சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. என் வீடு________உள்ளது. ( அது / அங்கே )
2. தம்பி___________ வா. ( இவர்/ இங்கே )
3. நீர்___________தேங்கி இருக்கிறது? ( அது / எங்கே )
4. யார் _______ தெரியுமா? ( அவர்/யாது )
5. உன் வீடு ___________ அமைந்துள்ளது? (எங்கே/ என்ன)
குறுவினா
1. சுட்டு எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?
ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகள் சுட்டு எழுத்துகள்.
Ø அகச்சுட்டு
Ø புறச்சுட்டு
Ø அண்மைச் சுட்டு
Ø சேய்மைச் சுட்டு
Ø சுட்டுத்திரிபு
2. அகவினா, புறவினா – வேறுபாடு யாது?
அக வினா
புற வினா
வினா எழுத்துகள் சொல்லின் உள்ளே இருந்து வினாப் பொருளைத் தருவது.
வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது.
எ.கா: எது? யார்? ஏன்?
எ.கா: அவனா? இவனா?
சிந்தனை வினா
1. அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு, புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
பெயர்
பெயரிட்ட காரணம்
அகச்சுட்டு
மனத்தில் உள்ள உள் உணர்வு, எண்ணங்களைச் சுட்டிக் காட்டுவதால் அகச்சுட்டு என பெயர்.
அகவினா
உள் உணர்வு, எண்ணங்கள் குறித்து கேள்வி கேட்பதால் அகவினா என பெயர்.
புறச்சுட்டு
வெளியில் காணப்படும் பொருள் அல்லது செயலைச் சுட்டிக் காட்டுவதால் புறச்சுட்டு என பெயர்.
புறவினா
வெளியில் காணப்படும் பொருள் அல்லது செயல் குறித்து கேள்வி கேட்பதால் புறவினா என பெயர்.
