9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 2 - PERIYA PURANAM

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன்

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 2

தலைப்பு          :      பெரிய புராணம்


அறிமுகம்           :

Ø விடுமுறையில் நீங்கள் சென்று வந்த சுற்றுலா இடங்கள் எவை? அவை எப்படி இருந்தது? என வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்

Ø  இயற்கை அழகை போற்றும் கவிதைகளை படைத்தல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்

Ø  ஆசிரியர் குறிப்பு அறிதல்

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø  செய்யுளினை சீர் பிரித்து படித்தல்

Ø  செய்யுளின் பொருளை விளக்குதல்.

Ø  செய்யுளின் கருத்துகளை அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் ஒப்பிடல்

Ø   செய்யுளில் இடம் பெற்றுள்ள நயங்களை விளக்குதல்

Ø மனப்பாடப் பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø    பாடல் கருத்துகளை அன்றாட வாழ்வியல் கூறுகளோடு தொடர்புப்படுத்தி கற்பித்தல்

கருத்து  வரைபடம்        :                             பெரிய புராணம்

விளக்கம்    :                                    பெரிய புராணம்

Ø  பெரிய புராணம்  – இலக்கியத்தின் நூற் குறிப்பு

Ø  பாடலில் உள்ள நயங்கள் அறிதல் ( எதுகை, மோனை,இயைபு, பொருள் )

Ø  காவிரி ஆறு பாயும் பாதை மற்றும் திருநாட்டின் சிறப்பை பாடல் வழியாக உணர்தல்.

Ø  பெரிய புராண மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  கடினச் சொற்களுக்கு அகராதி வழியாக பொருள் காணுதல்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  பெரிய புராணம் – நூற் குறிப்பு பிழையின்றி வாசித்தல்

Ø  பெரிய புராணம் – பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  பெரிய புராணம் – மனப்பாடப்பாடலை மனனம் செய்தல்

Ø  பாடலின் பொருளை வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புபடுத்துதல்.

Ø  பாடலில் காணப்படும் நயங்களை உணர்தல்.

Ø  செய்யுளில் உள்ள இலக்கணக் கூறுகளைக் காணுதல்.

Ø  இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிதல்.

மதிப்பீடு              :

LOT :

Ø பெரிய புராணத்தின் ஆசிரியர் யார்?

Ø பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று சேக்கிழாரை புகழ்ந்தவர் யார்?

MOT:

Ø கருங்குவளை, செந்நெல் – இலக்கணக் குறிப்புத் தருக.

Ø களை பறிக்கும் பருவம் குறித்து சேக்கிழார் கூறுவது யாது?

HOT:.

Ø  உன் இனிய கனவு பற்றிக் கூறுக.

Ø பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைச் சுருக்கமாகக் கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

பெரிய புராணம்

T907 சமய இலக்கியம் காட்டும் சமூகச்செழுமை,வளத்தை வெளிப்படுத்தும் சந்தநயமிக்கச் சொற்கூறுகளை நயமுணர்ந்து படித்தல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post