6th Std Tamil –3rd-term-மொழித் திறன் | All Questions & Answers-25-26

 

மொழியை ஆள்வோம்       

அ) கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார் . அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் ”சுதேசி நாவாய்ச் சங்கம் ” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?

வ.உ.சிதம்பரனார்

2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?  - பாரதியார்

3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்? – பாரதியார்

4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை? – எழுத்தாளர்,வழக்கறிஞர்,பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர்

5. வ. உ. சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை? – தமிழ் , ஆங்கிலம்.

 

சுட்டுச்சொற்களை தொடரில் அமைத்து எழுதுக.

அ) அந்த – கடை அந்தப் பக்கம் உள்ளது.

ஆ) இந்த – ஊருக்கு இந்தப் பக்கம் போக வேண்டும்.

அகரவரிசைப்படுத்துக

 பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு.

விடை

பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து.

வினாச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ) எங்கே – அவன் வீடு எங்கே உள்ளது?

ஆ) ஏன்     - அவன் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை?

இ) யார்       - கர்ம வீரர் என அழைக்கப்படுபவர் யார்?

ஈ) எப்படி    - தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

தேசிய ஒருமைப்பாடு

முன்னுரை

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியர்களின் ஒற்றுமை

ஒருமைப்பாடு வளர்ப்போம்

முடிவுரை

முன்னுரை :

          ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது பொன்மொழி. நம் முன்னோர்கள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதால் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

வேற்றுமையில் ஒற்றுமை :

          அனைவரும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம். தேசிய ஒருமைப்பாட்டை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாம் அடுத்தவர்களை நம்முடைய உடன் பிறந்தவர்களாக நினைக்க வேண்டும்.

இந்தியர்களின் ஒற்றுமை :

          இந்தியா மொழிகள், இனங்கள், சமயங்கள் இருந்தாலும்  நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வினால் எப்போதும் ஒற்றுமை அடைகிறார்கள். இந்திய தேசிய கீதம் ஒலிக்கும் போது ஒவ்வொரு இந்தியர்களும் ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒற்றுமையை உணர்கின்றனர்.

ஒருமைப்பாடு வளர்ப்போம்

          நாடு முன்னேற ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேசப் பற்று மிகவும் முக்கியம். வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையினை வளர்த்து கொள்வதால் தான் இந்தியா பலமான நாடாக வளர்ச்சி அடைய முடியும்.

முடிவுரை :

          உலக அளவில் இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் போது நாம் பெருமை அடைகிறோம். இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்திய நாட்டிற்கு பெருமைச் சேர்ப்போம்.

மொழியோடு விளையாடு

அ) இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கு.

(எ.கா.) எனக்கு எனக்குண்டு எனக்கில்லை

 வடக்கு வடக்குண்டு வடக்கில்லை

 பந்து     பந்துண்டு பந்தில்லை

 பாட்டு   பாட்டுண்டு, பாட்டில்லை

ஆ) கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.

பாரி

எழிலி

மாணவர்கள்

மாடு

மாடுகள்

வீட்டுக்கு

வந்தன

வந்தான்

வந்தது

வந்தார்கள்

வந்தாள்

பாரி வீட்டுக்கு வந்தான்

எழிலி வீட்டுக்கு வந்தாள்

மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்

மாடு வீட்டுக்கு வந்தது

மாடுகள் வீட்டுக்கு வந்தன.

 

 

 

நிற்க அதற்குத் தக

அ) என் பொறுப்புகள்.

1. தாய் தந்தையின் வீட்டு வேலைகளில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

2. பள்ளி, பொது இடங்களில் உள்ள பொருட்களை உடைக்காமல் பாதுகாப்பேன்.

3. தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண், தேசியக் கொடி முதலியவற்றிற்கு உரிய மரியாதை தருவேன்.

ஆ) கலைச் சொல் அறிவோம்

நாட்டுப்பற்று -           Patriotism         

இலக்கியம் –  Literature

கலைக்கூடம் -          Art Gallery       

மெய்யுணர்வு -  Knowledge of Reality

-----------------------------------------------


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post