10TH - TAMIL - NOTES OF LESSON - JUNE 3RD WEEK

  கல்வி ஆண்டு 2022 -2023

எட்டாம் வகுப்பு

மாதிரி பாடக்குறிப்பு

 

வகுப்பு              :      பத்தாம் வகுப்பு
நாள்                :           20-06-2022 முதல்  25-06-2022       

மாதம்                :           ஜூன்

வாரம்               :           ஜூன் – மூன்றாம்   வாரம்                        

 பாடம்               :           தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :           1. அன்னை மொழியே, 2. தமிழ்ச் சொல்வளம் 

  

 

கரு பொருள்:

Ø  தமிழ்மொழியின் சிறப்புகள்,பெருமைகள் அறிதல்

Ø  தமிழ் மொழியின் செழுமைக் குறித்து ஆற்றலுடன் உரையாடல்

Ø  தமிழ் சொல் வளங்கள் அறிதல்

Ø  சொல் வளங்களை பேச்சிலும், எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்

உட்பொருள்:

Ø  பெருஞ்சித்திரனார் தமிழ்மொழியை வாழ்த்தி போற்றும் விதத்தை அறிதல்

Ø  தமிழ் சொல்வளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்களின் வளங்களை அறிதல், பயன்படுத்துதல்.

கற்றல் விளைவுகள் :

Ø  பள்ளியில் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கும், பெருஞ்சித்திரனார் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கும் உள்ள ஒப்புமை காணல்

Ø  நில வகைகளுக்கான சொல் வளங்களை அறிதல்

Ø  ஒரு பொருள் தரும் பல சொற்களைப் பட்டியலிடுதல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சரியாக உச்சரித்துப் பாடுதல்.

Ø  தமிழ்மொழியின் சிறப்புகளை வலையொளி காட்சிப் பதிவுகள் மூலம் காண்பித்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

இயற்கைப் பொருட்கள், மரம்,செடி வகைகள், இலைகள், வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள், தமிழ் அகராதி,வரைபடம் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

·         தமிழ் மொழியின் பெருமைகள்

·         தமிழ் பற்றி அயல்நாட்டினர் கூற்று

·         பெருஞ்சித்திரனாரின் படைப்புகள்

·         தமிழ் அன்னையின் சிறப்புகள்

·         தமிழ் அன்னையை வாழ்த்துவதன் காரணம்

·         பாடலில் எதுகை,மோனை,இயைபு நயங்கள்

·         பாடலில் மனப்பாடப்பகுதியினை இசை இராகத்துடன் பாடுதல்

·         தேவநேய பாவாணர் – குறிப்பு

·         தமிழ் பற்றி கால்டு வெல் கூற்று

·         தமிழ்ச்சொல் வளம்

·         அடிவகை,கிளைப்பிரிவுகள், காய்ந்தவை, இலைவகை, கொழுந்து வகை,

·         பூவின் நிலைகள்

·         பிஞ்சு வகை, குலை வகை

·         கெட்டுப்போன காய் வகை

·         மணிவகை

·         இளம் பயிர்வகை, சம்பா நெல் வகை…..

ஆசிரியர் செயல்பாடு:

Ø    தமிழின் பெருமைகளை கூறி ஆயத்தப்படுத்துதல்

Ø    பெருஞ்சித்திரனார் பற்றி குறிப்பினை கூறல்

Ø    பாடலில் இடம் பெறும் நயங்களை கூறல்

Ø    பொதுத் தேர்வில் இப்பாடப்பகுதியில் இடம் பெறும் முக்கிய வினாக்களை கூறல்.

Ø    கூடுதல் வினாக்களை பற்றிக் கூறல்

Ø    பாடலை சீர்ப் பிரித்து படித்துக் காட்டல்.

Ø    பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø    தமிழ் சொல் வளங்களைப் பற்றி கூறல்.

Ø    கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தமிழ்ச்சொல் வளத்தில் இடம் பெறும் சொற்களை கூறல்

Ø    அருகில் உள்ள மரங்களைக் கொண்டு கிளைப்பிரிவுகளை கூறல்

மாணவர் செயல்பாடு:

Ø    செய்யுளினை சீர்ப் பிரித்து படித்தல்

Ø    செய்யுளில் காணப்படும் நயங்களை இனம் காணுதல்

Ø    பாடலின் பொருளை அறிதல்

Ø    மரங்களைக் கொண்டு தமிழ்ச் சொல்வளம் பாடப்பகுதியில் கூறப்பட்டுள்ள சொற்களை அறிதல்

Ø    சில உண்மைப் பொருட்கள் மூலம் தமிழ் சொல் வளத்தின் சொற்களைக் காணல்

Ø    தேவநேயபாவணர் பற்றி அறிதல்

கருத்துரு வரைபடம்

அன்னை மொழியே



தமிழ்ச்சொல்வளம்

 

 

வலுவூட்டல்:

                            விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை      மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  பாடலைச் சீர் பிரித்துப் படித்தல்

Ø  பாடலில் உள்ள எதுகை,மோனை,இயைபு நயங்களை அறிதல்

Ø  பாடப்பகுதிக்குரிய ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடைகாணுதல்

Ø  மனப் பாடலை மனனம் செய்தல்

மதிப்பீடு:

எளிய வகை வினாக்கள்:

Ø  அன்னை மொழியே என தமிழை வாழ்த்துபவர் _________

Ø  தென்னன் என்பவர் ________

Ø  தமிழ்ச்சொல்வளம் என்னும் கட்டுரையை எழுதியவர் ___

உயர் சிந்தனை வினாக்கள்:

Ø  தமிழின் சிறப்புகளாக நீங்கள் கருதும் கருத்துகளைத் தொகுக்க.

Ø  பிஞ்சு வகை சொற்களைக் கொண்டு ஐந்து தொடர்களைக் கூறுக

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

2 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

  1. Please send in pdf format

    ReplyDelete
  2. தமிழ் மட்டும்தான் இருக்கிறது மற்ற சப்ஜெக்ட் எங்க?

    ReplyDelete
Previous Post Next Post