பருவம் - 2ஆறாம் வகுப்பு
தமிழ்
மொழியை ஆள்வோம்
கீழ்க்கண்ட பத்தியைப் படித்து
வினாக்களுக்கு விடை எழுதுக
மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும். கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.
1. கிடைக்கும்
பொருள்களின் _______________ க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது
சிறந்த வணிகம்.
(அ) அளவை (ஆ)
மதிப்பை (இ) எண்ணிக்கையை (ஈ) எடையை
2. சிலை
செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை கோலமாவாக மாற்றலாம்.
3. வணிகத்தின்
நோக்கம் என்ன?
மனிதர்களுக்குத்
தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று
4. மதிப்புக் கூட்டுதல்
என்றால் என்ன?
. கிடைக்கும் பொருள்களின்
மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும்.
5. இப்பத்திக்கு
ஏற்ற தலைப்பை எழுதுக
வணிகம்
பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைக்
கொண்டு சொற்றொடர்கள் அமைக்க
நீ நான் அவன் அவள் அவர் |
ஊருக்குச் |
சென்றாய் சென்றார் சென்றேன் சென்றான் சென்றாள் |
Ø நீ
ஊருக்குச் சென்றாய்
Ø நான்
ஊருக்குச் சென்றேன்
Ø அவன்
ஊருக்குச் சென்றான்
Ø அவள்
ஊருக்குச் சென்றாள்
Ø அவர் ஊருக்குச் சென்றார்
உரையாடலை நிரப்புக.
செல்வன்
: வாங்க மாமா. நலமாக இருக்கின்றீர்களா?
மாமா : நலம். நீ எப்படி
இருக்கிறாய்?
செல்வன்
: நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா. மாமா : அப்பா,
அம்மா எங்கே சென்றுள்ளார்கள்?
செல்வன்
: இருவரும் கடைவீதிக்குச் சென்று உள்ளனர்?
மாமா
: அப்படியா? நீ எவ்வாறு படிக்கிறாய்?
செல்வன்
: நன்றாகப் படிக்கிறேன் மாமா.
மாமா
: நாளை விடுதலை நாள் விழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?
செல்வம்
: ஆம் மாமா. நான் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
மாமா
: வெற்றி பெற வாழ்த்துகள்.
செல்வம் : நன்றி மாமா
நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக.
இன்பம்
கொடுப்பது நட்பு
ஈகை
அளிப்பது நட்பு
உண்மை
உரைப்பது நட்பு
ஊக்கத்தை
ஊன்றுகோலாய் தருவது நட்பு
கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
பொங்கல்
திருநாள்
முன்னுரை :
தமிழர்கள் பல திருநாள்களை கொண்டாடுகின்றனர். அவற்றில்
முக்கியமானது பொங்கல் திருநாள். இது தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
போகித் திருநாள் :
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகித் திருநாள். அந்நாளில்
பழைய பொருட்களை எறிந்து வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.
பொங்கல் திருநாள் :
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள். புதிய
பாத்திரத்தில் அரிசி, பால், வெல்லம் சேர்த்து
பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர். "பொங்கல்" என்பதற்கு பெருகுவது என்ற
பொருள்.
மாட்டுப் பொங்கல் :
அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். உழவில் உதவும் மாடுகளை
அலங்கரித்து, சாப்பாடு போட்டு மதிப்பார்கள்.
காணும் பொங்கல் :
அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல். அன்றைய தினம்
உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து மகிழ்ச்சி அடைவர்.
முடிவுரை :
பொங்கல் விழா நன்றி, இயற்கை,
உழைப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கற்பிக்கும்
நல்ல விழா. உலகம் முழுவதும் தமிழர்கள் இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.