தமிழ்விதை
அன்பார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்விதை தளமானது புதிய இலச்சினைக் கொண்டு இனி உங்களிடம் பள்ளிமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சித்தாள்கள், பணித்தாள்கள், மாதிரி தேர்வுகள், வழிகாட்டிகள், வலையொளி காணொளிகள், பாடக்குறிப்பேடு, மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக இணைய வழித் தேர்வுகள், மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்க சான்றிதழ் தேர்வுகள், உலக சிறப்பு தின விநாடி வினா போட்டிகள் என பல்வேறு தகவல்களை இந்த புதிய இலச்சினை மூலம் அனுதினமும் புதிது புதிதாக பதிவேற்றம் செய்யப்படும். இதுவரை தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த இந்த வலைதளம் இனி அனைத்து பாடங்களுக்குமான பதிவுகள் இடலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கு உங்களுன் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அனைத்து ஆசிரியர்களும் தங்களின் படைப்புகளை இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய விரும்பினால் 8695617154 என்ற எண்ணில் புலனத்திற்கு அனுப்பலாம். அல்லது thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் நீங்கள் அனுப்பலாம். உங்களின் படைப்புகள் மீது எந்த தார்மீக உரிமையும் தமிழ்விதை வலைதளம் எடுத்துக் கொள்ளாது. அனுப்புபவரின் படைப்புகள் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே பதிவேற்றம் செய்யப்படும். அனைத்து படைப்புகளும் மாணவர்களை சென்றடைந்தால் உங்களுக்கும் மகிழ்ச்சி, இந்த வலைதளத்திற்கும் மிக மகிழ்ச்சி.
இந்த வலைதளத்தில் செய்திகள் எதுவும் பகிராமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படக்கூடிய படைப்புகள் மட்டுமே இதில் பதிவேற்றம் செய்யப்படும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீங்கள் கருத்துக் கூற விரும்பினால் இந்த வலைதளத்தில் உள்ள செய்தி பெட்டியில் தகவல் தெரிவிக்கவும். அல்லது மேற்கண்ட புலன எண்ணிற்கு தகவல் அனுப்பவும். இது உங்கள் வலைபக்கம். உங்களின் தேவை எனது சேவையாக இருக்கும். நாளது வரை ஆதரவு நல்கிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. மேலும் உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை. தொடர்ந்து வலைதளத்தைப் பயன்படுத்துங்கள் பயன்பெறுங்கள்.
மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நீங்கள் பள்ளிக்கு சென்றுக் கொண்டு இருக்கிறீர்கள் ஆசிரியர்கள் அன்றாடம் கற்றுக் கொடுத்தப் பாடங்களை முறைப்படி பயிலுங்கள். இந்த வலைதளம் மூலம் பதிவேற்றம் வினாத்தள்களை நன்கு பயிற்சி செய்யுங்கள். நீங்கள் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். அது உங்களால் இயலும். இந்த வலைதளத்தில் மீத்திற மாணவர்களுக்கும், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் என பல கற்றல் வளங்கள் பதிவேற்றம் செய்யப்படும் . இது பல ஆசிரியர்களின் கூட்டு முயற்சியில். இதனை அனைத்து மாணவர்களும் நன்கு பயன்படுத்தி தங்களின் கற்றலினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கு ஓர் வேண்டுகோள்
இந்த வலைதளத்தில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அதனை உடனடியாக என்னுடைய எண்ணிற்கு தகவல் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த வலைதளத்தில் நீங்கள் எந்த மாதிரியான படைப்புகள் வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதனைபற்றிக் கூறுங்கள். அந்த படைப்புகளை செய்து கொடுப்பதற்கு எத்தமாக உள்ளேன். இந்த வலைதளம் எவ்வளவு உதவிகரமாக உள்ளது என்பதனையும் கருத்து தெரிவியுங்கள்.
என்றும் உங்கள் ஆதரவுடன்
தமிழ்விதை