பத்தாம்
வகுப்பு
மாதிரி
திருப்புதல் மற்றும் பொதுத் தேர்வு-6- 2025
மொழிப்பாடம்
– தமிழ்
மீத்திற
மாணவர்கள் – சிறப்பு வினாத்தாள்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
அறிவுரைகள்
:
1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச்
சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே
எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்
பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்
வேண்டும்.
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன்
விடையினையும் சேர்த்து எழுதவும்.
அ) சரியான விடையைத் தேர்வு
செய்க. 15×1=15
1. “மொழிஞாயிறு” என்று அழைக்கப்படுபவர் .
அ) தேவநேயப்பாவாணர் ஆ) கண்ணதாசன்
இ) இளங்கோவடிகள் ஈ) பெருஞ்சித்திரனார்
2. “சீவலமாறன்” என்ற பட்டப் பெயர் கொண்டவர்_______
அ) குமரகுருபரர் ஆ) அதிவீரராம பாண்டியர் இ) கீரந்தையார் ஈ) கண்ணதாசன்
3. “சாரைப்பாம்பு” எவ்வகைத் தொகை தேர்ந்தெடுக்க______
அ) பண்புத்தொகை ஆ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
4. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) என்று கூறியவர்______
அ) திருவள்ளுவர்
ஆ) பாரதியார் இ) கண்ணதாசன் ஈ) இளங்கோவடிகள்
5. ஒரு ஆண்டின் ஆறு கூறுகள் _____
அ) பொழுது ஆ) பெரும்பொழுது இ) சிறுபொழுது ஈ) உரிப்பொருள்
6. கண்ணதாசனின் இயற்பெயர்____
அ) முகம்மது ரஃபி ஆ) முத்தையா இ) துரை
மாணிக்கம் ஈ) கணமுத்தையா
7. நாடகக்கலை மீட்டெடுப்பதை தமது குறிக்கோள் என்றவர்
___
அ) கண்ணதாசன் ஆ) இளங்கோவடிகள் இ) ந.
முத்துச்சாமி ஈ) கம்பன்
8.”காலம் கரந்த பெயரெச்சம்” என்று அழைக்கப்படும் தொகை —------
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை
இ) உம்மைத்தொகை ஈ) வினைத்தொகை
9. அகத்திணைக்குள் அடங்காதன எல்லாம் _____
அ) அகத்திணை ஆ) புறத்திணை இ) ஐந்திணை ஈ) உயர்திணை
10. தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பேருள்ளம் கொண்டவர்______
அ) கபிலர் ஆ) பெருந்தலைச் சாத்தனார் இ) பெருஞ்சித்திரனார் ஈ) நக்கீரர்
11.கம்பர் பிறந்த ஊர் _____
அ) திருவழுந்தூர்
ஆ) திருமறைக்காடு இ) வேதாரண்யம் ஈ) சிறுகூடல்
பட்டி
பாடலைப்
படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
நந்தின் இளஞ்சினையும்
புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும்_ சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு.
12. குவிமொட்டு_ இலக்கணக்குறிப்புத் தருக____
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) அளபெடை ஈ) உம்மைத்தொகை
13. “முத்தம்” என்பதன் பொருள்”- என்பதன் பொருள்_
அ) சேறு ஆ) முத்து இ) பாக்கு ஈ) சங்கு
14. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அணி ____
அ)உவமை அணி ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ)
தற்குறிப்பேற்ற அணி
15. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகை____
அ) நந்தம்-நகை ஆ)சிந்தி-தென்னன் இ) நந்தின்-பந்தர் ஈ) நகை-முத்த
பகுதி-II (மதிப்பெண்:18)
பிரிவு-1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடை யளிக்கவும். (21 -வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவும்).
(4x2=8)
16. விடைக்கேற்ற வினா அமைக்கவும்.
அ) புறத்திணை பன்னிரெண்டு வகைப்படும்.
ஆ) பெருநாவலர் தெய்வப்புலவர் என்று
அழைக்கப்படுபவர் திருவள்ளுவர்.
17. போர் அறம் என்றால் என்ன?
18.வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி
என்பதற்குச் சான்று தருக.
19. இரட்டைக் காப்பியங்கள் யாவை?
20. கம்பரின் பெருமை மிக்க தொடர்கள் யாவை?.
21. “வினை” என முடியும் குறளை எழுதுக.
பிரிவு-2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5x2=10)
22.வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை
இணைத்து எழுதுக.
அ) பொதுஅறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
ஆ) நேற்று என்னை சந்தித்தார். அவர் என் நண்பர்.
23. பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக்
கண்டறிந்து எழுதுக.
கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை
எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜாவது ஆசுகவியை
24. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
அ) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்
ஆ)கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
25. படிப்போம் பயன்படுத்துவோம். அ)Border ஆ)Feast
26. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத்
திருத்தி எழுதுக.
அ) உழவர்கள் மலையில் உழுதனர்.
ஆ) முல்லை பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
27. தொடரை படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கல் சிலை ஆகுமெனில், நெல்_____ ஆகும்.
ஆ) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன்_____
28. ஐந்திணையின் சிறுபொழுதுகளை மட்டும் எழுதுக.
பகுதி-III (மதிப்பெண்:18)
பிரிவு-1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக
விடையளிக்கவும். (2x3=6)
29.வாய்மை பற்றிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை
எழுதுக.
30. உரைப்பத்தியைப் படித்து விடை தருக.
தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு
வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர்
என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு,
முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். ‘விருந்தே புதுமை’ என்று
தொல்காப்பியர் கூறியுள்ளார்.
அ) விருந்தே புதுமை என்று கூறியவர்?
ஆ) விருந்தோம்பல் என்றால் என்ன?
இ) விருந்தினர் என்றால் என்ன?
31. மார்ஷல் ஏ. நேசமணி குறிப்பு வரைக.
பிரிவு-2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
வினாஎண்: 34- வது வினாவிற்கு
கட்டாயமாக விடையளிக்கவும் (2x3=6)
32. மருத நிலத்தில்
இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.
33. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர்வழி
நின்று விளக்குக.
34.அ) “அள்ளல்” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக. (அல்லது)
ஆ) “தென்னன்”
எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
பிரிவு-3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.
(2x3=6)
35. வெண்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
36. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன
செய்தொழுக தான். – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
37. அஞ்சும்
அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம்
எளியன் பகைக்கு. - இக்குறட்பாவிற்கு அலகிட்டு
வாய்பாடு தருக.
பகுதி-IV
(மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்கவும்.
(5x5=25)
38.அ) சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம்
வழி விளக்குக. (அல்லது)
ஆ) கருணையனின்
தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற ஊமைகளாலும் உருவக மலர்களால் நிகழ்த்திய
கவிதாஞ்சலியை விவரிக்க.
39.அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘உழவுத் தொழிலுக்கு
வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக்
கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) பள்ளி செல்லாமல் வேலைக்குச் சென்றுக் கொண்டிருக்கும்
பத்தாம் வகுப்பு பயிலும் உன் மாமாவின் மகனுக்கு கல்வி இன்றியமையாமையைப் பற்றி அறிவுரைக்
கூறி கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
![]() |
41.தஞ்சாவூர் மாவட்டம் 5-வது தெரு, காந்தி வீதியில்
வசிக்கும் தமிழ்ச்செல்வன் மகள் தமிழரசி பத்தாம் வகுப்பை தமிழ் வழியில் அரசு உயர்நிலை
பள்ளியில் படித்து தற்போது மேல்நிலை வகுப்பில் உயிரி அறிவியல் பிரிவில் சேர விரும்புகிறார்
தேர்வர் தன்னை தமிழரசியாகப் பாவித்துப் படிவத்தை நிரப்புக.
42.மொழிபெயர்க்க.
அ) Language is the road map of a culture. It
tells you where its people come from and where they are going _Rita Mae Brown
ஆ) Tomorrow is often dag the busiest day of the
week _Spanish Proverb
இ) It is during our darkest moments that we must
focus to see the light ._Aristotle
ஈ) Education is what remains after one has
forgotten what are one has learned in
school._ Albert Einstein
உ) success is not final, failure is not fatal.
It is the courage to continue that counts. Win-Ston Churchill. (அல்லது)
ஆ) பள்ளியிலும் வீட்டிலும் நடந்து கொள்ளும் முறைகளைப்
பற்றி பட்டியலிட்டு எழுதுக.
பகுதி-V ( மதிப்பெண்கள்:24)
அனைத்து வினாக்களுக்கும்
விரிவான விடையளிக்கவும்.(3x8=24)
43.அ) நாட்டுவளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை
பாவாணர் வழிநின்று விளக்குக.
(அல்லது)
ஆ) போராட்டக் கலைஞர்- பேச்சுக்கலைஞர்- நாடகக் கலைஞர்-
திரைக்கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
44.அ) பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக்
கதையைச் சுருக்கி எழுதுக.
(அல்லது)
ஆ) “பிரும்மம்” கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம்
உயிர் போல நேசிக்கும் பண்பினை விவரிக்க.
45.அ) சான்றோர் வளர்த்த தமிழைக் கட்டுரையாக எழுதுக. (அல்லது)
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதித் தலைப்பிடுக.
குறிப்புகள்: முன்னுரை- சாலைப் பாதுகாப்பு
உயிர்ப் பாதுகாப்பு- சாலை விதிகள் ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளைத் தவிர்ப்போம்,
விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.

