10TH-TAMIL-MODEL PUBLIC EXAM AND REVISION QUESTION-5-2025

 

திருப்புதல் மற்றும் பொதுத் தேர்வு - 25-26

பத்தாம் வகுப்பு

மாதிரி அரையாண்டு,திருப்புதல் மற்றும் பொதுத் தேர்வு-5- 2025

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                         மதிப்பெண் : 100

அறிவுரைகள் :

1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்  உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்    

பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

              ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்

                வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )             

           i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்

   குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                            15×1=15

1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்

   அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___

) இலையும்,சருகும்                 ) தோகையும் சண்டும்  

) தாளும் ஓலையும்                  ) சருகும் சண்டும்

2. மணிமேகலையின் ஆசிரியர்__________________

அ) இளங்கோவடிகள்  ஆ) சீத்தலைச் சாத்தனார்  இ) தனிநாயகம் ஈ) பரணர்

3. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

அ) நிலத்திற்கேற்ற விருந்து                 ஆ) இன்மையிலும் விருந்து         

இ) அல்லிலும் விருந்து                        ஈ) உற்றாரின் விருந்து

 4. பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்_____

அ) புதுமை   ஆ) விண்மீன்       இ) நறுமணம்        ஈ) காற்று

5. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்

    குரிமை உடைத்திவ் வுலகு- இக்குறளில் ‘ கடமை ‘ குறிக்கும் சீரைத் தேர்க

) சிதையாமல்      ) கண்ணோட               ) வல்லார்            ) கருமம்

6. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்             ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்           ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

7. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் -    1. மேற்கு      ஆ) கோடை -        2. தெற்கு

இ) வாடை    -        3. கிழக்கு     ஈ) தென்றல் -        4. வடக்கு

அ) 1,2,3,4    ஆ) 3,1,4,2              இ) 4,3,2,1     ஈ) 3,4,1,2

8. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் __

அ) அகவற்பா         ஆ) வெண்பா           இ) வஞ்சிப்பா       ஈ) கலிப்பா

9. குட்டி இளவரசன் – என்ற நூலின் ஆசிரியர்–

) வல்லிக்கண்ணன்   ) வெ.ஸ்ரீராம்  ) மா.நன்னன்  ) உதய சங்கர்

10. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….

          அ) உழவு,மண்,ஏர்,மாடு    ஆ) மண்,மாடு,ஏர்,உழவு   

இ) உழவு,ஏர்,மண்,மாடு     ஈ) ஏர்,உழவு,மாடு,மண்

11. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ______ இடைக்காடனாரிடம் அன்பு

  வைத்தவர்______

அ) அமைச்சர், மன்னன்             ஆ) அமைச்சர், இறைவன்

இ) இறைவன், மன்னன்             ஈ) மன்னன், இறைவன்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித்

திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான் நாடு

12) இப்பாடலில் சிறப்பிக்கப்படும் நாட்டின் வளம்

அ) தமிழ்நாடு   ஆ) சேரநாடு        இ) பாண்டிய நாடு             ஈ) சோழநாடு

13) கமுகு என்பதன் பொருள்

         அ) வாழை              ஆ) பாக்கு              இ) முத்து               ஈ) சங்கு

14) குவிமொட்டு என்பதன் இலக்கணக் குறிப்பு

         அ) பண்புத் தொகை         ஆ) உவமைத் தொகை

          இ) உருவகம்                   ஈ) வினைத்தொகை

15) இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனை சொற்கள்

         அ) இளஞ்சினைஇளங்கமுகு           ஆ) நந்தின் – பந்தர்

          இ) தென்னன் – வெண்குடையான்      ஈ) திகழ்முத்தம் – நகைமுத்த

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.              4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும்.

ஆ.குழந்தையின் தலை5 -6ஆம் மாதங்களில் மென்மையாக அசைவது செங்கீரைப் பருவம் என்பர். 

17.  குறிப்பு வரைக – அவையம்.

18. பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்களில் எவையேனும் நான்கினை குறிப்பிடுக்

19. உறங்குகின்ற கும்பகன்ன’ எழுந்திராய் எழுந்திராய்’

     காலதூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘ கும்பகன்னனை என்ன சொல்லி       

     எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

20. நச்சப் படாதவன் செல்வம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

21.  ‘ பல்லார் ‘ எனத் தொடங்கும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                       5×2=10

22. கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.

          அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.

          ஆ) “ இந்த கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அனைவரும் ஏற்பர் “ என்றுவ் கூறினான்.

23. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

          பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : உரைத்த

25. சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

26. “எழுது என்றாள் “ என்பது விரைவு காரணமாக “ எழுது எழுது என்றாள் “ என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

27. படிப்போம்;பயன்படுத்துவோம்!

          அ) House warming             ஆ) Rebellion

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழ்துக.

   அ) குயில்களின் கூவலிசை; புள்ளினங்களின் மேய்ச்சலும்; இலைகளின் அசைவுகள்; சூறைக்காற்றின் ஆலோலம்.

 ஆ) கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது; வானம் இருண்டது; வாடைக் காற்று வீசியது.

( காற்றின் பாடல், மொட்டின் வருகை, வனத்தின் நடனம், மிதக்கும் வாசம்)

28. வழுவமைதி என்பது யாது?

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                    2×3=6

29. ‘ தனித்து உண்ணாமை ‘ என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.

30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

         ‘ உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஒளவையார்.இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார். பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர். தன்னை நாடி வந்த பரிசலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் கொடுப்பவன் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.

அ. அதியன் குறித்து ஒளவையார் கூறுவது யாது?

ஆ. குமணன் வருந்த காரணமாக பெருந்தலைச் சாத்தனார் கூறுவது யாது?

இ. திருமுடிக்காரிக் குறித்து கபிலர் கூறுவது யாது?

31. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                     2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

33. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.

34. அ) “தென்னன் மகளே“ எனத் தொடங்கும்  பெருஞ்சித்திரனார்  பாடலை  எழுதுக. (அல்லது)

      ஆ) “ நவமணி ” எனத் தொடங்கும் தேம்பாவணி பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                  2×3=6

35. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

      கோலொடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

36. ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

37. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

      பேணித் தமராக் கொளல்   - இக்குறளை அலகிட்டு வாய்பாடு தருக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                5×5=25

38. அ) இறைவன்,புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக ( அல்லது )

ஆ) வள்ளுவம்,சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

39. அ) மாநில அளவில் நடைபெற்ற ‘ கலைத்திருவிழா ‘ போட்டியில் பங்கேற்று ‘ கலையரசன் ‘ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.       ( அல்லது )

ஆ. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுக.

40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

41. 1035670 பதிவெண் கொண்ட  அறிவழகனின்  15 வயது மகன் அன்பழகன், தமிழ் – 98, ஆங்கிலம் -96, கணிதம் -95, அறிவியல் -97, சமூக அறிவியல் – 92 மதிப்பெண்கள் பெற்று சேலம் மாவட்டத்தில் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேதியியல் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேர விரும்புகிறார். உரிய படிவத்தை நிரப்புக.

42. அ) வீட்டிலும், பள்ளியிலும் நீங்கள் நடந்துக் கொள்ளும் விதம் குறித்து எழுதுக (அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          விளை பொருள்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகிறது. தமிழ்நாட்டில் பலவகைத் தானியங்கள் விளைகின்றன. குறிப்பாக, இங்கு ஏராளமான நெல்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை எனப் பலவகைகள் விளைகின்றன. அவற்றுள் சம்பா நெல்வகையின் சில பெயர்களைத் தெரிந்து கொள்வோம். ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச் சம்பா போன்ற வகைப்பெயர்கள் சொல்வளத்தை உணர்த்த உதவுகின்றன. மேலும், வரகு, காடைக்கண்ணி, குதிரை வாலி முதலிய தானியங்கள் தமிழ்நாட்டைத் தவிர  வேறெங்கும் விளைவதில்லை.

( I ) சொல் வளம் எவ்வாறு பெருகிறது?

( ii ) நெல்லில் விளையும் பலவகை நெல்கள் யாவை?

( iii ) சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல்வகைகள் பற்றிக் கூறுக

( iv ) தமிழ்நாட்டில் விளையும் சிறுகூலங்கள் யாவை?

( v )  இவ்வுரைப் பத்திக்கு ஏற்றத் தலைப்பு தருக.

                                                        பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                 3×8=24

43.அ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக. (அல்லது)

ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்  கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.  (அல்லது)

ஆ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

45.அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக,  (அல்லது)

ஆ)  குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம் மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

 


PDF Timer Download

00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post