10TH - TAMIL - UNIT 1 - KARPAVAI KATTRAPIN

 அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 இல் அன்னைமொழியே, இரட்டுற மொழிதல், தமிழ்ச்சொல்வளம், உரைநடையின் அணிநலன்கள், எழுத்து,சொல் என்ற பகுதிகளை நாம் கண்டோம். அந்த இயல் 1 இல் உள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் பின் உள்ள கற்பவை கற்றபின் பகுதிகளிலிருந்து காலாண்டு, அரையாண்டு, மற்றும் பொதுத்தேர்வுக்கு வினாக்கள் கேட்கக்கூடும். எனவே அந்த இயல் 1 இல் கற்பவைக் கற்றபின் பகுதியில் உள்ள எல்லா செயல்பாடுகளையும் வினாக்களாக மாற்றி அவற்றிற்கான விடைகளும் உங்களுக்கு இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை பயனபடுத்தி தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும்

 

கற்பவை கற்றபின் – ஒவ்வொரு பாடத்திலும் உள்ளவை இயல்வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.

இயல் – 1

1. “ நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

   ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

   கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

   இத்திறத்த எட்டுத் தொகை “

          இச்செய்யுளில் இடம் பெற்றுள்ள எட்டுத் தொகை நூல்களைப் பெயர்க் காரணத்துடன் விளக்குக.

நூல் பெயர்

பெயர் காரணம்

1. நற்றிணை

நல் + திணை

நற்றிணை என்பதற்கு நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.

திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே

2..குறுந்தொகை

குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது

3. ஐங்குறுநூறு

குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால்ஐங்குறுநூறுஎனப் பெயர் பெற்றது.

 

4. பதிற்றுப்பத்து

பத்துச் சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியாக விளங்குவதால் இந்நூல் பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது.

5. பரிபாடல்

பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள் கொண்டமையால் பரிபாடல் எனப் பெயர்ப் பெற்றது.

6. கலித்தொகை

கலிப்பா வகையால்பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே

7. அகநானூறு

அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. புறநானூறு

புறத்திணை சார்ந்த நானூறு பாடல்கள் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.

 

2. “ எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு, ஐந்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவதற்கான உரைக் குறிப்பு எழுதுக.

'எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்

1. தமிழ் இனிமையான மொழி

2. தமிழ் மொழியை கற்பது எளிது

3. தமிழ் மொழி ஒரு வளமைமிக்க மொழி. அவற்றில் இல்லாத எவையும் இல்லை.

4. தமிழ் காலந்தோறும் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் மொழி

5. தமிழில் ஏராளமான சங்க இலக்கியங்கள் அதன் தொன்மையை பறைசாற்றுகின்றன.

3. பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களை எழுதுக.

          தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம் போக்கு, சுவல், அவல்

நிலவகைகள்

பெயர்க் காரணம்

1. தரிசு

பயிர் செய்யாத நிலம்

2. சிவல்

சிவந்த நிலம்

3. கரிசல்

கரிந்த பாலை நிலம்

4. முரம்பு

பருக்கைக் கற்கள் கொண்ட மேட்டு நிலம்

5. புறம் போக்கு

ஊர்ப்புறத்தே குடிகள் வாழ்தலில்லாத நிலம்

6. சுவல்

மேட்டு நிலம்

7. அவல்

பள்ளமான நிலப்பகுதி,

 

4. ஒரு பொருள் தரும் பலச் சொற்கள் சிலவற்றை எழுதுக.

எ.கா: சொல்லுதல் – பேசுதல், விளம்புதல், செப்புதல்,உரைத்தல்,கூறல்,இயம்பல்,மொழிதல்

அ) மலர்தல் – அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், விள்ளல், விரிதல்.

ஆ) ஞாயிறு – I சூரியன், கதிரவன், வெய்யோன், பகலவன், பரிதி.

இ) அரசன் – கோ, கொற்றவன், வேந்தன், ராஜா, கோன்.

ஈ) அழகு – அணி, வடிவு, பொலிவு, எழில்.

உ) அடி- கழல், கால், தாள், பதம், பாதம்.

 

5. சிலேடைப் பேச்சுகளை தொகுத்து எழுதுக.

1. சென்னை வரவேற்கிறது என்பதை ஆம்சென்னை வர வேர்க்கிறது

2.. காலைப் பொழுதில் பூமாலை வந்ததை, காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே என கி.வா.ஜா.கூறுகிறார்.

3. தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது “இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார்.

6. மொழியின் சிறப்புகளைப் பாடும் கவிதைகளுள் உங்களுக்குப் பிடித்த கவிதையை எழுதுக.

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

7. உங்கள் நினைவில் நீங்கா இடம் பெற்ற இலக்கியத் தொடர்கள், நயங்களை எழுதுக.

எ.கா : உள்ளங்கை நெல்லிக்கனி போல – உவமை

பசுமரத்தாணி போல – உவமை

கானமயில் போல - உவமை

8. கொடுக்கப்பட்டத் தலைப்புகளில்  தமிழ்ச்சொற்களை மட்டும் பயன்படுத்தி வகுப்பறையில் பேசுவதற்கு ஏற்ற உரைக்குறிப்பினை எழுது

தலைப்பு : நேரம்                   தவிர்க்க வேண்டிய சொல் : கடிகாரம்

1. காலம் பொன் போன்றது.

2.காலம் நமக்காக காத்திருப்பதில்லை.

3. செலவு செய்த மணித்துளிகள் மீண்டும் கிடைப்பதில்லை.

4.காலத்தை வீண் செய்யாதீர்

5. கடந்த காலம் திரும்பாது.

 

 

9. தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்து தொடர்மொழிகளாக்குக.

          தேன், நூல், பை. மலர், வா

1. தேன் உடல் சூட்டைக் குறைக்கும்.

2. நூல் பல பயில்

3. பை நிறைய காய்கறிகள்.

4. மல்லிகை மலர் மணம் மிக்கது.

5. என்னோடு சேர்ந்து வா

 

10. வினை அடியை விகுதிகளுடன் இணைத்து தொழிற்பெயர்களை உருவாக்குக.

காண், சிரி, படி, தடு

எ.கா : காண் – காட்சி, காணுதல், காணல், காணாமை

சிரி – சிரித்தல், சிரிப்பு, சிரிக்காமை

படி – படித்தல், படிப்பு, படிக்காமை

தடு – தடுத்தல், தடுப்பு, தடுக்காமை

 

11. தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.

அண்ணன் : எங்கே செல்கிறாய்? ( தொடர்மொழி )

தம்பி : _____கடைக்கு_ ( தனிமொழி )

அண்ணன் : ____என்ன___ ___வாங்குவாய்?____ ( தொடர்மொழி )

தம்பி : ____எழுத____ ___எழுதுகோல்_____ ( தொடர்மொழி )

அண்ணன்: _____யாருக்கு?____ ( தனிமொழி )

தம்பி : ___என்_______ ___நண்பனுக்கு_______ ( தொடர்மொழி )

அண்ணன் : ஏன் அவனுக்கு நீ வாங்குகிறாய்? ( தொடர்மொழி )

தம்பி : என்னிடம் உள்ளது நன்றாக உள்ளதால், வாங்கி வரச் சொன்னான்.

( தொடர்மொழி )

 

12. தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.

மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலை மீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன் ; சுற்றும் முற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.

வினைமுற்று

தொழிற்பெயர்

அழைக்கும்

அழைத்தல்

ஏறுவேன்

ஏறுதல்

அமர்வேன்

அமர்தல்

பார்ப்பேன்

பார்த்தல்

எய்தும்

எய்தல்

 

13. கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் – இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்தி எழுதுக

.கட்டு : முதனிலைத் தொழிற்பெயர்

சொட்டு : முதனிலைத் தொழிற்பெயர்

வழிபாடு : விகுதி பெற்ற தொழிற்பெயர்

கேடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்

கோறல் : விகுதி பெற்ற தொழிற்பெயர்


CLICK HERE TO GET PDF

1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

  1. கற்பவை கற்ற பின்விடைகளை PDF ஆக பதிவிட்டால் உபயோகமாக இருக்கும் ஐயா

    ReplyDelete
Previous Post Next Post