10th-Tamil-1 mark - Book Inside Questions - Unit - 4 @2026

 

பத்தாம் வகுப்பு
தமிழ்
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்
உள் வினாக்கள்

இயல் – 4

1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு எனக் கூறுபவர் – மணவை முஸ்தபா

2. உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிப்பெயர்ர்பும் ஒரு காரணமாகும் எனக் கூறுபவர் – மு.கு.ஜகந்நாதர்

3. மொழிபெயர்த்தல் என்ற தொடரை மரபியலில் குறிப்பிட்டவர் – தொல்காப்பியர்

4. வடமொழிக் கதைகளை தழுவிப் படைக்கப்பட்ட நூல்கள் – பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்

5. கீதாஞ்சலி என்ற நூல் எழுதப்பட்ட மொழி – வங்கமொழி

6. கீதாஞ்சலி என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – இரவீந்தரநாத் தாகூர்

7. வால்காவிலுருந்து கங்கை வரை என்ற நூலை எழுதியவர் – ராகுல் சாங்கிருத்யாயன்

8. வால்காவிலுருந்து கங்கை வரை என்ற நூல் எந்த ஆண்டு எந்த மொழியில் எழுதப்பட்டது? – 1942, இந்தி

9. வால்காவிலுருந்து கங்கை வரை என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் – கண.முத்தையா. ( 1949 )

10. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் எனக் கூறுபவர் – பாரதியார்

11. தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் எனக் கூறுபவர் – பாரதியார்.

12. பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் – திருமறைக் காடு ( வேதாரண்யம் )

13. பரஞ்சோதி முனிவர் காலம் – பதினேழாம் நூற்றாண்டு.

14. மாசற விசித்த வாற்புறு வள்பின் எனற பாடல் மூலம் சிறப்பிக்கப்படும் மன்னன் – தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

15. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் – வழாநிலை

16. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் – வழு

17. தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் எனக் கூறுவது – மரபு வழு

18. மாறன் தன்னைப் பற்றி பேசும் போது,” இந்த மாறன் ஒரு நாளும் பொய்க் கூறமாட்டான் “ எனக் கூறுவது – இட வழுவமைதி

19. இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்வது – வழுவமைதி

20. கத்துங்குயிலோசை சற்றே என் காதிற் பட வேணும் என பாரதி எனக் கவிதையில் கூறி இருப்பது – மரபு வழுவமைதி

21. குழந்தை வந்தது இத்தொடரின் பெயரெச்சத் தொடர் -  வந்த குழந்தை

22. பொது வாழ்வில் ____________ கூடாது. __________ இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. பொருளைப் புரிந்து தொழிபெயர்களை கொண்டு தொடரை முழுமை செய்க.   நடித்தல், நடிப்பு

23. காற்றின் மெல்லிய ________ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான _______பூக்களை மாலையாக்குகிறது. பொருளைப் புரிந்து தொழிபெயர்களை கொண்டு தொடரை முழுமை செய்க. -  தொடுதல், தொடுத்தல்.

24. MULTI MEDIA என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம் -  பல்துறை ஊடகம்.

25. HUMAN RESOURCE என்ற சொல்லின் கலைச்ச்சொல்லாக்கம் – மனித வளம்

26. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று என்ற நூலை எழுதியவர் – தமிழில் வல்லிக்கண்ணன்.

27.  குட்டி இளவரசன் என்ற நூலை எழுதியவர் – தமிழில் வெ.ஸ்ரீராம்

28. ஆசிரியரின் டைரி என்ற நூலை எழுதியவர் – தமிழில் எம்.பி.அகிலா

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post