www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 2
தலைப்பு : புறநானூறு
அறிமுகம் :
Ø
தமிழ்நாட்டில்
அணைகள் எங்கெங்கு உள்ளன? நீ எந்தெந்த அணைகளுக்கு சென்றுள்ளாய்?
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
நீரின்
இன்றியாமையாமையை உணர்ந்து நீர் நிலைகளைப் பாதுகாத்தல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø ஆசிரியர் குறிப்பு அறிதல்
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø செய்யுளினை சீர் பிரித்து படித்தல்
Ø செய்யுளின் பொருளை விளக்குதல்.
Ø செய்யுளின் கருத்துகளை அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் ஒப்பிடல்
Ø செய்யுளில் இடம் பெற்றுள்ள நயங்களை விளக்குதல்
Ø மனப்பாடப் பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்
Ø பாடல் கருத்துகளை அன்றாட வாழ்வியல் கூறுகளோடு தொடர்புப்படுத்தி
கற்பித்தல்
கருத்து வரைபடம் : புறநானூறு
விளக்கம் : புறநானூறு
Ø கடினச் சொற்களுக்கு
அகராதி வழியாக பொருள் காணுதல்
Ø நீரின் இன்றியமையாமையை
பாடல் வழியாக உணர்தல்
Ø நீர் நிலைகளைப் போற்றி
பாதுகாத்தல்
Ø புறநானூற்றில் இப்பாடல்
அமைந்துள்ள திணை மற்றும் துறைகளை அறிதல்.
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø புறநானூறு – நூற் குறிப்பு பிழையின்றி வாசித்தல்
Ø புறநானூறு – பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்
Ø புறநானூறு – மனப்பாடப்பாடலை மனனம் செய்தல்
Ø பாடலின் பொருளை வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புபடுத்துதல்.
Ø பாடலில் காணப்படும் நயங்களை உணர்தல்.
Ø செய்யுளில் உள்ள இலக்கணக் கூறுகளைக் காணுதல்.
Ø நீரின் அவசியம் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிதல்.
மதிப்பீடு :
LOT
:
Ø புறநானூறு பாடலை எழுதியவர் யார்?
Ø மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகள்
யாவை?
MOT:
Ø பொதுவியல் திணை என்பது யாது?
Ø பொருண்மொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன?
HOT:.
Ø மழை அவசியம் குறித்துக் கூறுக..
Ø அணைகள் மூலம் உலக உயிரினங்கள் எவ்வாறு காக்கப்படுகிறது?.
கற்றல் விளைவுகள் :
புறநானூறு
T908 இயற்கை இணைந்த சமூக
வாழ்வையும் அதனுடன் இணைத்துச் சொல்லப்பட்ட வாழ்வியல் உண்மைகளையும் சங்க இலக்கியம் வழியாகப்
படித்தல், சங்கச் சொற்களின் பொருளறிந்து பயன்படுத்துதல்
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை