www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : டிசம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 7
தலைப்பு : இந்திய இராணுவத்தில் தமிழர்
பங்கு
அறிமுகம் :
Ø
நமது இந்திய இராணுவப்
படையில் உங்களது தெரிந்த யாராவது இருக்கிறார்களா? நமது இந்திய இராணுவப் படையில்
சேர்வதற்கான தகுதிகள் யாவை? என்பன போன்ற வினாக்கள் கேட்டு பாடப்பொருளை அறிமுகம்
செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை
உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்கள் பிழையின்றி
வாசித்தல்
Ø இந்திய இராணுவத்தின் முக்கியத்துவத்தை கூறுதல்.
Ø இந்திய தேசிய இராணுவம் உருவானதற்கு நோக்கம்
பற்றிக் கூறுதல்.
Ø இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்களின் பங்கு
பற்றி விளக்குதல்.
Ø தேசத்தின் முக்கியத்துவத்தை விளக்குதல்
கருத்து வரைபடம் : இந்திய தேசிய இராணுவத்தில்
தமிழர் பங்கு
விளக்கம் :
இந்திய
தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
Ø
மோகன் சிங் என்பவர் தலைமையில் 1942 பிப்ரவரி 15 ஆம் நாள் இந்திய
தேசிய இராணுவம் ( ஐ.என்.ஏ ) என்ற படை உருவாக்கப்பட்டது.
Ø
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க,
09-07-1943ஆம் தேதி பதவியேற்றார்.
Ø
இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும்,ஆத்மாவும் தமிழர்கள் தான் –
தில்லான். ( இந்திய தேசிய இராணுவப் படைத் தலைவர் )
Ø தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய
இராணுவத்திற்கு வலு சேர்த்த பெருமைக்குரியவர் பசும்பொன். முத்துஇராமலிங்கனார்.
Ø
டோக்கியோ கேடட்ஸ் – வான்படைப்பிரிவு
Ø இந்திய தேசிய இராணுவத்தில் மகளிர் படை உருவாக்கப்பட்டது.
இதன் தலைவர்
டாக்டர்.இலட்சுமி
Ø மலேயாவில் உள்ள தமிழர்களி இரத்தம் நேதாஜியின் மூளையில்
கட்டியாக
உள்ளது – சர்ச்சில்
Ø விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால்
உண்டாகும் மன நிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு
விலையுண்டு. அவற்றிற்கான விலை துன்பமும்,தியாகமும் தான் -
நேதாஜி
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø இந்திய விடுதலைப் போரில் இராணுவத்தின்
முக்கியத்துவம் பற்றி அறிதல்
Ø இராணுவத்தின் முக்கியச் செயல்பாட்டினை உணர்தல்.
Ø இந்திய இராணுவத்தில் தமிழர்களின் பங்கினைப்
போற்றுதல், அவர்களின் வீரத்தை மதித்தல்.
Ø தேசிய விழாக்களின் முக்கியத்துவம் அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø இந்திய
தேசிய இராணுவம் என்ற படையை உருவாக்கியவர் யார்?
Ø இந்தியாவினை
பாதுகாக்கும் பணி எது?
MOT:
Ø இந்திய
தேசிய இராணுவப்படைக்கு முத்துஇராமலிங்கர் செய்த செயல்கள் யாவை?
Ø டோக்கியோ
கேடட்ஸ் பற்றிக் கூறுக.
HOT:.
Ø இந்திய
இராணுவப் படையில் சேர தகுதிகள் யாவை?
Ø உனக்கு
பிடித்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பற்றிக் கூறுக.
கற்றல் விளைவுகள் :
இந்திய தேசிய இராணுவத்தில்
தமிழர் பங்கு
T932 விடுதலைப்போரில் தமிழர்கள்
ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல், அதனை மொழியின் வாயிலாக வெளிப்படுத்துதல்,
சமூகத்திற்குத் தம்மால் இயன்ற பணிகளை அளிக்க தாமாக முன்வருதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை