10TH-TAMIL-REVISION QUESTION AND MODEL PUBLIC EXAM-9-2026

 


 பத்தாம் வகுப்பு

மாதிரி திருப்புதல் மற்றும் பொதுத் தேர்வு-9- 2025

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                              மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                            15×1=15

1. ‘ சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ‘ – பாரதியின் இக்கூற்று உணர்த்தும் கருத்து

அ. பல துறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.   

ஆ. பலகலைகள் தமிழில் புதிததாக தோன்ற வேண்டும்.

இ. உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்

ஈ. கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.

2. முகில் போட்டித் தேர்வில் கண்ணும் கருத்துமாகப் படித்து வென்றார். இதில் “ கண்ணும் கருத்தும் “ என்ற மரபுத் தொடரின் பொருள்

அ) தள்ளிப்போடுதல்  ஆ) கவனம்    இ) கற்பனை   ஈ) தள்ளிப்போடுதல்

3. இவற்றில் திணை வழுவமைதியைக் காண்க

அ) ‘ இந்த பாப்பா தூங்கமாட்டாள் ‘ என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது.

ஆ) இரவெல்லாம் நாய் கத்திக் கொண்டே இருந்தது.

இ) ‘ வாடா செல்லம் ‘ என்று தாய் மகளை அழைப்பது.

ஈ) ‘ என் தங்கை வந்தாள் ‘ – என்று பசுவைக் குறிப்பிடுவது

4. கிழமை பட வாழ் – இவ்வடிகள் யாருடைய கூற்று

அ) அதிவீரராம பாண்டியர்    ஆ) ஒளவையார்   இ) பாரதியார்        ஈ) பெருஞ்சித்திரனார்

5. கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளுள் உணவுத் தொடர்பான பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்        ஆ) அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

இ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்                        ஈ) ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்

6. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –

அ) திருப்பதியும்,திருத்தணியும்          ஆ) திருத்தணியும்,திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும்    ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

7. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்

   நாமம் கெடக்கெடும் நோய் – இக்குறளில் உள்ள எதுகைச் சொற்களைத் தேர்க.

அ) வெகுளி - மயக்கம் ஆ) நாமம் - நோய்     இ) வெகுளி – கெடக்கெடும் ஈ) காமம் - நாமம்

8. மேன்மை தரும் அறம் என்பது ______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது                                

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

9 உப்பில்லா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் எனக் கூறும் நூல்

அ) காசிக்காண்டம்     ஆ) விவேக சிந்தாமணி         இ) மலைபடுகடாம்                  ஈ) நற்றிணை

10 கல்வியும் செல்வமும் – இலக்கணக்குறிப்புத் தருக.                                                         

          ) உவமைத்தொகை   ) எண்ணும்மை   ) உம்மைத்தொகை  ) வினைத்தொகை

11 பரிபாடல் அடியில் விசும்பில் இசையில் ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும்         ஆ) வான்வெளியில்  பேரொலியில்

இ) வானத்தில் பூமியையும்                ஈ) வானத்தையும் பேரொலியையும்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“ மாற்றம் எனது மானிடத் தத்துவம்

 மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்

 எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

 என்ப தறிந்து ஏகுமென் சாலை

 தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்

12. இப்பாடலில் இடம் பெற்றுள்ள சீர் மோனைச் சொற்கள்

அ. தலைவர் - தர்பார்            ஆ.மாற்றம் – மானிடம்            

இ. தீமை – நன்மை               ஈ. மானிடம் – மகத்துவம்

13. கவிஞர் மானிடத் தத்துவம் எனக் குறிப்பிடுவது

அ. நன்மை                 ஆ.தீமை        இ. தர்பார்        ஈ. மாற்றம்

14. தர்பார் என்பதன் பொருள்                                                                       

அ) அரசியல் மாற்றம் ஆ. கொள்கைகள் மாற்றம்    இ. சாலைகள் மாற்றம்  ஈ.கவிதை மாற்றம்

15. இக்கவிதையில் உள்ள முரண் சொற்கள்

அ.மாற்றம் - மாறும்  ஆ. தலைவர் - தர்பார்  இ. நன்மை-தீமை  ஈ. தத்துவம் – மகத்துவம்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                          4×2=8

( 21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும், பிறவும் கொடுத்தனர்.

ஆ. 1554 இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில் தான் மொழி  பெயர்க்கப்பட்டது.

17. ஊதைக்காற்று குறித்து எழுதுக.

18. கரப்பிடும்பை இல்லார்இத்தொடரின் பொருள் கூறுக

19. நமக்கு உயிர் காற்று

  காற்றுக்கு வரம் மரம்மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

20. குறிப்பு வரைக:- அவையம்

21.  அறிவு – எனத் முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                     5×2=10

22. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

            அ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. ( படர்க்கையை

                 முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையாகப் படர்க்கையாக மாற்றுக )

            ஆ) “ இதோ முடித்துவிடுவேன் “ என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார்.

( வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக.)

23. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

            பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி

24. விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-

____கு ( பறவையிடம் இருப்பது )  கு___தி (சிவப்பு நிறத்தில் இருக்கும் )

வா____  ( மன்னரிடம் இருப்பது )  ____கா ( தங்கைக்கு மூத்தவள் )

_____ ( அறிவின் மறுபெயர் )   பட_____ ( நீரில் செல்வது )

25. படிப்போம்; பயன்படுத்துவோம்

அ. Multi media                                      ஆ. Sceptor

26. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

27.   அருணா ஓடினாள் – பெயரெச்சமாகவும், வினைமுற்றாகவும் மாற்றுக

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.:-  

அ. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் _____

ஆ) வெயில் அலையாதே; உடல் ___________

28. வேங்கை என்பதை தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )  பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                              2×3=6

29. “ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது”

- இது போல் இளம் பயிர்வகை மூன்றின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;

“ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் “ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு, சங்க காலத்திலேயே தமிழில் மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது. வடமொழியில் வழங்கி வந்த இராமாயண,மகாபாரத் தொன்மைச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளன. இதுவும் பிற மொழிக்கருத்துகளை, கதைகளை, தமிழ்ப்படுத்தியமையைப் புலப்படுத்துகிறது. பெருங்கதை,  சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக்கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.

அ. இப்பத்தியில் இடம்பெறும் செப்பேட்டுக் குறிப்பு எவ்வூரைச் சார்ந்தது?

ஆ. சங்கக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்ததை எதன் மூலம் அறியலாம்?

இ. வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட காப்பியங்கள் எவை?

31. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

 

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                       2×3=6

( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. மன்னன், இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்?

33. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

34. “தண்டலை“எனத் தொடங்கும் கம்பராமாயணம் பாடலை அடிமாறாமல்  எழுதுக (அல்லது )  “ மாற்றம் “ எனத் தொடங்கும் காலக்கணிதப்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                         2×3=6

35. மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்.

 பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.

36. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

      அருவினையும் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக

37. ஐவகைத் திணைகளையும் அதற்குரிய பெரும்பொழுது, சிறு பொழுதுகளை எழுதுக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                5×5=25

38. அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி….. தண்டலை மயில்கள் ஆட…....  இவ்வுரையைத் தொடர்க.    ( அல்லது )

ஆ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

39. நீங்கள் விரும்பி படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி,உங்கள் நண்பரையும் அந்நூலினைப் படிக்குமாறுப் பரிந்துரைத்துக் கடிதம் எழுதுக.   ( அல்லது )

ஆ. “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ என்ற செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அது உங்கள் பள்ளியில் தலைமையாசிரியர் ஒப்புதலுடன் செயல்படுத்திட அனுமதி வேண்டி தலைமையாசிரியருக்கு கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

41. நாமக்கல் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும்  இளமாறன் மகள் யாழினி பத்தாம் வகுப்பு முடித்து அங்கு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் பாடப்பிரில், ஆங்கில வழியில் மேல்நிலை வகுப்பு சேர விரும்புகிறார். தேர்வர் தம்மை யாழினியாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.

42. அ) நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ,உடன் பிறந்தவருடனோ எதிர் பாராமல் சச்சரவு ஏற்படுகிறது…. இந்த சமயத்தில் சினம் கொள்ளத் தக்க சொற்களை பேசுகிறோம்; கேட்கிறோம்;கை கலப்பில் ஈடுபடுகிறோம்; இது காறும் கற்ற அறங்கள் நமக்கு கைகொடுக்க வேண்டாமா?            மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.        ( அல்லது )

ஆ) நயம் பாராட்டுக:-

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

  அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

   உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

   இலையிலிட வெள்ளி எழும் “                   - காளமேகப் புலவர் 

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.நாடு,இன மொழி எல்லைகள் கடந்து ஓருலகத் தன்மையைப் பெற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்ற்வற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

( I ). ஓரூலகத் தன்மையைப் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாக எதனைக் கொள்ளலாம்?

( ii ). பிற மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தருவன எவை?

( iii ) தூதரங்களின் முதன்மையான பணிகளில் ஒன்று எது?

( iv ) மொழி பெயர்ப்புக் கல்வியின் பயங்களை எழுதுக.

( v )  இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                            3×8=24

43. அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.   ( அல்லது )

ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் ‘ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக

44. அ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?    ( அல்லது )

ஆ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

45. அ) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன்கொக்கைப் போல,கோழியைப் போலஉப்பைப் போலஇருக்க வேண்டும்கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழிகண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும்ஆசிரியர் விளக்கம்மாணவன் மகிழ்ச்சி.    ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதி தலைப்பிடுக..

போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

click here

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறத் தவறும் மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறவும், 40 மதிப்பெண் பெறும் மாணவர்கள் அதிகப்பட்ச மதிப்பெண் 70+  பெற சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்



 

 

 

 

 

 

 

 

 


எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP                                  TELEGRAM                        FACE BOOK GROUP

 


           

           

 

 

 

WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post