இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
பருவம்
: 3 இயல் : 1
நயத்தகு
நாகரிகம் விருந்தோம்பல்
மனப்பாடப்பாடல்
மாரியொன்று இன்றி
வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு
– நீர் உலையுள்
பொன்திறந்து கொண்டு
புகாவாக நல்கினாள்
ஒன்றுறா
முன்றிலோ இல் - முன்றுறை அரையனார்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மரம் வளர்த்தால் _________ பெறலாம்
அ) மாறி ஆ) மாரி இ) காரி ஈ)
பாரி
2. ‘ நீருலையில்
‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _
அ) நீரு +
உலையில் ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில் ஈ) நீரு + இலையில்
3. மாரி
+ ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___
அ) மாரியொன்று ஆ) மாரிஒன்று
இ) மாரியின்று ஈ)
மாரியன்று
குறுவினா
1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக
அங்கவை,
சங்கவை
2.
‘ பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை ‘ – எவ்வாறு?
பாரிமகளிர் உலைநீரில்
பொன் இட்டு தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை என்பதனை அறியலாம்.
சிந்தனை வினா
1. தமிழர்களின்
பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.
·
ஒழுக்கத்தைப் பேணுதல்
·
நன்றியுடன் இருத்தல்
·
பெரியோரை மதித்தல்
·
ஈகை குணத்தோடு இருத்தல்.
·
விருந்தோம்பலை பேணுதல்
திக்கெல்லாம் புகழுறும்
திருநெல்வேலி
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
திருநெல்வேலி _______ மன்னர்களோடு தொடர்புடையது.
அ) சேர ஆ) சோழ
இ) பாண்டிய ஈ) பல்லவ
2.
இளங்கோவடிகள் ______ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
அ) இமய ஆ) கொல்லி
இ) பொதிகை ஈ) விந்திய
3.
திருநெல்வேலி _______ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிரி ஆ) வைகை
இ) தென்பெண்ணை ஈ) தாமிரபரணி
பொருத்துக.
1. தண்பொருநை - பொன் நாணயங்கள்
உருவாக்கும் இடம்
2. அக்கசாலை -
குற்றாலம்
3. கொற்கை -
தாமிரபரணி
4. திரிகூடமலை -
முத்துக் குளித்தல்
விடை
1. தண்பொருநை -
தாமிரபரணி
2. அக்கசாலை -
பொன் நாணயங்கள் உருவாக்கும்
இடம்
3. கொற்கை -
முத்துக் குளித்தல்
4. திரிகூடமலை -
குற்றாலம்
குறுவினா
1.
தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
பச்சையாறு,
மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி
2.
கொற்கை முத்து பற்றி எழுதுக
கொற்கையில்
விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
சிறுவினா
1. திருநெல்வேலி பகுதியில் நடைபெறும் உழவுத்தொழில்
குறித்து எழுதுக.
·
தாமிரபரணி ஆற்றின் மூலம்
உழவுத் தொழில் நடைபெறுகின்றது.
·
குளத்துப் பாசனமும், கிணற்றுப்
பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன.
·
இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது.
2.
திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.
Ø அகத்தியர்
பொதிகை மலையில் வாழ்ந்தார்.
Ø திருநெல்வேலி
சீமையில் பல சிறந்த தமிழ் புலவர்கள் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்தனர்.
Ø ஜி.யு.
போப், கால்டுவெல்,
வீரமாமுனிவர்
போன்ற வெளிநாட்டு அறிஞர்களையும் தமிழின் மீது ஈர்த்த பெருமை திருநெல்வேலிக்கு
உள்ளது.
3. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றி
எழுதுக.
Ø நெல்லை
நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
Ø நகரின்
நடுவில் நெல்லையப்பர் கோவில் உள்ளது.
Ø கோவிலைச்
சுற்றி மாடவீதிகளும், அழகான
தேரோடும் வீதிகளும் உள்ளன.
சிந்தனை வினா
1. மக்கள்
மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
- இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.
- அனைத்துப் பொருட்களும் அருகில்
கிடைக்கும் படி இருக்க வேண்டும்.
- சாதி மத பேதமின்றி
மதநல்லிணக்கத்தைப் போற்றும் படியாக இருக்க வேண்டும்.
- சுற்றுப்புறத்தூய்மை உடையதாக
இருக்க வேண்டும்.
- குடிக்கும் நீருக்கு பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும்.
திருநெல்வேலிச் சீமையும்
கவிகளும்
1.
டி,கே.சி குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
• கடிகை முத்துப்புலவர் திருநெல்வேலியில் வாழ்ந்து வெங்கடேசுர எட்டப்ப
ராஜாவைப் பற்றி பாடல்கள் பாடினார்.
• பிள்ளைப் பெருமாள் சீவைகுண்டத்து பெருமாளை போற்றி பாடினார்.
• நம்மாழ்வார் விஷ்ணுவைப் பற்றி பாடல்கள் பாடினார்.
• உமறுப்புலவர் சீறாப்புராணம் என்ற நூலை எழுதியவர்.
• உமறுப்புலவரை ஆதரித்தவர் சீதக்காதி ஆவார்.
• அழகிய சொக்கநாதர் சங்கரன் கோயிலில் உள்ள கோமதித் தாயைப் பற்றி பாடல்கள்
பாடப்பட்டன.
• அண்ணாமலையார் கழுகுமலை முருகனைப் பற்றி காவடிச் சிந்தை பாடினார்.
• திருக்கருவை வெண்பா அந்தாதி போன்ற நூல்கள் கருவை நல்லூரை பற்றி
எழுதப்பட்டவை.
• திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி என்ற நூலை இயற்றினார்.
• இவ்வாறு பல புலவர்கள் திருநெல்வேலியில் தோன்றி தமிழை வளர்த்தனர்.
வழக்கு
பொருத்துக.
1.
பந்தர் - முதற்போலி
2.
மைஞ்சு - முற்றுப்போலி
3.
அஞ்சு - இடைப்போலி
4.
அரையர் - கடைப்போலி
விடை
1.
பந்தர் - கடைப்போலி
2.
மைஞ்சு - முதற்போலி
3.
அஞ்சு - முற்றுப்போலி
4.
அரையர் - இடைப்போலி
குறு
வினா
1.
வழக்கு என்றால் என்ன?
நம் முன்னோர்
எந்த சொற்களை எந்த பொருளில் பயன்படுத்தினார்களோ, அதே
பொருளில் நாமும் பயன்படுத்துவதே வழக்கு ஆகும்.
2.
இலக்கணப்போலி என்றால் என்ன?
இலக்கண முறைப்படி
அமையாவிட்டாலும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக்கொள்ளப்படும்
சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
3.
தகுதி வழக்கின் வகைகள் யாவை?
Ø இடக்கரடக்கல்
Ø மங்கலம்
Ø குழூஉக்குறி
4. வாழைப்பழம்
மிகவும் நஞ்சு விட்டது. இத்தொடரில் இடம் பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான
சொல்லை எழுதுக.
|
போலிச் சொல் |
சரியான சொல் |
|
நஞ்சு |
நைந்து |
மொழியை ஆள்வோம்
இன்
அல்லது இல் என்னும் இடைச்சொல்லைச் சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.
1.
இந்தியா கிழக்கே வங்கக் கடல் உள்ளது.
இந்தியாவின்
கிழக்கே வங்கக் கடல் உள்ளது.
2.
அழகு சிறந்தது மயில்
அழகில்
சிறந்தது மயில்
3.
சந்தக் கவிதை பாடுவது வல்லவர் அருணகிரிநாதர்
சந்தக்
கவிதை பாடுவதில் வல்லவர் அருணகிரிநாதர்
4.
தேன் சுவையை உடையது இக்கனி.
தேனின்
சுவையை உடையது இக்கனி.
5.
மலை உயரம் இந்தப் பனைமரம்.
மலையின்
உயரம் இந்தப் பனைமரம்.
6.
அறநூல்கள் சிறந்தது திருக்குறள்.
அறநூல்களில்
சிறந்தது திருக்குறள்.
பாடலைப்
படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-
பனை
மரமே பனை மரமே
ஏன்
வளந்தே இத் தூரம்?
குடிக்கப்
பதனியானேன்!
கொண்டு
விற்க நுங்கானேன்!
தூரத்து
மக்களுக்குத்
தூதோலை
நானானேன்!
அழுகிற
பிள்ளைகட்குக்
கிலுகிலுப்பை
நானானேன்!
கைதிரிக்கும்
கயிறுமானேன்!
கன்றுகட்டத்
தும்புமானேன்!
வினாக்கள்
1.
பனைமரம் தரும் உணவுப் பொருட்கள் யாவை?
நுங்கு,
பதனி
2.
பனை மரம் யாருக்கு கிலுகிலுப்பையைத் தரும்?
அழுகிற
பிள்ளைகளுக்கு.
3.
‘ தூதோலை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
தூது + ஓலை
4.
பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருட்களைப் பட்டியலிடுக.
ஓலை,
கயிறு, தும்பு, கிலுகிலுப்பை
5.
பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
பனைமரம்
பின்வரும்
தலைப்பில் கட்டுரை எழுதுக.
என்னைக் கவர்ந்த நூல்
முன்னுரை
தமிழ் நூல்களில் மிகவும்
சிறந்ததாக திருக்குறள் விளங்குகிறது. அதன் சிறப்புகளை அறியவே இந்தக் கட்டுரை
எழுதப்பட்டுள்ளது.
நூல் அமைப்பு
திருக்குறள் குறள்
வெண்பாக்களால் அமைந்தது.
ஒவ்வொரு குறளிலும் ஏழு சொற்கள் உள்ளன.
அந்த ஏழு சொற்களிலேயே ஆழ்ந்த கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
அதிகாரங்கள்
திருக்குறள் மூன்று
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவை அறம், பொருள், இன்பம்
ஆகும்.
மொத்தம் 1330 குறள்கள் இதில் உள்ளன.
சிறப்புகள்
திருக்குறளில் ‘தமிழ்’ என்ற
சொல் இல்லை.
1812ஆம் ஆண்டு முதன்முதலில் அச்சிடப்பட்டது.
இதில் சுமார் 14,000 சொற்கள் உள்ளன.
‘ஒள’ என்ற உயிரெழுத்து பயன்படுத்தப்படவில்லை.
விரும்பக் காரணம்
திருக்குறள் பல மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனிதன் நல்ல வாழ்க்கை நடத்த வேண்டிய வழிகளை கூறுகிறது.
முடிவுரை
திருக்குறள் உலகப் பொதுமறையாக
மதிக்கப்படுகிறது.
எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய புனித நூலாக இதை கருத வேண்டும்.
மொழியோடு விளையாடு
தொடருக்குப்
பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக
1.
என் தாயார் என்னை கண்ணை இமை காப்பது போல
காத்து
வளர்த்தார்.
(
கண்ணை இமை காப்பது போல / தாயைக் கண்ட சேயைப் போல )
2.
நானும் என் தோழியும் நகையும் சதையும் போல இணைந்து இருப்போம்
(
இஞ்சி தின்ற குரங்கு போல / நகமும் சதையும் போல )
3.
திருவள்ளுவரின் புகழை உள்ளங்கை நெல்லிக்கனி போல
உலகமே
அறிந்துள்ளது.
(
எலியும் பூனையும் போல / உள்ளங்கை நெல்லிக்கனி போல)
4.
அப்துல் கலாமின் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கு
போல உலகெங்கும் பரவியது.
(
குன்றின் மேலிட்ட விளக்கு போல / குடத்துள் இட்ட விளக்கு போல )
5.
சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் பசுமரத்தாணி
போல என் மனத்தில் பதிந்தன.
(
கிணற்றுத்தவளை போல / பசுமரத்தாணி போல )
கொடுக்கப்பட்டுள்ள
ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.
எ.கா
:- திருநெல்வேலி – திரு, நெல், வேலி, வேல்
1.
நாகப்பட்டிணம் – நாகம், பட்டிணம், பட்டி, நாம்
2. கன்னியாகுமரி
– கன்னி, குமரி, கரி
3. செங்கல்பட்டு - செங்கல், பட்டு, கல், கட்டு
4. உதக மண்டலம் –
மண்டலம், கமண்டலம், உலகம், உண்
5. பட்டுக்கோட்டை
– பட்டு, கோட்டை, படை, கோடை
நிற்க
அதற்குத் தக.
1. நகரங்களின் சிறப்புத்
தன்மையை அறிந்து போற்றுவேன்.
2. ஒவ்வொரு ஊரிலும்
நடைபெறும் தொழில்களின் சிறப்பை அறிந்து தொழில் செய்வோரை மதிப்பேன்,
3. என் நகரின் தூய்மை
பேணுவேன்.
4. என் நகரின் சிறப்புகளை
எல்லோருக்கும் கூறுவேன்
கலைச்சொல்
அறிவோம்
1. CIVILIZATION – நாகரிகம்
2. IRRIGATION - நீர்ப்பாசனம்
3. AGRICULTURE – வேளாண்மை
4. CULTIVATION - பயிரிடுதல்
