பருவம்
: 3 இயல் : 2
ஒப்புரவு
ஒழுகு புதுமை விளக்கு
மனப்பாடப்பாடல்
வையம்
தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய
கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர்ஆழியான்
அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி
நீங்குகவே என்று - பொய்கையாழ்வார்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
‘ இடர் ஆழி நீங்குகவே ‘- இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ________
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி இ) ஆர்வம் ஈ) இன்பம்
2.
‘ ஞானச்சுடர் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஞான + சுடர் ஆ)
ஞானச் + சுடர்
இ) ஞானம் + சுடர்
ஈ) ஞானி + சுடர்
3.
இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) இன்புஉருகு ஆ) இன்பும் உருகு
இ) இன்புருகு
ஈ) இன்பருகு
பொருத்துக.
1. அன்பு - நெய்
2. ஆர்வம் - தகளி
3. சிந்தை - விளக்கு
4. ஞானம் - இடுதிரி
விடைகள்
1. அன்பு - விளக்கு
2. ஆர்வம் - நெய்
3. சிந்தை - இடுதிரி
4. ஞானம் - தகளி
குறுவினா
1.
பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும்
அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?
பொய்கை ஆழ்வார் பூமியை
அகல்விளக்காக உருவகப்படுத்துகிறார்.
பூதத்தாழ்வார் அன்பை
அகல்விளக்காக உருவகப்படுத்துகிறார்.
2.
பொய்கையாழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?
தன்னுடைய
துன்பம் நீங்க திருமாலின் அடிகளுக்கு பாமாலை சூட்டினார்.
3.
அந்தாதி என்பது யாது?
ஒரு
பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது அந்தாதி.
சிறுவினா
1.
பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
அன்பை
அகல்விளக்காகக் கொண்டு ஆர்வத்தை நெய்யாக்கி, மனத்தை திரியாகக் கொண்டு ஞான விளக்கு ஏற்றுகிறார்.
2.
உருவக அணி எவ்வாறு அமையும்?
உவமை
வேறு, உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே எனத் தோன்றும்படி
கூறுவது உருவக அணி ஆகும்.
சிந்தனை
வினா
பொய்கையாழ்வார்
ஞானத்தை விளக்காக உருவகப் படுத்துகிறார். நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக
உருவகப்படுத்துவீர்கள்?
·
அன்பு
·
அறிவு
·
அறம்
·
கடமை
·
நேர்மை
·
உண்மை இவற்றையெல்லாம் அகல்விளக்காக
உருவகப்படுத்துவேன்.
அறம் என்னும் கதிர்
மனப்பாடப்பாடல்
இன்சொல்
விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு
வாய்மை எருவட்டி
அன்புநீர்
பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய் - முனைப்பாடியார்
________________________________________________
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகள்
எப்போதும் _______ பேசினார்
அ) வன்சொற்களை ஆ)
அரசியலை
இ) கதைகளை ஈ)
வாய்மையை
2. ‘ இன்சொல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ) இனிய + சொல் ஆ)
இன்மை + சொல்
இ) இனிமை
+ சொல் ஈ) இன் + சொல்
3.
அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்__
அ) அறகதிர் ஆ) அறு + கதிர்
இ) அறக்கதிர் ஈ) அறம்கதிர்
4.
‘ இளமை ‘ என்னும் சொல்லின் எதிர்சொல்___
அ) முதுமை
ஆ) புதுமை இ) தனிமை ஈ) இனிமை
பொருத்துக.
1. விளைநிலம் - உண்மை
2. விதை - இன்சொல்
3. களை - ஈகை
4. உரம் - வன்சொல்
விடைகள்
1. விளைநிலம் - இன்சொல்
2. விதை - ஈகை
3. களை - வன்சொல்
4. உரம் - உண்மை
நயம்
அறிக.
‘
அறம் என்னும் கதிர் ‘ செய்யுளில் அமைந்துள்ள எதுகை, மோனை, முரண் சொற்களை எடுத்து எழுதுக.
எதுகை
: இன்சொல் – வன்சொல்- அன்புநீர்
மோனை
: அன்பே – ஆர்வமே, இன்புருகு - இடுதிரியா
முரண்
: இன்சொல் x வன்சொல்
குறுவினா
1. அறக்கதிர்
விளைய எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?
உண்மை
பேசுதல்
2.
நீக்க வேண்டிய களை என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?
வன்சொல்
என்னும் களை
சிறுவினா
1. இளம்
வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன யாவை?
·
இனிய சொல் பேசுதல்
·
ஈகை வளர்த்தல்
·
உண்மை பேசுதல்
·
அன்பாக இருத்தல்
சிந்தனை வினா
1.
இளம் வயதிலேயே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?
·
இனிய சொல் பேசுதல்
·
தானம் செய்தல்
·
உண்மை பேசுதல்
·
பெரியோர் சொல் மதித்தல்
·
ஆசிரியர்களிடம் பணிவுடன்
நடத்தல்
ஒப்புரவு நெறி
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும்
ஒருவருக்காகவும் என்பது _____ நெறி
அ) தனியுடைமை ஆ) பொதுவுடைமை
இ) பொருளுடைமை ஈ) ஒழுக்கமுடைமை
2.
வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை_____என்றும் கூறுவர்
அ) மருந்து ஆ)
மருத்துவர் இ)
மருத்துவமனை ஈ)
மாத்திரை
3. உலகம்
உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன்
இ) முடியரசன் ஈ)
கண்ணதாசன்
எதிர்ச்சொற்களைப்
பொருத்துக.
1.
எளிது - புரவலர்
2.
ஈதல் - அரிது
3.
அந்நியர் - ஏற்றல்
4.
இரவலர் - உறவினர்
விடைகள்
1.
எளிது - அரிது
2.
ஈதல் - ஏற்றல்
3.
அந்நியர் - உறவினர்
4.
இரவலர் - புரவலர்
தொடரில்
அமைத்து எழுதுக.
1.
குறிக்கோள் - வாழ்க்கை
குறிக்கோள் உடையது.
2.
கடமைகள் - பெரியோரை
மதித்தல் நமது கடமை.
3.
வாழ்நாள் - என்
வாழ்நாள் முழுவதும் பிறருக்கு உதவுவேன்
4.
சிந்தித்து - எப்போதும்
சிந்தித்து செயல்பட வேண்டும்
குறுவினா
1.
பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?
பிறருக்கு
கொடுத்து மகிழ்வது
2.
பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
மற்றவர்களுக்கு
வழங்கி, மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கு உரிய
கரு
சிறுவினா
1. ஒப்புரவுக்கு
அடிகளார் தரும் விளக்கம் யாது?
உதவியைக்
கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி
பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை
உடையவராக நினைந்து,
உதவி செய்வதற்குப் பதில்
அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.
2. ஊருணியையும்
மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
|
ஊருணி |
மரம் |
|
தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக்
குடிப்பதற்கு உரிமை உடையது |
மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம் |
|
தடுப்பார் யாருமில்லை |
பழங்களைத் தருவது உரிமை |
சிந்தனை வினா
1. ஒப்புரவுக்கும்
உதவிசெய்தலுக்குமுள்ள வேறுபாடு யாது?
|
ஒப்புரவு |
உதவி |
|
உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக
நினைந்து, உதவி செய்வதற்குப்
பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும். |
இல்லை என்று கேட்போருக்கு நாமே அவருக்குத்
தேவையானதைக் கொடுப்பது உதவி செய்தல் |
உண்மை
ஒளி
1.
‘உண்மை ஒளி‘ படக்கதையைக் கதையாகச் சுருக்கி
எழுதுக.
உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் உடன்பிறந்தவர்களாகக்
கருதுவது உயர்ந்த மனிதப் பண்பு. உண்மையான அறிவு என்பது பிறருக்கு உதவும்
மனப்பான்மை. இதை விளக்கும் கதைதான்
“உண்மை ஒளி”.
ஒரு
ஜென் குரு தனது மாணவர்களிடம்
“உண்மையான ஒளி என்றால்
என்ன?” என்று கேட்கிறார்.
மாணவர்கள் வெளிச்சத்தில் பொருட்களை தெளிவாகப் பார்க்க முடியும் என்பதையே ஒளி என
நினைக்கிறார்கள். ஆனால் குரு, ஒரு
மனிதரைப் பார்த்தவுடன் ‘இவர் என் உடன்பிறந்தவர்’ என்று உணரும் மனநிலையே உண்மையான
ஒளி என்று
விளக்குகிறார். உள்ளத்தில் ஒளி இல்லையெனில் வெளிச்சமும் பயனில்லை எனக் கூறுகிறார்.
ஒருநாள்
பசியால் மயங்கி கிடந்த ஒருவனை குரு உதவ முயன்றார். ஆனால் அவன் குருவின் குதிரையைத்
திருடிச் சென்றான். பின்னர் குரு அந்த திருடனை சந்தையில் சந்தித்தார். குதிரையை
வைத்துக்கொள்ளச் சொல்லி, அது
எப்படிக் கிடைத்தது என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக் கூறினார்.
இதற்குக்
காரணமாக, ஒருவரின் தன்னலத்தால்
நல்ல மனிதப் பண்புகள் அழிந்துவிடக் கூடாது. எதிர்காலத்தில் உதவி தேவைப்படுவோருக்கு
மக்கள் உதவ மறுக்கக் கூடாது
என்று
குரு உணர்த்தினார்.
பொது
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. செல்கின்றன
என்பதற்கு உரிய பால் ___________
அ) ஒன்றன் பால் ஆ) பலவின்
பால்
இ) பலர் பால் ஈ) ஆண்பால்
2. மழை
சட சடவெனப் பெய்தது – இத்தொடரில் அமைந்துள்ளது.
அ) இரட்டைக்கிளவி ஆ) அடுக்குத்தொடர்
இ) தொழிலாகுபெயர் ஈ) பண்பாகு பெயர்
3. அடுக்குத்தொடரில்
ஒரே சொல் ______ முறை வரை அடுக்கி வரும்.
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு ஈ) ஐந்து
எதிர்
பாலுக்குரிய பெயர்களை எழுதுக.
1. மகளிர் x ஆடவர் 2. அரசன் x அரசி
3. ஆண் x பெண் 4. மாணவன் x மாணவி
5. சிறுவன் x சிறுமி 6. தோழி x தோழன்
கீழ்க்காணும்
சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.
வயல்,
முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்
|
உயர்திணை |
அஃறிணை |
|
முகிலன் |
வயல் |
|
கயல்விழி |
குதிரை |
|
தலைவி |
கடல் |
|
ஆசிரியர் |
புத்தகம் |
|
சுரதா |
மரம் |
பின்வரும்
தொடர்களில் மூவிடப் பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.
|
வ. எண் |
வாக்கியம் |
தன்மை |
முன்னிலை |
படர்க்கை |
|
1 |
எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது. |
எங்கள் |
— |
— |
|
2 |
இவர் தான் உங்கள் ஆசிரியர். |
— |
உங்கள் |
இவர் |
|
3 |
நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை. |
எனக்குப் |
நீர் |
— |
|
4 |
எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை. நீயே கூறு. |
எனக்கு |
நீயே |
அது |
|
5 |
உங்களோடு நானும் உணவு உண்ணலாமா? |
நானும் |
உங்களோடு |
— |
குறு
வினா
1.
உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை? அவை யாவை?
Ø மூன்று
Ø ஆண்பால்,
பெண்பால், பலர்பால்
2.
‘ நான் வந்தேன் ‘ என்னும் தன்மை ஒருமை தொடரை, தன்மைப் பன்மை அமைந்த தொடராகவும் முன்னிலை
ஒருமை அமைந்த தொடராகவும் மாற்றுக.
|
வகை |
தொடர் |
|
தன்மை பன்மை |
நாங்கள் வந்தோம் |
|
முன்னிலை ஒருமை |
நீ வந்தாய் |
3.
இரட்டைக்கிளவி என்பது யாது? சான்று தருக.
இரட்டையாக
இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக் கிளவி என்பர்.
4.
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் இரண்டினை எழுதுக.
|
இரட்டைக்கிளவி |
அடுக்குத்தொடர் |
|
Ø பிரித்தால் பொருள் தராது |
Ø பிரித்தால் பொருள் தரும் |
|
Ø ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே அடுக்கி
வரும். |
Ø இரண்டு முதல் நான்கு முறை அடுக்கி வரும். |
மொழியை ஆள்வோம்
படத்திற்குப்
பொருத்தமான திணையை எழுதுக.
![]() |
|||||
![]() |
|||||
![]() |
|||||
உயர்
திணை அஃறிணை உயர்திணை
படத்திற்குப்
பொருத்தமான பாலை எழுதுக.
![]() |
![]() |
||||
![]() |
|||||
ஒன்றன்
பால் ஆண்பால் ஒன்றன் பால்
![]() |
பலர்
பால் பலவின்
பால்
கட்டுரை
எழுதுக
ஒற்றுமையே உயர்வு
குறிப்புச்சட்டம்
|
முன்னுரை |
|
ஒற்றுமையின்
பயன்கள் |
|
ஒற்றுமையின்
முக்கியத்துவம் |
|
முடிவுரை |
முன்னுரை
உலகின் அமைதியும் வளர்ச்சியும் மனிதர்களின்
ஒற்றுமையில்தான் உள்ளது. அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தால் நாடும் உலகமும் சிறப்பாக
வளர்ச்சி அடையும்.
ஒற்றுமையின்
பயன்கள்
ஒற்றுமை இல்லாதபோது பணம், மதம், அந்தஸ்து
போன்ற காரணங்களால் பிரிவுகள் ஏற்படுகின்றன. குடும்பத்தில் உள்ள ஒற்றுமை ஊர், நாடு, உலகம்
என விரிந்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதில் கல்வியின் மதிப்பும் வெளிப்படும்.
ஒற்றுமையின்
முக்கியத்துவம்
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்
கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். அனைவரும் சமம் என்ற
எண்ணமே உலக அமைதிக்குத் துணை நிற்கும்.
முடிவுரை
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற
பாரதியாரின் கருத்துப்படி, உதவி, இரக்கம், விட்டுக்
கொடுக்கும் மனப்பான்மை போன்ற நல்ல குணங்களை வளர்த்து ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்த
வாழ்க்கை.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும்
படங்கள் சார்ந்த சொற்களை எழுதுக.
எ.கா : கரும்பலகை, வகுப்பறை
மாணவர்கள், ஆசிரியர்கள்,
பாடங்கள்,
புத்தகம்,
தேர்வுகள், முதல் மதிப்பெண்,
தலைமை ஆசிரியர், விளையாட்டு
எ.கா:
மரம், நடைபாதை
சறுக்கல்
விளையாட்டு, தென்றல்
பூங்கா,
பூக்கள், குழந்தைகள்
கீழ்க்காணும்
சொற்களைப் பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படுத்தி தொடர்கள் உருவாக்குக.
(
விதை, கட்டு, படி, நிலவு, நாடு, ஆடு )
![]()
எ,கா:
விதை விதை
நெல் வாங்கினான்
சோளம்
விதைத்தான்
கட்டு
– கட்டுமரம் கடலில் பயணம் செய்ய உதவும்
இராமன் வீட்டைக் கட்டினான்,
படி
- மாடிப்படியில் குமரன் ஏறினான்
குமரன் தேர்வுக்குப் படித்தான்
நிலவு
– வெண்ணிலவு இரவில் வானத்தில் தெரியும்.
ஊரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
நாடு
- இந்தியநாடு
மொழிகளின் காட்சி சாலையாக திகழ்கிறது.
தவறு ஏற்பட்டின் அதற்காக தீர்வை நாடு.
ஆடு
– ஆடு வயலில் மேய்கிறது.
அவன் போடும் தாளத்திற்கு நீ ஆடு
நிற்க
அதற்குத் தக
என் பொறுப்புகள்
1. எந்தச் சூழ்நிலையிலும் இனிய சொற்களையே பேசுவேன்
2. அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வேன்
3. என் வாழ்வில் எளிமையைக் கடைப்பிடிப்பேன்
4. திருக்குறள் கூறும் ஒப்புரவு நெறியைப் பின்பற்றி நடப்பேன்
கலைச்சொல் அறிவோம்.
1. OBJECTIVE
- குறிக்கோள்
2. WEALTH
- செல்வம்
3. AMBITION
- இலட்சியம்
4. COMMUNISM
- பொதுவுடைமை
5. RESPONSIBILITY
- கடமை
6. NEIGHBOUR
– அயலவர்
7. POVERTY
– வறுமை
8. RECIPROCITY–
ஒப்புரவு நெறி
9. COURTESY - நற்பண்பு






