ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் - 2 / இயல் -2
பாடம் – 4
உழைப்பே மூலதனம்
1. உழைப்பே மூலதனம்
கதையைச் சுருக்கி எழுதுக.
உழைப்பே மூலதனம்
அருளப்பரின் பரிசு
வணிகர் அருளப்பர் தனது வளவன், அமுதா,எழிலன் ஆகிய மூன்று பிள்ளைகளுக்கும் தலா 50,000 ரூபாய் கொடுத்தார்.
வளவனின் உழைப்பு
வளவன், அந்த பணத்தைக் கொண்டு காய்கறித் தோட்டம் அமைத்து நல்ல லாபம் பெற்றான்.
அமுதாவின் முயற்சி
அமுதா, அந்த பணத்தைக் கொண்டு மாடுகள் வளர்த்து பால், தயிர், நெய், வெண்ணெய் விற்று வருமானம் சேர்த்தாள்.
எழிலனின் தவறு
எழிலன் அந்தப் பணத்தை எதற்கும் பயன்படுத்தாமல் வங்கிப் பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைத்திருந்தான்.
அருளப்பரின் அறிவுரை
அருளப்பர், வளவன் மற்றும் அமுதாவை பாராட்டி பணத்தை அவர்களுக்கே வைத்துக் கொள்ளச் செய்தார். தந்தை எழிலனிடம், பணம் என்பது வங்கிக் காப்பறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று, அதைப் பயன்படுத்தித் தொழில் செய்து முன்னேறுவது இளமையும், ஆற்றலும் உடையோர் செயல். நீ பணத்தையும் பயன்படுத்தாமல், காலத்தையும் வீணாக்கிவிட்டாய் என்றார்.
முடிவு
உழைத்தால்தான் உயர்வு. உழைப்பு
வாழ்க்கையின் உண்மையான மூலதனம்.