கற்பவை கற்றபின் – ஒவ்வொரு பாடத்திலும் உள்ளவை இயல்வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் – 2
1. காற்று பேசியதைப் போல, நிலம் பேசுவதாக எழுதுக.
நான் உங்கள் காலடிகளால் மிதிபட்ட போதும்
வருந்தாமல் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மனிதர்கள் எனக்கு எதிராக செய்யும் செயல்களை
எண்ணி மிகுந்த வேதனையடைகிறேன். நான்தான் நிலம் பேசுகிறேன்.
2. 17ஆம் நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு
இன்றும் உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவும் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக்
காட்சியளிப்பதன் காரணங்களையும் அதற்கான தீர்வையும் எழுதுக
.
தாஜ் மஹால் நிறம் மாறுவதற்கு சில காரணங்கள்
கூறப்படுகிறது. அதாவது, அதனை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதால், மாசு அதிக அளவில் தாக்குவதாலும், புற ஊதா கதிர்களின்
தாக்கமும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
தீர்வு :
இயற்கையைப் பாதுகாத்தல்,
மரங்களை நட்டு வளர்த்தல்,
குப்பை எரிக்காமை
3. காற்றே வா பாடலில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களையும்,
கட்டளைச் சொற்களையும் எழுதுக.
வேண்டுகோள் சொல் :
1. வாசனையுடன் வா
கட்டளைச் சொல் :
1. மடித்து விடாதே
4. ‘ திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்
தீம்தரிகிட
தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து
வெள்ளம்
பாயுது பாயுது
பாயுது – தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட
தித்தோம் – அண்டம்
சாயுது சாயுது
சாயுது – பேய்கொண்டு
தக்கை யடிக்குது
காற்று – தக்கத்
தாம்தரிகிட
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட “ – பாரதியார்.
இது போன்ற இயற்கையொலி உணர்வுடன் வெளிப்படுத்தும் கவிதையினை
எழுதுக.
மழையே மழையே வா வா
மனதில் இன்பம் தா தா
பயிரை வளர்க்கும் மழையே வா
பசுமை கொஞ்சும் வளத்தைத் தா
குடிநீர் பஞ்சம் தீரவே வா
குளமும் கிணறும் நிரம்பவே வா
பஞ்சம் பட்டினி போக்கவே வா
பாரினில் செல்வம் சேர்க்கவே வா - வல்லநாடு ராமலிங்கம்
5. முல்லைப்பாட்டின் காட்சிகளிலிருந்து சங்க கால மக்களின்
வாழ்க்கைச் சூழலை உணர முடிந்ததை தொகுக்க.
1. மக்கள் பிறருக்கு ஏற்பட்ட துன்பத்தை தமக்கு ஏற்பட்டதாக
உணர்ந்தனர்
2.அஃறிணை உயிரினங்களின் துன்பங்களையும் நீக்க முற்பட்டனர்.
3. இயற்கையை போற்றிக் காத்தனர்
4. விரிச்சி கேட்டலில் நம்பிக்கை உடையவர்கள்
5. கடவுள் நம்பிக்கை உடையவர்கள்
6. ஒருவருக்கு ஒருவர் ஆற்றுப்படுத்திக் கொண்டனர்.
6. குறிப்புகளைக் கொண்டு ஆர்வமூட்டும் வகையில் கதை / நிகழ்வை
எழுதுக.
அமைதி –
வனம் – மனத்தைத் தொட்டது – கொஞ்சம் அச்சம் – ஆனால் பிடித்திருந்தது – இரவில் வீட்டின்
அமைதியை விட – வனத்தின் அமைதி – புதுமை – கால்கள் தரையில் – இலைகளின் சலசலப்பு – பறவைகள்
மரங்களின் மேல் – சிறகடிப்பு – அருகில் திரும்பியவுடன் – திடீரென ஆரவார ஓசை – தண்ணீர்
ஓட்டம் – அழகான ஆறு – உருண்ட சிறு கூழாங்கற்கள் – இயற்கையின் கண்காட்சி
அடர்ந்த அமைதியான வனத்தில் கூவும் குயிலின் இன்னோசை மனதை
தொட்டது.ஆனால் கொஞ்சம் அச்சமிருந்தது, ஆனாலும் அது பிடித்திருந்தது. இரவு நேரம் வீட்டின்
அமைதியை விட வனத்தின் அமைதி புதுமையாக இருந்தது.கால்கள் தரையில் புற்களின் மேல், மரங்களில்
இலைகளின் சலசலப்பு காரணம் பறவைகள் மரங்களின்
மேல் சிறகடித்து சென்றது. அருகில் திரும்பியவுடன் தீடீரென ஓசை அங்கு அருவியிலிருந்து
விழும் நீரானது ஓட்டம் கண்டது. அது அழகான ஆறு அவற்றில் சிறு கூழாங்கற்களும், மணல்களும்
அடித்துச் செல்வது கண்கொள்ளா இயற்கையின் கண்காட்சி.
7. கடலில் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பதற்றத்தை வெளிப்படுத்த
அடுக்குத் தொடர்களும், வருணனைகளும் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பது குறித்து எழுதுக.
கடலில் ஏற்படும் புயலின் தாக்கம் மக்கள் மனதில் பதிய அதன்
இடர்பாடுகளை தாமும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அடுக்குத் தொடர்களும், வருணனைகளும்
பயன்படுத்தப்படுகின்றன.
அடுக்குத் தொடர் : இரவு நேரத்தை குறிக்க – இருட்டிருட்டு,
பயத்தைக்
குறிக்க : நடுநடுங்கி
வருணனைகள் : மழையை குறிக்க : வானம் பிளந்து கொட்கொட் என கொட்டியது.
இரவு நேரத்தை குறிக்க : கும்மிருட்டு, இருளிருட்டு
8. நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து விவரித்து எழுதுக.
( மழை, வெள்ளம், புயல் , வறட்சி )
மழை :
தவறிப்பெய்த பருவமழையால் அறுவடைக்குத் தயாராய் இருந்த பயிர்கள்
நீரில் நனைந்து நாசம் அடைந்தன.
புயல் :
கஜா புயல், மேற்கு தென் மேற்குத் திசையில் நகர்ந்து கடலூர் பாம்பன் இடையே நாகைக்கு
அருகே மணிக்கு 111 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. விவசாயிகள்,
மீனவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரமே அழிந்தது.
வெள்ளம்:
கடந்த 2018 ஆம் ஆண்டு
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளமானது அம்மாநிலத்தையே புரட்டிப் போட்டது.. மலைப்பாதையில்
ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வறட்சி:
இந்திய வானிலைத் துறையின் கூற்றுப்படி 10 சதவிதத்திற்கும் குறைவான மழைப்பொழிவு
இருக்குமேயானால் அந்நாட்டை வறட்சியால் பாதிக்கப்பட்ட நாடு எனலாம்.
9. தடித்தச் சொற்களின் தொகைகளை வகைப்படுத்துக.
அ) அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில்
படித்துக் கொண்டிருந்தார்
அன்புச்செல்வன் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
தொடுதிரை – வினைத்தொகை.
ஆ) அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்
மோர்ப் பானை – இரண்டாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்கத் தொகை
மோர் கொடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
இ) வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக
இருக்கும்.
வெண்டைக்காய் – இருபெயரொட்டுப் பண்புத் தொகை
மோர்க்குழம்பு – இருபெயரொட்டுப் பண்புத் தொகை
ஈ) தங்க மீன்கள் தண்ணீர்த்தொட்டியில் விளையாடுகின்றன.
தங்கமீன்கள் – உவமைத் தொகை
தண்ணீர்த் தொட்டியில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
CLICK HERE TO GET PDF