பருவம்-2/இயல்-2ஆறாம் வகுப்பு
தமிழ்
பாடம் – 6
மொழியோடு விளையாடு
பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி
எழுதுக.
நீலம்,
கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம்,
முத்து, புஷ்பராகம், மரகதம்
கோமேதகம்,
நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
விடுகதைக்கு விடை காணுங்கள்
(கப்பல், ஏற்றுமதி இறக்குமதி, தராசு, நெல்மணி, குதிரை
)
1) தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம்
இறக்கம் காட்டிடுவான். அவன் யார்? தராசு
2) தண்ணீரில்
கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான்; காலில்லாத அவன் யார்? கப்பல்
3) பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார்? குதிரை
4) இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோக்க முடியாத மணி; பூமியில் விளையும்
மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி? நெல்மணி
5) ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும்
சேர்ந்து வரும். அவை என்ன?
ஏற்றுமதி இறக்குமதி
உங்களுக்குத் தெரிந்த மூன்று தொழில்களின் பெயர்களை எழுதுக. அத்தொழிலுடன் தொடர்புடைய ஐந்து சொற்களைப் பட்டியலிடுக
எ.கா
1. உழவுத் தொழில் – ஏர், கலப்பை, வயல்
நெசவுத்
தொழில் - ஆடை, நூல், பட்டு
ஆசிரியர்
தொழில் - கரும்பலகை, மாணவர்கள், ஆசிரியர்கள்
தோல் பதப்படுத்தும் தொழில் - தோல், நீர், கொதிக்கலன்
கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி
எழுதுக.
1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
2.ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை
5. அது ஒரு இனிய பாடல்.
விடை
1. ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
2.ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
3. அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
4.அது நகரத்திற்குச் செல்லும் சாலை
5.அஃது ஒரு இனிய பாடல்.
குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து
வலம்
1. நானிலம்
படைத்தவன் பாடலை எழுதியவர். – முடியரசன்
2. சுட்டிக்காட்டப் பயன்படுவது
சுட்டு எழுத்து.
வலமிருந்து இடம்
4. அரேபியாவிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்டது - குதிரை
5. ஒரு பொருளைக் கொடுத்து வேறு
பொருளைப் பெறும் முறை – பண்டமாற்ற முறை
மேலிருந்து கீழ்
1. காடும்
காடு சார்ந்த இடமும் - முல்லை
3. தோட்டத்தைச் சுற்றி வேலி
அமைக்க வேண்டும் .
கீழிலிருந்து
மேல்
4. மீனவருக்கு மேகம் குடை
போன்றது.
5. உடலுக்குப்
போர்வையாக அமைவது. – மேகமூட்டம்
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்.
1. இந்தியக் குடிமகனாக எனது கடமையை நிறைவேற்றுவேன்.
2. நெகிழிப் பயன்பாட்டை இயன்றவரை தவிர்ப்பேன்
3. கடைக்குச் செல்லும் போது துணிப்பைகளை எடுத்துச் செல்வேன்.
படிப்போம்; பயன்படுத்துவோம்!
|
COMMODITY |
பண்டம் |
VOYAGE |
கடற்பயணம் |
|
FERRIES |
பயணப்படகுகள் |
ENTREPRENEUR |
தொழில் முனைவோர் |
|
HERITAGE |
பாரம்பரியம் |
ADULTERATION |
கலப்படம் |
|
CONSUMER |
நுகர்வோர் |
MERCHANT |
வணிகர் |
