ஒன்பதாம் வகுப்பு
பயிற்சிப் புத்தகம்
குறு வினாக்கள் – வினாக்கள்
தொகுப்பு
இயல் – 1 அமுதென்று
பேர்
குறு
வினா
1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச்
சேர்ந்தது?
2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து
எழுதுக.
3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
4. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல்லும்
இலக்கணங்கள் –
இலக்கியங்களின்
பாடுப்பொருளாக இவ்வடிகள்
உணர்த்துவன யாவை?
5. தென் திராவிட மொழிகள் எவையேனும் நான்கினை எழுதுக.
6. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இயல் – 2
உயிருக்கு வேர்
ஆ) குறுவினா
1. “ கூவல் “ என்று அழைக்கப்படுவது எது?
2. உங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக்
குறிப்பிடுக.
3. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.
4. நிலையான வானத்தில் தோன்றி மறையும்
காட்சிக்குப் பெரிய புராணம் எதனை ஒப்பிடுகிறது?
5. மணிநீரும்
மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் – இக்குறள் கூறும் நாட்டின்
அரண்கள் யாவை?
இயல் – 3 உள்ளத்தின்
சீர்
ஆ) குறுவினா
1. நீங்கள் வாழும்
பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
2. ஏறுதழுவுதல்
நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
3. பழமணல் மாற்றுமின்
; புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
4. “கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின
பேச்சரவம் கேட்டிலையே” இடம்சுட்டிப் பொருள் தருக.
5. “ கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக
யாமாட்டோ நீயேவந்த – இவ்வடிகளில் “ கண்ணுக் கினியான் “ என்பது யாரைக் குறிக்கிறது?
6. காலவாகுபெயர்
– குறிப்பு தருக.
இயல் – 3
திருக்குறள்
ஆ) குறுவினா
1. நிலம்
போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?
2. தீயவை
தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.
3. ஒற்றொற்றித்
தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். இக்குறட்பாவில்
அமைந்துள்ள நயங்களை எழுதுக.
4. கனவிலும்
இனிக்காதது எவர் நட்பு?
5. கதைக்குப் பொருத்தமான
குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.
மெளனவிரதம்
என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு
வாரத்துக்கு மெளனவிரதம்
இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மெளனவிரதம்
ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான்,
“எங்கள் வீட்டு அடுப்பை அணைத்து
விட்டேனா தெரியவில்லையே!“ பக்கத்திலிருந்தவன் “அடப்பாவி! பேசிட்டியே!“ என்றான். உடனே
மூன்றாவது ஆள், “நீ
மட்டும் என்ன? நீயும்தான்
பேசிவிட்டாய்!“ என்றான். நான்காவது ஆள்,
“நல்லவேளை ! நான் மட்டும்
பேச வில்லை!“ என்றான். இப்படியாக அவர்களின் மெளனவிரதம்
முடிந்துபோனது.
1. மறந்தும்
பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும்
சூழ்ந்த வன் கேடு.
2. திறனல்ல
தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல
செய்யாமை நன்று.
3. ஓதி
உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின்
பேதையார் இல்
இயல் – 4
எட்டுத்திக்கும் சென்றிடுவீர்
ஆ) குறுவினா
1. சாரதா
சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
2. துணைவினைகளின் பண்புகள்
இரண்டினை எழுதுக.
3. மூன்றறிவதுவே
அவற்றொடு மூக்கே நான்க றிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே இவ்வடிகளில்
தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு,
நான்கறிவு,
ஐந்தறிவு உயிர்கள் யாவை?
4. பெண்களுக்கு எப்போதும்
கல்வி வேண்டும் என்பதைக் ‘ குடும்ப
விளக்கு ‘ கருத்தின் வழி எழுதுக.
5. ‘ கொடு ‘ என்பது முதல்வினையாகவும்
துணைவினையாகவும் அமையுமாறு தொடர்கள் எழுதுக.
இயல் – 5
கலை பல வளர்தல்
ஆ) குறுவினா
1. நடுகல் என்றால் என்ன?
2. இசைத்
தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
3. இரண்டாம் வேற்றுமை உருபு
வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் விளக்குக.
4. உரிய இடங்களில் வல்லின
மெய்களைச் சேர்த்து எழுதுக.
பிறநாட்டுச் சிற்பங்களைக்
காட்டிலும் தமிழ்நாட்டுச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன. யோகக்கலை, நாட்டியக்கலைக்
கூறுகளும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன.
5. பூக்கும் – பகுபத றுப்பிலக்கணம்
தருக
இயல் – 5
திருக்குறள்
ஆ) குறுவினா
1.அன்புநாண்
ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண் - இக்குறட்பாவில் பயின்று
வரும் அணியை விளக்கி எழுதுக.
2. உலகத்திற்கு அச்சாணியாய்
இருப்பவர் யார்?ஏன்?
3. காணாதான் காட்டுவான் தான்காணான்
காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு - இக்குறட்பாவில் பயின்று
வரும் தொடை நயத்தை விளக்குக.
இயல் – 6
வாழிய நிலனே
ஆ) குறுவினா
1. இந்திய
தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?
2. தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால்
எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
3. கருக்கொண்ட
பச்சைப் பாம்பு, எதற்கு
உவமையாக்கப்பட்டுள்ளது?
4. ஓம்புவார்
– பகுபத உறுப்பிலக்கணம் தருக.
5. இந்திய தேசிய இராணுவப்படைத்
தலைவராக இருந்த தில்லான் அவர்கள் தமிழர்கள் பற்றிக் கூறியது யாது?
6. ‘ மகனே கொடு ‘ – இத்தொடரில்
வல்லினம் மிகுமா? விளக்கம் தருக.
இயல் – 7
என் தலை கடனே
ஆ) குறுவினா
1.
‘பகுத்தறிவு’
என்றால் என்ன?
2.
மூவசைச்
சீரில் அமைந்த பெயர்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
3.
யாருக்குப் பூமி பாரமில்லை என்று கவிஞர் குறிப்பிடுகின்றார்?
4.
யசோதர
காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
5.
அசை
எத்தனை வகைப்படும்?
அவை
யாவை?
.png)
