10TH-TAMIL-THIRUKKURAL - 5 MARK QUESTIONS

 

THIRUKKURAL - 5 MARK QUESTIONS

இயல் – 3

ஐந்து – மதிப்பெண் வினாக்கள்

1. பெரியாரைத் துணைகோடல் ‘ என்ற வள்ளுவரின் கூற்றினை விளக்கி, உங்கள் கருத்தை எழுதுக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

பொருள்

முடிவுரை

முன்னுரை :

        பெரியாரைத் துணைகோடல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளையும், எனது கருத்தையும் நாம் காணலாம்.

பொருள் :

ü  கிடைத்தற்கரியபேறுகளுள் எல்லாம் பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்.

ü  நமக்கு கிடைத்த பயன்களில் மிகச்சிறந்த பயனாக இருப்பது நமது பெற்றோர்களும், பெரியோர்களுமே ஆகும். இவர்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். 

ü  குற்றங்கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற 
மன்னன், பகைவர் இன்றியும் தானேகெடுவான்.  
ü  நான் தவறான முடிவு எடுக்கும் போது என்னை திட்டியோ, அடித்தோ நல்வழிபடுத்த பெரியோர் இல்லை எனில் நான் நிச்சயம் பகைவரால் அழியக் கூடும் என்பது உண்மை.
ü  தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும்.
ü   வீரம், திறமை இவற்றைக் கொண்டு நாம் பகைவரை எதிர்க்கொண்டாலும் நல்ல பண்புக் கொண்ட பெரியோர்கள் இல்லையெனில் அது எனக்கு பல மடங்கு தீமை தரும்.
 

முடிவுரை :

          பெரியாரைத் துணைக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நமக்கு தீங்கு ஏற்படும் என்பதனை பெரியாரைத் துணைகோடல் என்ற அதிகாரத்தின் மூலம் கண்டோம். நாமும் நமது வீட்டில் உள்ள பெற்றோர்களையும், பெரியோர்களையும், ஆசிரியர்களையும் மதித்து நடப்போம்

2. கண்ணோட்டம் ‘ என்ற வள்ளுவரின் கூற்றினை விளக்கி, உங்கள் கருத்தை எழுதுக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

பொருள்

முடிவுரை

முன்னுரை :

        கண்ணோட்டம் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளையும், எனது கருத்தையும் நாம் காணலாம்.

பொருள் :

ü  பாடலோடு இசை பொருந்தவில்லையெனில் பயன் இல்லை. அது போல இரக்கம் இல்லாத கண்ணால் என்ன பயன்?

ü  வாழும் உயிர்களுக்கு இரக்கக் குணம் அவசியம் வேண்டும். அது இல்லையெனில் பாடலோடு பொருந்தாத இசை போன்று தான் இருக்கும் கண்.

ü  நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

ü  எந்தப் பக்கமும் சாராமல் அனைவருக்காகவும் இரக்கம் காட்டுபவர்களுக்கு உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் அவருக்கு உரிமையாகும்.

ü  விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக் கொண்டவர்கள், பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் அதனை உண்ணும் பண்பாளர்

ü  இராமானுசர் தனக்கு நரகமே கிடைக்கும் எனத் தெரிந்தும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதற்காகவே அவர் திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தார்.

முடிவுரை :

          “ உயிர் இரக்கமே உலகம் நிலைபெற  உதவும் “ என்பதனை வள்ளுவர் தம் குறளால் உலக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார். நாமும் உலகம் நிலை பெற உயிர் இரக்கத்தைப் பேணுவோம்.

3.  விடாமுயற்சி குறித்து ஆள்வினை உடைமையில் வள்ளுவர் கூறியுள்ளக் கருத்துகளைத் தொகுக்க:-

குறிப்புச்சட்டம்

முன்னுரை

முயற்சியின் பெருமை

முயற்றின்மையின் விளைவு

முடிவுரை

முன்னுரை :

          விடாமுயற்சியே ஒருவரை பெருமை அடைய வைக்கும், முயற்சி இல்லையெனில் அவருக்கு வீழ்ச்சியே ஏற்படும் என்பதனை ஆள்வினை உடைமை என்னும் அதிகாரம் வழியாக வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளை நாம் காணலாம்.

முயற்சியின் பெருமை :

ü  ஒரு செயலை முடிப்பதற்கு முடியாது என்று எண்ணிச் சோர்வு அடையாதிருக்க வேண்டும். அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.

ü  தொடர்ந்து செய்யும் விடாமுயற்சி என்ற பண்புக் கொண்டவர்கள் தான் பிறருக்கு உதவி செய்வர்.அதனால் அவர்கள் உயர்வு அடைவார்கள்.

ü  சோர்விலாது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாக வரும் எவ்வித பிரச்சனைகளையும் தோற்கடித்து வெற்றி அடைவார்.

முயற்றின்மையின் விளைவு :

ü  முயற்சி உடையவருக்கும் செல்வம் பெருகும். முயற்சி இல்லாதவர்களுக்கு வறுமையே வந்து சேரும்.

ü  ஐம்புலன்களில் குறை இருப்பினும் அது இழிவன்று. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவு.

முடிவுரை :

          முயற்சியே ஒருவருக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தரும் என்பதனை ஆள்வினை உடைமை என்னும் அதிகாரம் மூலம் நாம் கண்டோம்.

இயல் – 5

ஐந்து – மதிப்பெண் வினாக்கள்

1. உலகில் சிறந்த செல்வம் பொருள் என்றும், அதன் சிறப்புகள் குறித்தும் “ பொருள் செயல் வகை” என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

பொருள்

பொருளின் தன்மை

பொருள் ஈட்டல்

முடிவுரை

முன்னுரை :

          உலகில சிறந்ததாக கருதப்படுவது பொருள்,. அதனை அடைய வேண்டிய வழிகள், அதன் தன்மைகள், பாதுகாப்பு போன்றவற்றை பொருள் செயல் வகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைக் காண்போம்.

பொருள் :

ü  ஒரு பொருளாக மதிக்காத்தவரையும் மதிப்புடையவராக செய்வது செல்வம்

ü  அஃது இல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.

பொருளின் தன்மை :

ü  தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும். இன்பத்தையும் தரும்.

ü  தன் கைப்பொருளைக் கொண்டு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப் போரை காண்பது போன்றது.

பொருள் ஈட்டல் :

ü  மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.

ü  ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும். அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதை விட வேறு இல்லை.

முடிவுரை :

          பொருளானது ஒருவரை மதிப்புடையவராக மாற்றுகிறது. அந்த பொருளை நல்வழியில் ஈட்ட வேண்டும் என்பதனை வள்ளுவர் பொருள் செயல் வகை என்னும் அதிகாரத்தில் கூறியுள்ள கருத்துகளைக் கண்டோம்.

2. கயவர்களின் பண்புகளை “ கயமை “ என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைக் கூறுக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

கயவரும்,மக்களும்

தேவரும்,கயவரும்

சான்றோரும்,கயவரும்

முடிவுரை

முன்னுரை :

          கயவர்கள் என்பவர்கள் யார்? அவரின் குணங்கள், அவரின் செயல்பாடுகளை வள்ளுவர் கயமை என்னும் அதிகாரம் வழியாக கூறியுள்ளதை நாம் காணலாம்.

கயவரும், மக்களும் :

ü  கயவர்கள் மக்களைப் போலவே இருப்பர்.

ü  கயவர்க்கும், மக்களுக்கும் உள்ள ஒற்றுமை  தோற்றம் மட்டுமே.

ü  கயவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு மக்களை வேறுபடுத்திக் காண முடியும்.

தேவரும், கயவரும் :

ü  தேவர்களும், கயவர்களும் ஒரே தன்மையானவர்கள்.

ü  தேவர்களைப் போன்றே கயவர்களும் தாங்கள் விரும்பிய செயல்களைச் செய்கின்றனர்.

சான்றோரும், கயவரும் :

ü  ஒருவருடைய குறையைக் கேட்டவுடனே உதவி செய்பவர்கள் சான்றோர்கள்.

ü  கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால் தான் பயன்படுபவர் கயவர்கள்.

முடிவுரை :

          கயவர்கள் என்பவர் யார்?, கயவர்கள் எவ்வாறு மக்களோடு, தேவர்களோடு, சான்றோர்களோடு வேறுபட்டுள்ளனர் என்பதனை வள்ளுவர் அழகாக எடுத்துரைக்கிறார்.

 




Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post