பத்தாம்
வகுப்பு
மாதிரி
அரையாண்டுத் தேர்வு-1 - 2025
மொழிப்பாடம் – தமிழ்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
அறிவுரைகள்
:
1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச்
சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே
எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்
பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்
வேண்டும்.
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன்
விடையினையும் சேர்த்து எழுதவும்.
அ) சரியான விடையைத் தேர்வு
செய்க. 15×1=15
1. அறிஞருக்கு
நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?
அ) வேற்றுமை
உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
2.
நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற
நாடுகள் முறையே,
அ) பாண்டிய நாடு,
சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு,
சோழநாடு ஈ) சோழநாடு, பாண்டிய நாடு
அ) விளித்தொடர் ஆ)
எழுவாய்த் தொடர்
இ) வினையெச்சத் தொடர் ஈ) பெயரெச்சத் தொடர்
4. சொல்லப் பயன்படுவர் சான்றோர்;
கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று வந்துள்ள
அணியைத் தேர்க
அ) வஞ்சப் புகழ்ச்சி அணி ஆ) உருவக
அணி
இ) உவமை அணி ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி
5. தூக்கு மேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில் தான் கலைஞர்
என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்கு மேடை நாடகத்தில்
நடித்தவர் யார்?
ஆ)
கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?
ஈ) யாருக்குப் பாராட்டு விழா
நடத்தப்பட்டது?
6.
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்று தந்த நூல் எது?
அ)
ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற
நதி ஈ) உயரப் பறத்தல்
7.
நாலெழுத்தில் கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும். இப்புதிருக்கான விடையைத்
தேர்க
அ) விண்மீன் ஆ)
நறுமணம் இ) புதுமை ஈ) காற்று
8.இரவீந்தரநாத்
தாகூர் ________ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை _______ மொழியில்,
மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது
அ) ஆங்கில, வங்காளம் ஆ)
வங்காள, ஆங்கில
இ) வங்காள,
தெலுங்கு ஈ)
தெலுங்கு, ஆங்கில
9 நன்மொழி என்பது
அ) பண்புத் தொகை ஆ) உவமைத் தொகை
இ) அன்மொழித் தொகை ஈ)
உம்மைத் தொகை
10.
மாடியிலிருந்து இறங்கினார் முகமது – இத்தொடரில் தடித்தச்
சொற்களில் உள்ள தொடரின் வகையைத் தேர்க
அ) பெயரெச்சத் தொடர்
ஆ) விளித்தொடர்
இ) வேற்றுமைத் தொடர்
ஈ) வினைமுற்றுத் தொடர்
11. குடிமக்கள் காப்பியம் என வழங்கப் பெறும் நூல்.
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை
இ) சீவக சிந்தாமணி ஈ) குண்டலகேசி
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15)
விடையளிக்க:-
‘ஆழ நெடுந்திரை யாறு
கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு
நடுங்கிடும் வில்லாளோ
தோழமை யென்றவர் சொல்லிய
சொல்லொரு சொல் அன்றோ
ஏழமை வேட னிறந்தில
னென்றெனை யேசாரோ
12.இப்பாடலில் இடம்
பெற்றுள்ள ‘ நெடுந்திரை‘ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ. உவமைத் தொகை ஆ. உருவகம்
இ. பண்புத் தொகை ஈ. வேற்றுமை
13. பாடலில் இடம்
பெற்றுள்ள எதுகைச் சொற்களைத் தேர்க
அ.
போவாரோ – வில்லாளோ ஆ, நெடுந்திரை – நெடும்படை
இ. தோழமை - அன்றோ ஈ. கடந்திவர்
- கண்டு
14. இப்பாடலை இயற்றியவர்
அ.நப்பூதனார் ஆ. குமரகுருபரர் இ. அதிவீர
ராம பாண்டியர் ஈ.கம்பர்
15. இப்பாடல் இடம்
பெற்ற நூல் ___
அ. கம்பராமாயணம் ஆ. முல்லைப்பாட்டு
இ. பரிபாடல் ஈ. சிலப்பதிகாரம்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
4×2=8
(21 ஆவது வினாவிற்கு
கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)
16. விடைக்கேற்ற
வினா அமைக்க.
அ.சந்தா சாகிப் இஸ்மத் சன்னியாசி
என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.
ஆ. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
17. வறுமையிலும்
படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
18. சரயு ஆறு பாயும் இடங்களைப்
பட்டியலிடுக.
19.
செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கிறார்?
20.
“ மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! –
இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
21. செயல் – என முடியும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. பலகை என்பதைத்
தொடர்மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக
23. தடித்த எழுத்துகளில் உள்ள தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
அ) அன்புச்செல்வன்
திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்.
ஆ) அனைவருக்கும்
மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்
24. பகுபத
உறுப்பிலக்கணம் தருக : மயங்கிய
25. அகராதியில்
காண்க
அ) ஆசுகவி ஆ) மன்றல்
26. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அ ) விடு – வீடு ஆ) கொடு – கோடு
27. தொடர்களில்
உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
அ) கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
ஆ) வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக்
கற்றுத் தருகிறது.
குறிப்பு :- செவி
மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
கூட்டப்
பெயர்களைக் காண்க. ( புல், கட்டு, மந்தை, குவியல் )
அ) கல் ஆ) ஆடு
28. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
30. உரைப்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
மலேசிய மண்ணில், சுபாஷ் சந்திரபோசின் இந்திய இராணுவத்தைச்
சேர்ந்த தமிழ்நாட்டு வீரர் ‘மலேயா கணபதி ‘ என்பவர். ஆங்கிலேயரால்
தூக்கிலிடப்பட்டு இறந்ததை அறிந்து கலைஞர் ‘ கயிற்றில் தொங்கிய கணபதி
‘ என்ற சிறிய கட்டுரை நூலை எழுதிய போது அவருக்கு வயது இருபத்தி இரண்டு.
அனைத்து இந்தியர்களிடமும் இருந்த
ஆங்கிலேய எதிர்ப்புணர்வு, கலைஞரிடமும் இருந்தது என்பதைக் காட்டும் நூல் இது.
அ) கலைஞரிடம் இருந்த எதிர்ப்புணர்வைக்
காட்டிய நூல் எது?
ஆ) இந்திய இராணுவத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டு
வீரர் யார்?
இ) கலைஞர் கயிற்றில் தொங்கிய கணபதி என்ற நூலை எழுதும் போது அவருடைய வயது யாது?
31. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
(
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)
32.
எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
33. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன்
செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
34. அ) “ அன்னை மொழியே “ எனத் தொடங்கும் பெருஞ்சித்திரனார் பாடலை எழுதுக. (அல்லது )
ஆ) “தூசும்
துகிரும்” எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35.வகுப்பறையில்
ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய பாடலைப் பாடிக்காட்டினார். இதை
மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து
ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி
வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார். – தடித்த சொற்களுக்கான தொகா நிலைத் தொடர்களைக் கண்டறிக
36. எடுத்துக்காட்டு
உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.
37.
“அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக்
கொளல்“ - இக்குறளை அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) வள்ளுவம்,
சிறந்த் அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக
( அல்லது )
ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க
வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக
39. அ) மாநில அளவில் நடைபெற்ற
‘ கலைத்திருவிழா ‘ போட்டியில் பங்கேற்று ‘ கலையரசன் ‘ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி
மடல் எழுதுக. (
அல்லது )
ஆ.
உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன.அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு
ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
40.
அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
42. அ) தமிழ், தமிழர்,
தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது
தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்தப்பின்
உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக் கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக. ( அல்லது )
ஆ) நயம் பாராட்டுக:-
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு
விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும்
ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக்
குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய
வண்டமிழ் மொழியே
மாந்தருக்
கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந்
தனித்தமிழ் மொழியே
தழைத்தினி
தோங்குவாய் தண்டமிழ் மொழியே - கா.நமச்சிவாயர்
குறிப்பு
: செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
சங்க பாக்களில் அறம்
பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன. ‘ அறநெறி முதற்றே அரசின் கொற்றம், அறன் நெறி பிழையாத்
திறனறி மன்னர்’ மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப்
போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல பாடல்களில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.நீர் நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும்
அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமைச் சொல்லப்பட்டது.
( I ). சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் எவற்றை
முதன்மைப்படுத்தியது?
( ii ). அறத்தின் குறியீடுகள் யாவை?
( iii ) அரசனின் செங்கோல் பற்றி பாடல்கள் வலியுறுத்துவது
எதனை?
( iv ) அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது எது?
( v ) உரைப்பத்திக்குப்
பொருத்தமான தலைப்பு தருக..
பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 3×8=24
43.அ) நாட்டு வளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை
பாவாணர் வழிநின்று விளக்குக. (அல்லது)
ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு –
நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப்
பருவமும் நாட்டுப் பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
44.அ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி
வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்
சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க. (அல்லது)
ஆ) கிடைப்பதற்குரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த
நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
45.அ) குறிப்புகளைக் கொண்டு, ‘மக்கள் பணியே மகத்தான
பணி ‘ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று –
மொழிப்பற்று – பொதுவாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை (அல்லது)
ஆ) கீழ்க்காணும் குறிப்பைப் பயன்படுத்திக்
கட்டுரை எழுதி தலைப்பு தருக
முன்னுரை – வீட்டில் திண்ணை அமைத்த காரணம் – விருந்தினரைப் பேணுதல் – தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் – இன்றைய விருந்தோம்பல் - முடிவுரை.
CLICK TO START BUTTON AFTER DOWNLOAD QUESTION PAPER