அன்பார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். 2022- 2023 கல்வி ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவச் செல்வங்களும் அதிகப் பட்ச மதிப்பெண் பெற்று மேல்நிலை வகுப்புக்கு செல்ல வேண்டுமென அன்புடன் வாழ்த்துகிறோம். இந்த கல்வியாண்டு முழுப்பாடத்திட்டமாய் உள்ளது. எனவே அனைத்துப் பாடப்பகுதிகளையும் நாம் பயில வேண்டும். ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தலுடன் போதிய பயிற்சியை கல்வி ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே வழங்க வேண்டிய நிலையில் உள்ளோம். பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் நாம் எவ்விதமான பயிற்சியினை வழங்கலாம் என நம்மில் பலரும் அவரவருக்கு ஆலோசனை செய்து வருகிறோம். அது நல்ல ஒரு சூழ்நிலை. இன்னும் பல ஆசிரியர்கள் தொலைப்பேசியிலும், வாட்ஸப்பிலும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் சென்ற கல்வி ஆண்டில் குறைக்கப்பட்ட பாடத்திட்டட்திலிருந்து நமது தமிழ்விதை வலைதளம் எண்ணற்ற கல்வி வளங்களை வழங்கினோம் அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களின் ஒத்துழைப்பினால் பல்வேறு விதமான மாதிரி வினாத்தாள்களை பதிவிட்டோம். அந்த மாதிரி வினாத்தாள்களிலிருந்து 80% சதவீத வினாக்கள் இடம் பெற்று இருந்தது. அதனை பல மாணவர்களும், ஆசிரியர்களும் தொலைபேசி வாயிலாக என்னிடம் தெரிவித்தார்கள். மிக்க மகிழ்ச்சி. அந்த வினாக்கள யாவும் அரசு வழங்கிய மாதிரி வினாத்தாள்கள் ( 6 ) இருந்து குறைக்கப்பட்டப் பாடப்பகுதிக்கு உரிய வினாக்கள் மட்டும் தேர்வு செய்து அதனை மாதிரி வினாத்தாளில் வைத்து உருவாக்கினோம். அந்த வகையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மட்டும் 4 மாதிரி வினாத்தாள்களை நமது வலைதளம் மூலம் பகிர்ந்தோம். அது போன்றே இந்த கல்வி ஆண்டிலும் உங்களுக்கு உகந்த சமயத்தில் எது தேவை அது மட்டுமே வழங்க உள்ளோம். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்க நமது வலைதளம் தயார் செய்து கொடுத்த பயிற்சி ஏடு மாணவர்களின் கற்றலுக்கு உரிய துணை புரியும். அந்த பயிற்சி ஏட்டினை AMAZON வலைதளத்தில் ஆசிரியர்கள் தங்கள் கைப்பேசி வாயிலாக பார்வையிடுவதற்கு வசதியாக ஐந்து நாட்களுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளும்படி வைத்தோம். பல ஆசிரியர்கள் அதனை அச்சடித்த புத்தமாக வழங்கவும் என கூறினர். இந்த பயிற்சி ஏடு முழுக்க முழுக்க வினாக்கள் கொண்ட பயிற்சி ஏடாக இருக்கும். புத்தக வினாக்கள், அரசின் 6 மாதிரி வினாத்தாளில் இடம் பெற்ற வினாக்கள் ( மதிப்பெண் வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது ), அலகுத் தேர்வு வினாக்கள், செயல் திட்ட வடிவிலான வினாக்கள், கற்பவை கற்ற பின் பகுதியில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் இடம் பெற்ற வினாக்கள், பருவத் தேர்வு வினாக்கள், மாதிரி காலாண்டுத் தேர்வு வினாக்கள், மாதிரி அரையாண்டு தேர்வு வினாக்கள், மூன்று திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள், மூன்று அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்கள், தமிழ் விதை மாதிரி வினாத்தாள்கள், படிவங்கள், அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகள் என இந்த பயிற்சி ஏடு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினால் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிகப் பட்ச மதிப்பெண் பெற இயலும். இந்த பயிற்சி ஏட்டினை சில பகுதிகள் மட்டும் உங்களுக்கு சான்று பக்கங்களாக நமது வலைதளம் மூலம் வெளியிட உள்ளோம். இந்த பயிற்சி ஏட்டின் SAMPLE PAGES வரிசை முறையாக இருக்காது. இந்த SAMPLE PAGES பயிற்சி ஏடு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை காட்டுவதற்காக மட்டுமே. முழுமையான ஒழுங்கப்படுத்தப்பட்ட பயிற்சி ஏடு விரைவில் புத்தகமாக வெளியிடப்படும். அது அனைத்து தரப்பு மாணவர்களும் வாங்கக் கூடிய விலையில் இருக்கும். உங்களின் ஒத்துழைப்பு வலைதளத்திற்கு கொடுத்ததற்கு போலவே இந்த பயிற்சி ஏட்டிற்கும் வழங்கும் படி அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த பயிற்சி ஏட்டின் விடைக் குறிப்புகள் நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் மூலம் வெளியிடப்படும். மேலும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டியும் ஒவ்வொரு இயல் வாரியாக நமது தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் மூலம் வெளியிடப்படும். அனைத்து இயல்களுக்குமான மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டியானது புத்தகத்தில் எவ்வாறு வினாக்கள் அமைந்துள்ளதோ அதன் அடிப்படையில் வழிகாட்டி இருக்கும். அந்த வழிகாட்டியானது அரசின் விடைக் குறிப்பின் அடிப்படையில் இருக்கும். உங்கள் ஆதரவு கரங்களை வேண்டி என்றும் தமிழ்விதை மற்றும் கல்வி விதைகள் வலைதளங்கள்.
பயிற்சி ஏட்டின் SAMPLE PAGES பதிவிறக்கம் செய்து அதன் அடிப்படையில் கருத்துகளை பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்கான பத்தாம் வகுப்பு - தமிழ் பாடத்தின் பயிற்சி ஏடு SAMPLE PAGES பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள DOWNLOAD என்பதனை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும். நன்றி, வணக்கம்
பத்தாம் வகுப்பு
தமிழ் - பயிற்சி ஏடு
SAMPLE PAGES