10TH - TAMIL - UNIT 1 - UNIT QUESTION PAPER - PDF

 

 அலகுத் தேர்வு வினாத்தாள்

2022 - 2023

பத்தாம் வகுப்பு

தமிழ் - முழுப்பாடத்திட்டம்

 அலகுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்கள்

                                                                                  இயல் - 1

  வகுப்பு : 10                                                                                                   அலகு : இயல் -1

பாடம்    : தமிழ்                                                                                          மொத்த மதிப்பெண் : 50

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                                        6×1=6

1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________

இலையும்,சருகும்        தோகையும் சண்டும்   தாளும் ஓலையும்   சருகும் சண்டும்

2. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________

எந் + தமிழ் + நா          எந்த + தமிழ் + நா இஎம் + தமிழ் + நா      எந்தம் + தமிழ் + நா

3. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும்வினையாலணையும் பெயரும் முறையே________________

பாடிய;கேட்டவர் ஆபாடல்;பாடிய இ)கேட்டவர்;பாடிய        பாடல்;கேட்டவர்

4. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________

)குலைவகை       மணிவகை   )கொழுந்துவகை ஈஇலை வகை

5.சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……                                                          

)பாரதியார்  )ஜி.யு.போப்           ).சச்சிதானந்தன்          )பாவலரேறு

6. ‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது ----

அ. வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ. பெரும் வணிகமும் பெரும் கலன்களும் 

இ. ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ. வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்                                                          

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                      4×1=4

. ‘ முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

 மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்

                அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

                    இணைகிடந்த தேதமிழ் ஈண்டு “

7.             இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. நற்றிணை                 ஆ. முல்லைப்பாட்டு          இ. குறுந்தொகை ஈ.தனிப்பாடல் திரட்டு

8.             பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான அணி

அ. இரட்டுற மொழிதல் அணி         ஆ, தீவக அணி     இ. வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ. நிரல் நிறை அணி

9.             தமிழுக்கு இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது

அ. சங்கப் பலகை            ஆ. கடல் இ. அணிகலன்                ஈ. புலவர்கள்

10.           தொழிற்பெயர் அல்லாத சொல்

அ. துய்ப்பதால்                 ஆ. அணிகலன்               இ. மேவலால்                  ஈ. கண்டதால்

III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                                        3×2=6

11. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. தமிழுக்கு கருவூலமாய் விளங்குவது பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை என்னும் நூல்.

ஆ. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கியவர் தேவநேய பாவாணர்

12. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

  முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.

13. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                                                       4×2=8

14. வேங்கை -  என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

15. கலைச்சொல் தருக:- அ. HOMOGRAPH ஆ. VOWEL

16. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

17. மொழி பெயர்ப்பு:-

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                                                 2×3=6

   பிரிவு -1

18.” புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது” – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி அருகில் அல்லூரில் “ திருவள்ளுவர் தவச்சாலை “ அமைத்தார். அவர் விழிகளை இழக்க நேரிட்டாலும் தாய்த் தமிழை இழந்து விடக்கூடாது என்பதற்காக திரு.வி.க-வை போல் இமை மூடிய படி எழுதுவும் ஆற்றலைக் கற்றுக் கொண்டார்.இவர் பற்பல நூல்கள் எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு,தமிழிசை இயக்கம்,தனித்தமிழ் இயக்கம்,பாவாணர் வரலாறு,குண்டலகேசி உரை,யாப்பருங்கலம் உரை,புறத்திரட்டு உரை,காக்கைப்பாடினிய உரை,திருக்குறள் தமிழ் மரபுரை,தேவநேயம் முதலியன இவரின் தமிழ்பணியை தரமுயர்த்திய நல்முத்துகள்.

அ. தாய்த்தமிழை இழக்கக் கூடாது என்பதற்காக இளங்குமரனார் செய்த செயல் யாது?

ஆ. இளங்குமரனாரின் தமிழ்ப்பணியை தரமுயர்த்திய நூல்கள் யாவை?

இ. திருவள்ளுவர் தவச்சாலையை இளங்குமரனார் எங்கு நிறுவினார்?

20. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                                                                              2×3=6

வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

21. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?

22.”அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாதது, புரிந்தது,புரியாதது,பிறந்தது,பிறவாதது” இவை அனைத்து யாம் அறிவோம்.அது பற்றி உமது அறிவுரை எமக்கு தேவையில்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.

இக்கூற்றில் தடித்த எழுத்துகளில் இருக்கும் வினைமுற்றுகளை தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

23. “ அன்னை மொழியே “ பாடலை அடிமாறாமல் எழுதுக.

VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                                                                            1×4=4

24. . அ.) நயம் பாராட்டுக:-                                                                      

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

            தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

            உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

            மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

            தழைத்தினி தோங்குவதாய் தண்டமிழ் மொழியே

                                                            கா.நமச்சிவாயர்

( அல்லது )

ஆ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-

VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                                                     2×5=10

25.அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை ஒரு பக்க அளவில் எழுதுக.

 (அல்லது )

ஆ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தினையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சினை ஒன்றினை உருவாக்குக.

26. அ)  சான்றோர் வளர்த்த தமிழ் எனும் தலைப்பில் ஒரு பக்கத்திற்கு மிகாமல் கட்டுரை எழுதுக.

( அல்லது )

     ஆ.) ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

குறிப்பு : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்

இந்த வினாத்தாளினை  PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய நீங்கள் 30 விநாடிகள் காத்திருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி

நீங்கள் 30 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post