பருவம்
: 3 இயல் : 3
மானுடம்
வெல்லும் மலைப்பொழிவு
மனப்பாடப்பாடல்
மலைப்பொழிவு
வாயும் வயிறும் ஆசையில்
விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம்
– அவர்
தூய மனத்தில் வாழ
நினைத்தால்
எல்லாம் சோலைவனம்!
தமையும் வாட்டிப்
பிறரையும் வாட்டும்
சண்டை சச்சரவு – தினம்
தன்னாடு என்றும் பிறர்நாடு
என்றும்
பேசும் பொய்யுறவு!
இமைக்கும் போதில்
ஆயிரம் போட்டி
எத்தனை வீண்கனவு
– தினம்
இவை இல்லாது அமைதிகள்
செய்தால்
இதயம்
மலையளவு - கண்ணதாசன்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
‘ இமைக்கும் போதில் ‘ என்னும் தொடர் குறிப்பிடுவது________காலம்
அ) தூங்கும் ஆ) விழித்திருக்கும் இ) குறுகிய
ஈ) நீண்ட
2.
‘ மலையளவு ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__
அ) மலை + யளவு ஆ) மலை + அளவு
இ) மலையின் + அளவு ஈ) மலையில் + அளவு
3. ‘ தன்னாடு
‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____
அ) தன்
+ னாடு ஆ) தன்மை + னாடு
இ) தன் + நாடு ஈ)
தன்மை + நாடு
4. இவை
+ இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
அ) இவையில்லாது ஆ)
இவைஇல்லாது
இ) இவயில்லாது ஈ) இவஇல்லாது
பொருத்துக.
1.
சாந்தம் - சிறப்பு
2.
மகத்துவம் - உலகம்
3.
தாரணி - கருணை
4.
இரக்கம் - அமைதி
விடை
1.
சாந்தம் - அமைதி
2.
மகத்துவம் - சிறப்பு
3.
தாரணி - உலகம்
4.
இரக்கம் - கருணை
நயம்
அறிக.
மலைப்பொழிவு
பாடல்களில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகிய தொடைச் சொற்களை எடுத்து
எழுதுக.
எதுகை
: தமையும்
– இமைக்கும்
மோனை
: இரக்கம்
– இயேசுபிரான் – இரக்கம் – இதுதான்
இயைபு
: உலகம்
– கலகம் அறம்வேண்டும் – பெறவேண்டும்.
முரண்
: உயர்வும்
x தாழ்வும் பாலைவனம் x சோலைவனம்
குறுவினா
1.
உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?
சாதிகள்
மற்றும் கருத்து வேறுபாடுகளால் தடுமாறுகிறது.
2.
வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்? நல்ல
உள்ளத்தோடு வாழ வேண்டும்.
சிறுவினா
1.
சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை?
·
சாந்தம் என்னும் அமைதியான
பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்.
·
உலகம் முழுவதும் அவர்களுக்கே
உரியது.
·
அவர்களே தலைவர்கள் ஆவர்.
·
மண்ணையும் விண்ணையும் ஆட்சி
செய்யும் பெருமை உடையது பொறுமை
சிந்தனை வினா
1.
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
·
பிறரிடம் அன்பு செலுத்துதல்
·
சண்டை சச்சரவு இல்லாமல் பழகுதல்
·
விட்டுக் கொடுக்கும் மனப்பாமை
வளர்த்தல்.
·
பொறுமையை கடைப்பிடித்து வாழ்தல்
தன்னை அறிதல்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
கூடு கட்டத் தெரியாத பறவை _______
அ) காக்கை ஆ) குயில்
இ) சிட்டுக்குருவி
ஈ) தூக்கணாங்குருவி
2.
‘தானொரு’ என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது.
அ) தா + ஒரு ஆ)
தான் + னொரு
இ) தான் + ஒரு ஈ) தானே + ஒரு
குறுவினா.
1.
காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச் சொன்னது?
குயில்
என்று தெரிந்துக் கொண்டது. இனி சேர்ந்து வாழ முடியாது எனக் கூறி போகச் சொன்னது.
2.
குயில் குஞ்சு தன்னை எப்போது ‘ குயில் ‘ என உணர்ந்தது?
ஒரு
விடியலில் “கூ ’ என்று கூவியதில் தன்னை குயில் என உணர்ந்தது.
சிறுவினா
1.
குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.
·
குயில் குஞ்சு காக்கையை போல
கரைய முயல்கிறது.
·
தனியே சென்று வாழ அஞ்சுகிறது.
·
தான் குயில் என்பதனையும்,
தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழ்த் தொடங்குகிறது.
சிந்தனை வினா
1. உங்களிடம் உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன
யாவை?
·
அனைவரிடமும் மரியாதையுடன்
நடந்துக் கொள்ளுதல்.
·
படிப்புடன் விளையாட்டிலும்
பங்கு கொள்ளல்
·
அனைத்து உயிரிகளிடமும் அன்பு
செலுத்துதல்
·
பிறருக்கு உதவுதல்
·
பகைவரிடமும் அன்பு பாராட்டுதல்
·
இனிய சொற்களை எப்போதும் கூறுதல்
கண்ணியமிகு தலைவர்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
காயிதே மில்லத் ________ பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
அ) தண்மை ஆ) எளிமை இ) ஆடம்பரம் ஈ) பெருமை
2.
‘ காயிதே மில்லத் ‘ என்னும் அரபுச் சொல்லுக்குச் _____ என்பது பொருள்
அ) சுற்றுலா வழிகாட்டி ஆ) சமுதாய வழிகாட்டி
இ) சிந்தனையாளர் ஈ) சட்ட வல்லுநர்
3.
விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் _______ இயக்கத்தில் கலந்து கொண்டார்
அ) வெள்ளையனே வெளியேறு ஆ) உப்புக்காய்ச்சும்
இ) சுதேசி ஈ) ஒத்துழையாமை
4.
காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்
அ) சட்டமன்றம் ஆ) நாடாளுமன்றம்
இ) ஊராட்சி மன்றம் ஈ) நகர் மன்றம்
5.
‘ எதிரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) எதிர் + ரொலித்தது ஆ)
எதில் + ஒலித்தது
இ) எதிர் + ஒலித்தது ஈ) எதி + ரொலித்தது
6.
முதுமை + மொழி என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) முதுமொழி ஆ) முதுமைமொழி
இ) முதியமொழி ஈ)
முதல்மொழி
குறுவினா
1. விடுதலைப்
போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.
தமது
கல்வியைவிட நாட்டின் விடுதலை மேலானது என எண்ணி காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில்
கலந்துக் கொண்டார்
2. காயிதே
மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தவர் என்பதற்குச்
சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.
தன்
மகனுக்கு திருமணத்தை எளிமையாக நடத்தினார். மணக்கொடை பெறும் பழக்கம் இருந்த அக்காலத்தில் மணக்கொடை பெறாமல் திருமணத்தை நடத்தினார்,
சிறுவினா
1. ஆட்சி மொழி
பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.
·
இந்தியாவின் விடுதலைக்குப்பின்
ஆட்சி மொழித் தேர்வுக் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
·
பழமையான மொழிகளில் ஒன்றைத்தான்
ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால் அது தமிழ்மொழிதான் என உறுதியாக கூறுவேன்.
·
இலக்கிய செறிவுகொண்ட தமிழ்மொழிதான்
மிகப்பழமையான மொழி. எனவே தமிழ்மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சிந்தனை வினா
1. நீங்கள் ஒரு
தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணிகளைச் செய்வீர்கள்?
·
மக்களின் அடிப்படைத் தேவையான
உணவு, உடை, உறைவிடம் இவை கிடைக்க பாடுபடுவேன்.
·
வேளாண்மையைப் பெருக்க நீர்நிலைகளை
உருவாக்குவேன்.
·
அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை
ஏற்படுத்தித்தருவேன்.
·
அனைவருக்கும் இலவச கல்வி
கிடைக்க வழிவகை செய்வேன்
பயணம்
பயணம்
கதையைச் சுருக்கி எழுதுக
பெங்களூரில் அஞ்சலகத்தில்
வேலை செய்த கதாசிரியர்,
தனது மூன்றாவது சம்பளத்தில் ஒரு
மிதிவண்டியை வாங்கினார். மிதிவண்டியில் பயணம் செய்வதே அவரின் பொழுதுபோக்கு. ஹாசன்
வழியாக மங்களூரு செல்ல வேண்டும் என்ற ஆசையால் அவர் பயணம் தொடங்கினார். வழியில்
பகலில் வெப்பமும்,
இரவில் கடும் மழையும் பெய்தது.
மிதிவண்டிச் சக்கரத்தில் காற்று இறங்கியதால்,
அதைத் தள்ளிக்கொண்டே நடந்தார்.
அப்போது ஒரு சிறுவன் அவருக்கு உதவி செய்து பேசினான்.
அந்த சிறுவன் மிதிவண்டி மீது மிகுந்த ஆசை கொண்டிருந்தான். டெல்லிக்கும்
இமயமலைக்கும் மிதிவண்டியில் செல்ல முடியுமா என்று கேட்டு ஆச்சரியப்பட்டான்.
கதாசிரியர் அவனுக்கு ஊக்கம் அளித்தார். மறுநாள் மிதிவண்டி சரி செய்யப்பட்ட பிறகு, அந்தச் சிறுவனை மிதிவண்டி ஓட்ட அனுமதித்தார்.
சிறுவன் தனது மாமா வீட்டுவரை மிதிவண்டியில் சென்று
வர அனுமதி கேட்டான். பரபரப்பான சாலையை நினைத்து கதாசிரியர் கவலைப்பட்டார்.
சிறுவனின் ஆசையும் வேகமும் அவரின் மனதில் தோன்றியது. எதிர்பாராத விதமாக ஹாசன்
பேருந்தில் ஏறி அமர்ந்தார்;
பேருந்தும் உடனே புறப்பட்டுச்
சென்றது.
வினா,விடை வகைகள்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தான்
அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
அ) அறிவினா ஆ) அறியாவினா
இ) ஐய
வினா ஈ)
கொளல் வினா
2.
மட்டைப்பந்து விளையாத் தெரியுமா? என்னும் வினாவிற்குக் கால்பந்து விளையாடத் தெரியும்
என்று கூறுவது___
அ) மறைவிடை ஆ)
உறுவது கூறல் விடை
இ) உற்றது உரைத்தல்
விடை ஈ) இனமொழி
விடை
3.
விடை ___________ வகைப்படும்
அ) ஏழு ஆ) எட்டு இ) ஒன்பது ஈ)
பத்து
‘
விளையாடுவாயா?’ என்ற வினாவுக்கான விடையை விடை வகையுடன் பொருத்துக.
1.
விளையாடுவேன் - மறை
விடை
2.
விளையாடமாட்டேன் - உறுவது கூறல் விடை
3.
படிக்க வேண்டும் - நேர்
விடை
4.
கை வலிக்கும் - இனமொழி
விடை
விடை
1.
விளையாடுவேன் - நேர்
விடை
2.
விளையாடமாட்டேன் - மறை விடை
3.
படிக்க வேண்டும் - இனமொழி
விடை
4.
கை வலிக்கும் - உறுவது
கூறல் விடை
குறுவினா
1.
வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
ü
ஆறு வகைப்படும்
|
அறிவினா |
அறியாவினா |
ஐய வினா |
|
கொளல் வினா |
கொடை வினா |
ஏவல் வினா |
2.
நேர் விடை என்பது யாது?
உடன்
பட்டு கூறும் விடை
3.
குறிப்பு விடைக்கும், வெளிப்படை விடைக்கும் உள்ள வேறுபாடு யாது?
|
குறிப்பு விடை |
வெளிப்படை விடை |
|
குறிப்பாகப் பொருள் புரிந்து கொள்ளும்
படி அமைவது |
நேரடி விடைகளாக இருப்பது. |
4. கொளல்
வினாவையும், கொடை வினாவையும் வேறுபடுத்துக.
|
கொளல் வினா |
கொடை வினா |
|
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டுக்
கேட்பது |
பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும்
பொருட்டுக் கேட்பது. |
மொழியை ஆள்வோம்
அது
என்னும் இடைச்சொல்லைச் சேர்த்துத் தொடர்களை மீண்டும் எழுதுக.
1.
அண்ணன் கைக்கடிகாரம் அழகாக உள்ளது.
அண்ணனது
கைக்கடிகாரம் அழகாக உள்ளது.
2.
வீரன் கையில் வேல் இருந்தது.
வீரனது
கையில் வேல் இருந்தது.
3.
என் வீட்டில் சிறிய நூலகம் உள்ளது.
எனது
வீட்டில் சிறிய நூலகம் உள்ளது.
4.
அவன் கவிதையை நான் பாராட்டினேன்.
அவனது
கவிதையை நான் பாராட்டினேன்.
5.
உன் பாட நூலை எடுத்து வா.
உனது
பாட நூலை எடுத்து வா.
கீழ்க்காணும்
தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுதுக.
அ) அன்பு ஆ)
தன்னம்பிக்கை
அன்பு
அறம் செய்ய
துணைநிற்பது அன்பு
ஆக்கம்
தருவது அன்பு
இரக்கம்
தருவது அன்பு
ஈகை வளர்ப்பது
அன்பு
உரிமை
தருவது அன்பு
ஊக்கம்
அளிப்பது அன்பு
தன்னம்பிக்கை
வெற்றி
என்பது எளிதல்ல
தோல்வியும்
நிரந்தரமில்லை
முடியும்
என்பதனை
இடைவிடாது
பயிற்சி செய்ய
துணை நிற்பது
தன்னம்பிக்கை
சரியான
இணைப்புச் சொல்லால் நிரப்புக.
(
எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லை யென்றால், மேலும் )
எ.கா:
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். ஏனெனில் அவர் எளிமையை
விரும்பினார்.
1. நாம் இனிய சொற்களைப்
பேச வேண்டும். இல்லையென்றால் துன்பப்பட நேரிடும்.
2. குயிலுக்குக் கூடு
கட்டத்தெரியாது. ஆகையால் காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
3. அதிக அளவில் மரங்களை
வளர்ப்போம் ஏனெனில் மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
4. பிறருக்குக் கொடுத்தலே
செல்வத்தின் பயன், எனவே பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
5. தமிழகத்தில் மழை
பெய்துவருகிறது. அதனால் இரண்டு நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம்
அறிவிப்பு.
சரியான
வினாச்சொல்லை இட்டு நிரப்புக.
1.
நெல்லையப்பர் கோவில் எங்கு உள்ளது?
2.
முதல் ஆள்வார்கள் எத்தனை பேர்?
3.
என்ன சொற்களைப் பேச வேண்டும்?
4.
இயேசு காவியம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
5.
தர்மம் என்பதன் பொருள் என்ன?
பின் வரும்
தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.
பூங்கொடி
தன் தோழியுடன் திங்கள்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்.
எ.கா:
பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
1.
பூங்கொடி யாருடன்
பள்ளிக்குச் சென்றாள்?
2.
பூங்கொடி எந்த நாளில்
பள்ளிக்குச் சென்றாள்?
3.
பூங்கொடி எந்த நேரத்தில்
பள்ளிக்குச் சென்றாள்?
4.
பூங்கொடி எதில் ஏறிப்
பள்ளிக்குச் சென்றாள்?
5.
பூங்கொடி எங்கு சென்றாள்?
கடிதம்
எழுதுக.
உங்கள்
ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம்
எழுதுக.
02-01-2024
ஈரோடு
அன்புள்ள
மாமாவிற்கு,
வணக்கம். இங்கு அனைவரும் நலம். நீங்கள் அனைவரும்
நலமா?. எங்கள் ஊரில் 15-01-2024 முதல் 17-01-2024 வரை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக
நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டும் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த முறை நீங்களும், உங்கள்
குடும்பத்தாரும் அவசியம் திருவிழாவில் கலந்துக் கொள்ள வேண்டும். உங்கள் வரவை எதிர்ப்பார்த்துக்
காத்து இருக்கிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
தங்கள்
உண்மையுள்ள,
இரா.முகில்
உறை
மேல் முகவரி.
பெறுதல்
இரா. கார்த்திகேயன்,
20,
பாரதியார் தெரு,
கம்பர் நகர்,
சேலம் – 636015.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும்
அறிவிப்பைப் படித்து அதன்பின் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளி.
தீ
விபத்தும் பாதுகாப்பு முறைகளும்
முன்னெச்சரிக்கை
நடவடிக்கை
Ø வீடுகளிலும்
பொது இடங்களிலும் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
Ø பொது
இடங்களில் தீத்தடுப்பு எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
Ø எச்சரிக்கை
ஒலி எவ்வாறு இருக்கும் என்பதைப் பணியாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
Ø தரமான
மின் சாதனங்களையே பயன்படுத்த வேண்டும்
Ø சமையல்
செய்யும் போது இறுக்கமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
Ø பட்டாசுகளைப்
பாதுகாப்பான இடங்களில், பெரியவர்களின் மேற்பார்வையில்தான் வெடிக்க வேண்டும்.
Ø நிறுவனங்களில்
பணிபுரியும் பணியாளர்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
Ø பொதுமக்கள்
கூடும் இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக
வெளியேறும் வகையில் அவசரகால வழிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தீ
விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை
Ø உடனடியாகத்
தீயணைப்பு மீட்புப் பணித் துறைக்குத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
Ø அவ்வாறு
தகவல் தெரிவிக்கும் பொழுது தீவிபத்து ஏற்பட்டுள்ள இடத்தினைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
Ø தீ
விபத்து ஏற்பட்டு இருக்கும் பகுதியில் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
Ø தீ
விபத்து ஏற்பட்ட உடனே அங்குள்ள தீயணைப்பான்களைக் கொண்டு ஆரம்பக் கட்டத்திலேயே தீயை
அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.
Ø உடுத்தியிருக்கும்
ஆடையில் தீப்பிடித்தால் உடனே தரையில் படுத்து உருள வேண்டும்.
Ø தீக்காயம்
பட்ட இடத்தை உடனடியாகத் தண்ணீரைக் கொண்டு குளிர வைக்க வேண்டும்.
Ø பொது
இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடைந்து ஓடாமல், அவசரகால வழியில் வெளியேற வேண்டும்.
Ø அருகில்
இருக்கும் கட்டடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும்
தீ
விபத்து ஏற்படும் போது செய்யக் கூடாதவை
Ø தீ
விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தின் மின் தூக்கியைப் பயன்படுத்தக் கூடாது.
Ø எண்ணெய்
உள்ள இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.
Ø தீக்காயம்
பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை போன்றவற்றைத் தடவக் கூடாது.
வினாக்கள்
1.
தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் யாவை?
·
தீ பாதுகாப்புக் கருவிகள்
அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
·
பொது இடங்களில் தீத்தடுப்பு
எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
·
சமையல் செய்யும் இறுக்கமான
ஆடைகள் அணிய வேண்டும்.
·
பட்டாசுகளை பாதுகாப்பான இடங்களில்
பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும்.
2.
தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?
·
தீயணைப்பு மீட்புப் பணி துறைக்கு
தகவல் தெரிவிக்க வேண்டும்.
·
மின் இணைப்பைத் துண்டிக்க
வேண்டும்.
·
ஆடையில் தீப்பிடித்தால் உடனே
தரையில் உருள வேண்டும்.
3.
பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் முறையைக் கூறுக.
·
பதற்றமடைந்து ஓடாமல் அவசர
கால வழியில் வெளியேற வேண்டும்
4.
தீ விபத்து ஏற்பட்டால் செய்யக் கூடாதவை யாவை?
·
தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தின்
மின் தூக்கியைப் பயன்படுத்தக் கூடாது.
·
எண்ணெய் உள்ள இடத்தில் ஏற்பட்ட
தீயை அணைக்க தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.
·
தீக்காயம் பட்ட இடத்தில்
எண்ணெய், பேனா மை போன்றவற்றைத் தடவக் கூடாது.
5.
உடலில் தீப்பற்றினால் செய்யவேண்டிய முதலுதவி யாது?
·
ஆடையில் தீப்பிடித்தால் உடனே
தரையில் படுத்து உருள வேண்டும்.
·
தீக்காயம் பட்ட இடத்தை உடனடியாக
தண்ணீரைக் கொண்டு குளிர வைக்க வேண்டும்
நிற்க
அதற்குத் தக
என்
பொறுப்புகள்
1.
நான் எப்போதும் எளிமையைக் கடைப்பிடிப்பேன்
2.
அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்
3.
என் பணிகளை நேர்மையாகச் செய்வேன்
4.
நான் என்றும் பொறுமையுடன் இருப்பேன்
5.
நான் எப்போதும் உண்மை மட்டுமே பேசுவேன்.
கலைச்சொல்
அறிவோம்
1. religion - சமயம்
2. simplicity- எளிமை
3. charity - ஈகை
4. dignity - கண்ணியம்
5. doctrine - கொள்கை
6. philosophy- தத்துவம்
7. HONESTY - நேர்மை
8. sincerity - வாய்மை
9. preaching- உபதேசம்
10. astronomy- வானியல்
