பருவம் - 2/இயல்-2ஆறாம் வகுப்பு
தமிழ்
பாடம் – 5
மொழியை ஆள்வோம்
சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி
எழுதுக.
அ)
நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு ,
அரசு)
Ø நான்
பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்
Ø நான்
அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன்
ஆ)
பொன்னன் முன்னேறினான். ( வணிகம் செய்து, பொருளீட்டி,
துணி)
Ø பொன்னன்
வணிகம் செய்து முன்னேறினான்.
Ø பொன்னன்
வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்
Ø பொன்னன்
துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில்
சேர்த்து எழுதுங்கள்.
அ)
நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)
Ø நீங்கள்
வரும்போது எனக்கு ஒருப் புத்தகம் வாங்கி வாருங்கள்
ஆ)
நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை)
Ø நாம்
இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்.
இ)
நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த)
Ø நான்
சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.
மாதிரிக்கடிதம்
1. உங்கள் ஊரில் நடைபெறும் மரபுச் சந்தையைக் காண வருமாறு
தோழிக்குக் கடிதம் எழுதுக.
திருச்சி,
02-10-2025
அன்புள்ள தோழி,
இங்கு நானும் என் பெற்றோரும் நலம். அதுபோல நீயும் உனது பெற்றோரும் நலமா? எங்கள் ஊரில் மரபுச் சந்தை ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. அதில் நம் உழவர் பெருமக்கள் நம் மரபு சார்ந்த வேளாண் பொருள்களைக் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்திருப்பார்கள்.இம்மாதம் நடைபெறும் மரபு சந்தைக்கு எனது உறவினர்களும் நமது தோழிகளும் வர உள்ளனர். நீயும் அந்த நிகழ்வைக் காண வர வேண்டும் என்று உன்னை அன்போடு அழைக்கிறேன். உனது வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருப்பேன்.
இப்படிக்கு,
உன் அன்புத் தோழி
கயல்விழி
உறைமேல் முகவரி
அ. முல்லை,
த/பெ.அன்பு,
5,மாணிக்க வாசகன் நகர்,
மதுரை – 625019.
கடிதம் எழுதுக
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பரிசு அனுப்பிய மாமாவுக்கு
நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக.
சேலம்,
02-10-2025
அன்புள்ள மாமாவுக்கு,
இங்கு நானும் என் குடும்பமும் நலம். அது போல நீங்களும், உங்களின் குடும்பத்தாரும் நலமா? நான் சென்ற மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிப் பெற்றதை அறிந்து நீங்கள் அனுப்பிய “ தமிழக வரலாறு “ என்னும் புத்தகம் தமிழ்நாட்டின் வரலாற்றை மட்டுமல்லாது அடுத்தடுத்து நான் கலந்து கொள்ளும் பேச்சுப்போட்டிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் எனக்கு அனுப்பிய இந்த பரிசு என்னை பல போட்டிகளில் என்னை வெற்றியாளாராக மாற்றும் என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் அன்புமிகு தங்கை மகள்,
தானியாஸ்ரீ.
உறைமேல் முகவரி
பெறுதல்
வெ.ராமகிருஷ்ணன்,
2/504 J, ஆலமரத்துக் காடு,
எருமாபாளையம்,
ஈரோடு-2
