www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் - இயல்
- 1
தலைப்பு : தமிழோவியம்
அறிமுகம் :
Ø
அன்றாட வாழ்வில்
பயன்படுத்தும் பிற மொழி ஆங்கிலச் சொற்களை தமிழ் மொழியில் பெயர்த்துக் கூறல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
·
ஆதி முதல் எல்லாமுமாய்
இலங்கும் தமிழை ஓவியமாக காணுதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø ஈரோடு தமிழன்பன் பற்றிய குறிப்புகளை கூறல்
Ø செய்யுளினை சீர்ப் பிரித்து வாசித்தல்
Ø செய்யுளினை இசை இராகத்தில் பாடுதல்
Ø செய்யுளில் காணப்படும் நயங்களை இனம் காணுதல்
Ø இலக்கணக் குறிப்பினை அறிதல்
கருத்து வரைபடம் : தமிழோவியம்
விளக்கம் : தமிழோவியம்
·
தமிழின் தனித்தன்மைகள்
·
ஈரோடு தமிழன்பன் பற்றியக்
குறிப்பு
·
தமிழ்மொழியின் சிறப்புகளை
கவிதை மூலம் அறிதல்
·
செய்யுளில் உள்ள நயங்களை
அறிதல்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø தமிழின் தனித்தன்மைகளை அறிதல்
Ø கவிதையை பொருளுடன் உணர்தல்
Ø ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்
Ø செய்யுளில் காணப்படும் நயங்களை அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø தமிழோவியம் கவிதையை எழுதியவர் __________
Ø கவிதையின் புது வடிவங்களில் ஒன்று __________
MOT:
Ø செய்யுளில் காணப்படும் மோனை நயம் கூறுக.
Ø செய்யுளில் உள்ள அடி எதுகைச் சொற்களை
எடுத்தெழுதுக.
HOT:.
Ø பிறமொழி கலப்பின்றி தனித்தமிழில் ஒரு தொடரை
எழுதுக.
Ø இலக்கியங்கள் ,இலக்கணங்கள் வேறுபாடு தருக.
கற்றல் விளைவுகள் :
தமிழோவியம்
T902 வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து மையப் பொருளுணர்ந்து
சுவைத்தல் மற்றும் அவை போன்ற கவிதை வடிவங்களை எழுதுதல்
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை