7TH - TAMIL - T1U1 - ENGAL TAMIL - FA(B) - PDF

 

ஏழாம் வகுப்பு

தமிழ்
முதல் பருவம்
இயல் - 1

எங்கள் தமிழ்

வளரறி செயல்பாடு FA (B)

தேர்வு எண் : 01                                       மதிப்பெண் : 10

நாள் :

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. 'நெறி' என்னும் சொல்லின் பொருள் _________.

அ) வழி     ஆ) குறிக்கோள்   இ) கொள்கை     ஈ) அறம்

2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) குரல் + யாகும்     ஆ) குரல் + ஆகும்     இ) குர + லாகும்     ஈ) குர + ஆகும்

3. வான் + ஒலி என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

அ) வான்ஒலி     ஆ) வானொலி     இ) வாவொலி ஈ) வானொளி

ஆ) பாடல் வினாக்கள் :-

அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள் பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

4. பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொல் காண்க.

அ) அருள்நெறி – தரலாகும்                        ஆ) அதுவே – குரலாகும்

இ) பொருள் – புகழாது                              ஈ) அருள்நெறி – அறிவை

5. பாடலில் இடம் பெற்றுள்ள் எதுகைச் சொல்லைக் காண்க.

அ) அருள்நெறி – பொருள்                      ஆ) அதுவே – குரலாகும்

இ) பொருள் – புகழாது                              ஈ) அருள்நெறி – அறிவை

6. பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொல்லைக் காண்க.

அ) அருள்நெறி – தரலாகும்                        ஆ) அதுவே – குரலாகும்

இ) இகழாது – புகழாது                             ஈ) அருள்நெறி – அறிவை

7. இப்பாடலை எழுதியவர் _______

அ) தேசிக விநாயகனார்                    ஆ) ராமலிங்கனார்

இ) உடுமலை நாராயண கவி                   ஈ) வாணிதாசன்

8. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

அ) தேசிக விநாயகனார்                        ஆ) ராமலிங்கனார்

இ) உடுமலை நாராயண கவி                   ஈ) வாணிதாசன்

9. எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ உதவுவது எது?
அ) எளிமை,சிக்கனம்                                ஆ.பணம், பொருள்

இ) அன்பு, அறம்                                       ஈ) நட்பு, உறவு

10. இன்பம் பொழியும் தேன்மொழி எது?

அ) தமிழ்             ஆ) ஆங்கிலம்      இ) இந்தி           ஈ) உருது

வினாத்தாள் - PDF


விடைத்தாள் 
OMR SHEET

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post