கல்வி ஆண்டு 2022 -2023
ஒன்பதாம் வகுப்பு
மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
நாள் : 20-06-2022 முதல் 25-06-2022
மாதம் : ஜூன்
வாரம் : ஜூன் – மூன்றாம் வாரம்
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திராவிட மொழிக் குடும்பம்
2. தமிழோவியம்
கரு பொருள்:
· தமிழின் சிறப்புகளை பிற மொழிகளுடன் ஒப்பிட்டு உணர்தல்
· ஆதி முதல் எல்லாமுமாய் இலங்கும் தமிழை ஓவியமாக காணுதல்
உட்பொருள்:
Ø திராவிட மொழி குடும்பத்தில் உள்ள மொழிகளின் பண்புகள், தமிழின் சிறப்புகள் இவற்றை உணர்தல்
Ø மொழிகளின் ஆய்வு பற்றி அறிதல்
Ø ஈரோடு தமிழன்பன் பற்றிய குறிப்பு அறிதல்
Ø தமிழ் ஓவியமாய் இலங்கும் விதம் காணுதல்
Ø செய்யுளின் நயங்களை அறிதல்
கற்றல் விளைவுகள் :
Ø பயன்பாட்டில் எவ்வாறெல்லாம் தமிழ்மொழியின் வேர்ச்சொற்கள், வடிவ மாற்றம் பெறுகின்றன என்பதனை அறிதல்.
Ø பிறமொழிக் கலப்பின்றி பேசுதல்,எழுதுதல்.
Ø செய்யுளில் உள்ள நயங்களை இனம் காணுதல்
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
1. தமிழ் எழுத்துகளின் வகைத் தொகைகளை கூறல்.
2. உனது வீட்டின் அருகில் பிற மொழி பேசும் குடும்பங்கள் உள்ளதா? அந்த மொழிகளைப் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?
3. அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிற மொழி ஆங்கிலச் சொற்களை தமிழ் மொழியில் பெயர்த்துக் கூறல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.
முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:
திராவிட மொழிக்குடும்பம் மற்றும் தமிழோவியம்
· மொழியின் தோற்றம்
· மொழிகளின் காட்சி சாலை
· மொழி ஆய்வு
· திராவிட மொழிக் குடும்பம்
· திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள்
· குறில்நெடில் வேறுபாடு, பால்பாகுபாடு
· வினைச்சொற்கள்
· தமிழின் தனித்தன்மைகள்
· ஈரோடு தமிழன்பன் பற்றியக் குறிப்பு
· தமிழ்மொழியின் சிறப்புகளை கவிதை மூலம் அறிதல்
· செய்யுளில் உள்ள நயங்களை அறிதல்
ஆசிரியர் செயல்பாடு:
Ø மொழியின் தோற்றத்தைக் கூறல்
Ø மொழியின் வளர்ச்சியை கூறல்
Ø மொழியின் ஆய்வுகள் பற்றிக் கூறல்
Ø திராவிட மொழிகளின் வகைகளை அறிதல்
Ø திராவிட மொழிகளின் பண்புகளை கூறல்
Ø தமிழ்மொழியின் தனித்தன்மைகளைக் கூறல்
Ø ஈரோடு தமிழன்பன் பற்றிய குறிப்புகளை கூறல்
Ø செய்யுளினை சீர்ப் பிரித்து வாசித்தல்
Ø செய்யுளினை இசை இராகத்தில் பாடுதல்
Ø செய்யுளில் காணப்படும் நயங்களை இனம் காணுதல்
Ø இலக்கணக் குறிப்பினை அறிதல்
மாணவர் செயல்பாடு:
Ø மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை அறிதல்
Ø எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு வேறுபாடு பெறுதல்
Ø திராவிட மொழிகள் பற்றியும் அதன் பண்புகளையும் அறிதல்
Ø தமிழின் தனித்தன்மைகளை அறிதல்
Ø கவிதையை பொருளுடன் உணர்தல்
Ø ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்
Ø செய்யுளில் காணப்படும் நயங்களை அறிதல்
கருத்துரு வரைபடம்
திராவிட மொழிக்குடும்பம்
தமிழோவியம்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு:
Ø வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களைப் படித்தல்
Ø ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்
Ø செய்யுளில் காணும் நயங்களை அறிதல்
Ø செய்யுள் பகுதியில் பிடித்த இரு வரிகள் படித்தல்
மதிப்பீடு:
LOT :
Ø இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ____________
Ø திராவிட மொழிக்குடும்பங்கள் ___________ வகைப்படும்
Ø தமிழோவியம் கவிதையை எழுதியவர் __________
Ø கவிதையின் புது வடிவங்களில் ஒன்று __________
MOT :
Ø குறில் நெடில் வேறுபாடு யாது?
Ø பால்பாகுபாடு என்பது யாது?
Ø ஸெய்யுளில் காணப்படும் மோனை நயம் கூறுக.
Ø செய்யுளில் உள்ள அடி எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
HOT :
Ø உங்கள் பெயரின் விளக்கம் யாது?
Ø தமிழின் தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவது யாது?
Ø பிறமொழி கலப்பின்றி தனித்தமிழில் ஒரு தொடரை எழுதுக.
Ø இலக்கியங்கள் ,இலக்கணங்கள் வேறுபாடு தருக.
தொடர்பணி:
· பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதிவரச்செய்தல்.
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------
நன்றி, வணக்கம் – தமிழ்விதை