10th-Tamil-1 mark - Book Inside Questions - Unit - 2 @2026

 

பத்தாம் வகுப்பு
தமிழ்
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்
உள் வினாக்கள்

இயல் – 2

1. உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது எனக் கூறுபவர் – தொல்காப்பியர்

2. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் எனக் கூறுபவர் – திருமூலர்

3. வாயுவழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம் எனப் பாடுபவர் – பிற்கால ஒளவையார்

4. கிழக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் – கொண்டல்

5. மேற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் – கோடை

6. வடக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் – வாடை

7. தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் – தென்றல்

8. வண்டொடு புக்க மணவாய்த் தென்றலே என தென்றல் காற்று வண்டுகளையும் அழைத்து வருவதாக பாடுபவர் – இளங்கோவடிகள்

9. நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுத்த தென்ற்லே என தூது செல்ல காற்றை அன்போடு அழைப்பதாக பாடுபவர் – பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்

10. பத்மகிரி தென்றல் விடு தூது என்னும் சிற்றிலக்கியத்தை எழுதியவர் - பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்

11. கரிகால் பெருவளத்தை புகழ்ந்துப் பாடிய சங்க காலப் பெண்பாற் புலவர் – வெண்ணிகுயத்தியார்.

12. நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி – இவ்வரிகளில் கடலைக் குறிக்கும் சொல் – முந்நீர்

13. சூன் முதல் செப்டம்பர் வரை வீசும் பருவக் காற்று – தென்மேற்கு பருவக் காற்று

14. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும் பருவக் காற்று – வடகிழக்கு பருவக் காற்று

15. இந்தியாவிற்கு தேவையான 70 சதவீத மழையைத் தரும் பருவக் காற்று - தென்மேற்கு பருவக் காற்று

16. காற்றின் ஆற்றலை “ வளி மிகின் வலி இல்லை “ எனப் பாடுபவர் – ஐயூர் முடவனார்

17. காற்றின் வேகத்தை “ கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது “ எனப் பாடுபவர் – மதுரை இளநாகனார்.

18. உலக காற்றாலை மின் உற்பத்தில் இந்தியா பெறும் இடம் – 5

19. இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் – தமிழ்நாடு

20. காற்று மாசு அடைவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக கூறும் அமைப்பு – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ( UNICEF )

21. கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் உண்டாகும் விளைவு – அமில மழை

22. ஒவ்வொரு ஆண்டும் உலகக் காற்று நாள் கொண்டாடப்படும் நாள் – ஜூன் 5

23. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் தமிழ் நூல்கள் – திருவெம்பாவை, திருப்பாவை

24. அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நம் பால் வீதி போல பல பால்வீதிகள் உள்ளன என நிருபித்த ஆண்டு – 1924

25. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் – என திருஅண்டப் பகுதியை 1300 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் – மாணிக்க வாசகர்

26. எட்டுத் தொகை நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் – பரிபாடல்

27. முகம்மது ரஃபி என்னும் இயற்பெரைக் கொண்டவர் – நாகூர் ரூமி

28. கப்பலுக்கு போன மச்சான் என்ற நாவலைப் படைத்தவர் – நாகூர் ரூமி

29. ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது – தொகா நிலைத் தொடர்

30. விளியைத் தொடர்ந்து வினை அமைவது – விளித்தொடர்

31. முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது – பெயரெச்சத் தொடர்

32. முற்று பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது – வினையெச்சத் தொடர்

33. ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது – கூட்டுநிலைப் பெயரெச்சம்

34. பழக பழகப் பாலும் புளிக்கும் – தடித்த சொற்களில் உள்ள தொடரின் வகை – அடுக்குத் தொடர்

35. பழமைக்கு எதிரானது; எழுதுகோலில் பயன்படும் – புதிருக்கான விடையைக் காண்க – புதுமை

36. ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம் – புதிருக்கான விடையைக் காண்க – காடு

37. குயில்களின் கூவலிசை; புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்; இலைகளின் அசைவுகள்; சூறைக்காற்றின் ஆலோலம் – இத்தொடர்ருக்கான நயமிகு தலைப்பைப் காண்க – காற்றின் பாடல்

38. அதோ அந்த பறவை போல – என்ற நூலை எழுதியவர் -  ச.முகமது அலி

39. STORM என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம் -  புயல்

40.  உலகின் மிகச்சிறிய தவளை – என்ற நூலை எழுதியவர் – எஸ்.ராமகிருஷ்ணன்.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post