பருவம் : 3
இயல் : 2
வாழ்வியல் திருக்குறள்
மனப்பாடக்குறள்கள்
1. வினையால்
வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
2. உறுபசியும்
ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு
3. பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில்
வேற்றுமை யான். திருவள்ளுவர்
----------------------------------------------
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. __________
ஒரு நாட்டின் அரணன்று
அ) காடு ஆ) வயல் இ) மலை ஈ)
தெளிந்த நீர்
2. மக்கள்
அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்
அ) பிறப்பால் ஆ) நிறத்தால்
இ) குணத்தால் ஈ) பணத்தால்
3. ‘ நாடென்ப ‘ –
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நான் + என்ப ஆ) நா + டென்ப
இ) நாடு + என்ப ஈ) நாடு + டென்ப
4. கண்
+ இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_
அ) கணிஇல்லது ஆ)
கணில்லது
இ) கண்ணில்லாது
ஈ) கண்ணில்லது
பின்வரும்
குறட்பாக்களில் உவமையணி பயின்று வரும் குறளைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
2.
வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
யானையால் யானையாத் தற்று
3. கற்றார்முன் கற்ற
செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க
கொளல்
குறுவினா
1.
ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?
வேண்டிய
பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், செயலின் தன்மை, இடம்
2.
ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?
நீர்,
நிலம், மலை, காடு
3.
சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?
மிக்க
பசி, ஓயாத நாடு, அழிவு செய்யும் பகை இவை இல்லாமல் இருப்பதே சிறந்த நாட்டின் இயல்புகள்.
படங்களுக்குப்
பொருத்தமான திருக்குறளை எழுதுக
உறுபசியும் ஓவாப்
பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு
