஓடி வா ஓடி வா.
  4. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! – எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!” – இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் யாவை?
    அ) முரண், எதுகை, அளபெடை           ஆ) இயைபு, அளபெடை, அந்தாதி
    இ) மோனை, எதுகை, இயைபு               ஈ) மோனை, முரண், அந்தாதி
  5. சிந்தாமணி என்பதன் இலக்கணக்குறிப்பு –
    அ) வேற்றுமைத்தொகை            ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    இ) பண்புத்தொகை                    ஈ) வினைத்தொகை

இயல் 2

  1. மாடு” – என்பதன் பொருள் என்ன?
    அ) கீழே       ஆ) மேலே   இ) பக்கம்     ஈ) தொலைவு
  2. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
    அ) அகழி     ஆ) ஆறு      இ) இலஞ்சி  ஈ) புலரி
  3. சரியான தொடர்களைத் தெரிவு செய்க.
    ௧) நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
    ௨) நீரின்று அமையாது யாக்கை – ஔவையார்
    ௩) மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்

அ) ௧,         ஆ) ௨,        இ) ௧,         ஈ) ௧, ,

  1. பகுதி, விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?
    அ) வென்றார்         ஆ) நடந்த    இ) வளர்க    ஈ) பொருந்திய
  2. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
    அ) மறுமை  ஆ) பூவரசு மரம்      இ) வளம்      ஈ) பெரிய

இயல் 3

  1. பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக.
    அ) நல்ல நண்பன்  ஆ) இனிய வணக்கம்       இ) எந்த ஓவியம்?   ஈ) கொடிய விலங்கு
  2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
    அ) தமிழர்களின் வீர விளையாட்டு தொன்மையான ஏறு தழுவுதல்.
    ஆ) தமிழர்களின் வீர விளையாட்டு ஏறு தழுவுதல் தொன்மையான.
    இ) தொன்மையான வீர விளையாட்டு தமிழர்களின் ஏறு தழுவுதல்.
    ஈ) தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல்.
  3. பைங்கூழ் வளர்ந்தது. ஆகுபெயரின் வகையைக் கண்டறிக.
    அ) காலவாகுபெயர்           ஆ) காரியவாகுபெயர்
    இ) கருவியாகுபெயர்        ஈ) கருத்தாவாகுபெயர்
  4. தோரண வீதியும், தோமறு கோட்டியும் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
    அ) ஏவல் வினைமுற்று    ஆ) வினைத்தொகை
    இ) எண்ணும்மை             ஈ) பண்புத்தொகை
  5. பொருந்தாத தொடரைக் கண்டறிக.
    அ) பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்.
    ஆ) சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.
    இ) திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்.
    ஈ) நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்.

குறுவினா

இயல் 1

  1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
  2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
  3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
  4. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்” – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?
  5. தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
  6. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

இயல் 2

  1. கூவல்” என்று அழைக்கப்படுவது எது?
  2. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
  3. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.
  4. நிலையான வானத்தில், தோன்றி மறையும் காட்சியைப் பெரியபுராணம் எதனுடன் ஒப்பிடுகிறது?
  5. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் – இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

இயல் 3

  1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறு தழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
  2. ஏறு தழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் சுட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
  3. பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக.
  4. கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.
  5. கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்த” – இவ்வடிகளில் கண்ணுக் கினியான் என்பது யாரைக் குறிக்கிறது?
  6. காலவாகுபெயர் – குறிப்பு தருக.

சிறுவினா

இயல் 1

  1. தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.
  2. திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
  3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
  4. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்” – உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

இயல் 2

  1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.
  2. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
  3. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
  4. வானவில்லை ஒப்பிட்டுப் பெரியபுராணம் கூறும் செய்தியை விளக்கி எழுதுக.

இயல் 3

  1. ஏறு தழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
  2. திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.
  3. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
  4. தோழியை எழுப்பும் நிகழ்வைத் திருவெம்பாவை எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?
  5. அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.

நெடுவினா

இயல் 1

  1. காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.
  2. புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.

இயல் 2

  1. வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.
  2. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
  3. தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

இயல் 3

  1. ஏறு தழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
  2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
  3. தாய்மைக்கு வறட்சி இல்லை’ என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.

 CLICK TO PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post