ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
சிறப்பு வழிக்காட்டி
மொழியை ஆள்வோம்
அ) :- மொழி பெயர்க்க:-
1. LINGUISTICS - மொழி ஆராய்ச்சி
2. LITERATURE - இலக்கியம்
3. PHILOLOGIST - மொழியியற் புலமை
4. POLYGLOT - பன்மொழியாளர்
5. PHONOLOGIST - ஒலிச்சின்ன வல்லுநர்
6. PHONETICS - ஒலிப்பியல்
ஆ) அடைப்புக்குள்
உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கிறது.
( திகழ் )
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் கலந்துகொள்வாள்
( கலந்துகொள் )
3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.( பேசு )
4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றனர் ( செல் )
5. தவறுகளைத் திருத்துவேன் ( திருத்து )
இ) வடிவம் மாற்றுக.
பின்வரும்
பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம்
பெறும் அறிவிப்பாக மாற்றுக.
மருதூர்
அரசு மேல்நிலைப் பள்ளி இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கல்விப்பணியை வழங்கி வருகிறது.
இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முகப் படைப்பாளிகளை உருவாக்கிய
பெருமை கொண்டது. ஒரு சோற்றுப் பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த “ உள்ளங்கையில்
உலகம் “ என்ற நூலின் வெளியீட்டு விழா 21 ஜூன் திங்கள், பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற
உள்ளது. அவ்விழாவில் ( கின்னஸ் சாதனை படைத்த ) முன்னாள் மாணவர் இன்சுவை நூலை வெளியிட்டு,
சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு
விழாவில் கலந்து கொள்ள, அனைவரையும் அழைக்கின்றோம்.
அறிவிப்பு பலகை
அரசு மேல்நிலைப் பள்ளி – மருதூர்
அன்புடையீர்,
வணக்கம். 21-06-2021 திங்கள் பிற்பகல் 3.00 மணியளவில் பள்ளி
விழா அரங்கத்தில் நம் பள்ளி மாணவி ‘ பூங்குழலி ‘ எழுதிய ‘ உள்ளங்கை உலகம் ‘ என்னும்
நூல் வெலியீட்டு விழா நடைபெற உள்ளது.
சிறப்புரை :
‘ கின்னஸ்’
சாதனை படைத்த முன்னாள் மாணவர் – சிறந்த கவிஞர் ‘ இன்சுவை ‘
அனைவரும் வருக! வருக
சொல் |
கூட்டப்பெயர் |
சொல் |
கூட்டப்பெயர் |
கல் |
கற்குவியல் |
புல் |
புற்கட்டு |
பழம் |
பழக்குலை |
ஆடு |
ஆட்டுமந்தை |
ஈ) தொடரைப் பழமொழிகொண்டு
நிறைவு செய்க.
1. இளமையில் கல்வி கல்
2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்
3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
4. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
உ) கடிதம் எழுதுக.
உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின்
“ கால் முளைத்த கதைகள் “ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
12,
தமிழ் வீதி,
மதுரை-2
28,செப்டம்பர்
2021.
அன்புள்ள
நண்பா !
வணக்கம் . நலம். நலமறிய ஆவல் என்னுடைய பிறந்தநாள் பரிசாக நீ அனுப்பிய எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள
கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தன.
இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற
தலைப்புகளில் கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில்
இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அன்பு நண்பன்,
அ.எழிலன்.
உறைமேல் முகவரி:
வெ.ராமகிருஷ்ணன்,
2,நெசவாளர் காலணி,
சேலம் - 1
எ) நயம் பாராட்டுக:-
விரிகின்ற
நெடுவானில்,கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில்,பள்ளத்தாக்கில்
பொழிகின்ற
புனலருவிப் பொழிலில்,காட்டில்
புல்வெளியில்,நல்வயலில்,விலங்கில்,புள்ளில்
தெரிகின்ற
பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத
நுண்பாட்டே,தூய்மை ஊற்றே,
அழகு என்னும்
பேரொழுங்கே மெய்யே,மக்கள்
அகத்திலும் நீ
குடியிருக்க வேண்டுவேனே!
ம.இலெ. தங்கப்பா
திரண்ட கருத்து:
வானம்,கடல்,மலை,பள்ளத்தாக்கு,அருவி,குளம்,புல்வெளி,வயல்,விலங்குகள்,
பறவைகள் போன்ற எல்லா பொருள்களிலும் இயற்கையாகிய
அழகு,தூய்மை எனும் பேரொழுக்கம் காணப்ப்படுவது போல மக்கள் உள்ளத்திலும் அவை
குடியிருக்க வேண்டும்.
மையக் கருத்து:
இயற்கைகளில் காணப்படும் அழகு மக்கள் உள்ளத்திலும்
குடியிருக்க வேண்டும்.
மோனை :
அடிதோறும், சீர் தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது.
விரிகின்ற –
விண்ணோங்கு
பொழிகின்ற - புல்வெளியில்
எதுகை:
அடிதோறும், சீர் தோறும் முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம்
எழுத்து ஒன்றி வருவது.
விரிகின்ற
– தெரிகின்ற
அனி நயம் :
இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.
ஏ) நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க.
உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும்
உலகத் தாய்மொழி நாள் ( பிப்ரவரி 21 ) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றை வடிவமைக்க
உலகத் தாய்மொழி நாள் (
21-02-2021 )
நிகழ்ச்சி நிரல்
காலை 9 : தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுதல்
தலைமை : திரு.வெ.ராமகிருஷ்ணன், பள்ளிச் செயலர்
முன்னிலை : திரு.கு.சிவானந்தன் – மாவட்டக் கல்வி அலுவலர். எடப்பாடி கல்வி மாவட்டம்.
வரவேற்புரை : திருமதி.வ.கஸ்தூரி, தலைமை ஆசிரியர்
அறிக்கை வாசித்தல் : செல்வி. ஆ.கவிப்பிரியா, மாணவச் செயலர்
விழாப் பேருரை : முனைவர்.க.அறிவொளி, தமிழ் வளர்ச்சித் துறை
வாழ்த்துரை : திரு.இர. இரவி , அறிவியல் ஆசிரியர்
நன்றியுரை : திருமதி.ஆ.பாக்கியவதி, அறிவியல் ஆசிரியை
நாட்டுப்பண் : மாணவர்கள்
மொழியோடு விளையாடு
அ) அந்தாதிச் சொற்களை உருவாக்குக..
அத்தி,குருவி,விருது,இனிப்பு
வரிசையாக
அத்தி : அத்தி
– திகைப்பு – புகழ்ச்சி – சிரிப்பு
குருவி : குருவி
– விதி - திகைப்பு – புகழ்ச்சி – சிரிப்பு
விருது : விருது
– துளசி – சிரிப்பு – புன்னகை
இனிப்பு : இனிப்பு – புதிது – துலக்கு – குடும்பம்
வரிசையாக : வரிசையாக - கருப்பு – புன்னகை – கைப்பேசி
ஆ) அகராதியில் காண்க:-
நயவாமை – விரும்பாமை
கிளத்தல் - சிறப்பித்துக் கூறல்
கேழ்பு - உவமை
புரிசை - மதில்
செம்மல் - தலைவன்
இ) கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில்
காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க.
வா |
|||
|
இறந்த காலம் |
நிகழ்காலம் |
எதிர்காலம் |
நான் |
வந்தேன் |
வருகிறேன் |
வருவேன் |
நாங்கள் |
வந்தோம் |
வருகிறோம் |
வருவோம் |
நீ |
வந்தாய் |
வருகிறாய் |
வருவாய் |
நீங்கள் |
வந்தீர்கள் |
வருகிறீர்கள் |
வருவீர்கள் |
அவன் |
வந்தாள் |
வருகிறாள் |
வருவாள் |
அவர் |
வந்தார் |
வருகிறார் |
வருவார் |
அவர்கள் |
வந்தார்கள் |
வருகிறார்கள் |
வருவார்கள் |
அது |
வந்தது |
வருகிறது |
வரும் |
அவை |
வந்தன |
வருகின்றன |
வரும் |
ஈ) தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப்
பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.
|
இறந்த காலம் |
நிகழ்காலம் |
எதிர்காலம் |
தா |
தந்தான் |
தருகிறான் |
தருவான் |
காண் |
கண்டான் |
காண்கிறான் |
காண்பான் |
பெறு |
பெற்றாள் |
பெறுகிறேன் |
பெறுவாள் |
நீந்து |
நீந்தினாள் |
நீந்துகிறான் |
நீந்துவாள் |
பாடு |
பாடினான் |
பாடுகிறான் |
பாடுவான் |
கொடு |
கொடுத்தார் |
கொடுக்கிறார் |
கொடுப்பார் |
உ) அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய்,வினைஅடி, வினைக்குப்
பொருத்தமான தொடர் அமைக்க.( திடலில், போட்டியில், மழையில், வேகமாக,மண்ணை )
எ.கா : நான் திடலில் ஓடினேன் ( தன்வினை )
நான் திடலில் மிதிவண்டியை
ஓட்டினேன் ( பிறவின )
போட்டியில்
நான் போட்டியில் ஆடினேன்
நான் போட்டியில் பொம்மையை ஆட்டினேன்.
மழையில்
நேற்று மழையில் நனைந்தேன்
நேற்று மழையில் துணியை நனையச் செய்தேன்
வேகமாக
நான் வேகமாக ஓடினேன்
நான் வண்டியை வேகமாக ஓட்டினேன்
எழுவாய்/பெயர் |
வினையடி |
தன்வினை |
பிறவினை |
காவியா |
வரை |
வரைந்தாள் |
வரைவித்தாள் |
கவிதை |
நனை |
நனைந்தது
|
நனைவித்தது |
இலை |
அசை |
அசைந்தது |
அசைத்தது |
மழை |
சேர் |
சேர்ந்தது |
சேர்த்தது |
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:- ( மெல்லக் கற்போருக்கு மட்டும் இந்த கவிதை )
|
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி அர்த்தமுள்ளக் காட்சி ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் காட்சி சமூக விளைவைக் காட்டும் காட்சி |
நிற்க அதற்குத் தக
உங்களுடைய நாட்குறிப்பில் இடம்பெற்ற ஒரு வாரத்திற்குரிய மகிழ்ச்சியான
செய்திகளைத் தொகுத்து அட்டவணைப்படுத்துக.
திங்கள் – வருத்தம் தெரிவிக்கிறேன், பொறுத்துக் கொள்ளவும் ஆகிய சொற்றொடர்களை இன்று இரண்டு முறை வகுப்பில்
பயன்படுத்தினேன். இதனால் புதிய நண்பர் கிடைத்தார்
செவ்வாய் - நான் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்து,
அதனை பள்ளியே பாராட்டியது.
புதன் – தம்பியின்
பிறந்தநாள் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.
வியாழன் – தமிழ் தேர்வுக்கு
வினாத்தாள் எளிமையாக இருந்தது.
வெள்ளி - முதியோர் ஒருவருக்கு உதவினேன். அவர் நீண்டு வாழ்க
என பாராட்டினார்.
சனி – சதுரங்க விளையாடு
விளையாடினேன்
ஞாயிறு – குடும்பத்துடன்
திரைப்படம் பார்த்தோம்.
கலைச் சொல் அறிக:-
உருபன் - Morpheme
ஒலியன் – Phoneme
ஒப்பிலக்கணம் - Comparative
Grammar
பேரகராதி - Lexicon
வலைப்பக்கம்
:
YOUTUBE
https://youtube.com/user/000ramakrishnan