6TH-TAMIL-1ST TERM-UNIT1-VALAR THAMIZH -q&A

இளந்தமிழ் - வளர்தமிழ்

இளந்தமிழ் - ஆறாம் வகுப்பு

பருவம்: 1 | இயல்: 1 | வளர்தமிழ்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘ தொன்மை ‘ – என்னும் சொல்லின் பொருள்: ஆ) பழமை

2. ‘ இடப்புறம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது: இ) இடம் + புறம்

3. ‘ சீரிளமை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது: அ) சீர் + இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்: ஆ) சிலப்பதிகாரம்

5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்: ஆ) கணினித்தமிழ்

6. “ தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்: இ) பாரதியார்

7. “ மா “ என்னும் சொல்லின் பொருள்: இ) விலங்கு

ஆ) கோடிட்ட இடத்தை நிரப்புக:

  1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது மொழி
  2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்
  3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமெனில் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

இ) சொற்களைச் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக.

1. தனிச்சிறப்பு – தமிழ்மொழி தனிச்சிறப்பு வாய்ந்தது.

2. நாள்தோறும் – தமிழில் நாள்தோறும் புதுப்புது கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன.

ஈ) குறுவினா:

1. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?

தமிழின் மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம். அதற்கும் முன் தமிழில் இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதால் தமிழ் மூத்த மொழியாக அழைக்கப்படுகிறது.

2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை.

உ) சிறுவினா:

1. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?

  • அஃறிணை – அல் + திணை
  • அல் + திணை = உயர்வு அல்லாத திணை
  • பாகற்காய் = பாகு + அல் + காய்
  • பாகு + அல் + காய் = இனிப்பு அல்லாத காய்

2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.

தமிழில் இலக்கியங்கள் பலவும் ஓசை நயம் மிக்கனவாகவும், இசையோடு பாடுவதற்கு ஏற்ற வகையிலும் உள்ளன. தொடை நயங்கள் பலவும் உள்ளன.

3. தமிழ்மொழியின் சிறப்பைக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.

  • தாய்மொழியாக விளங்குகிறது.
  • மிகவும் தொன்மையான மொழி.
  • அறியாமையை அகற்றி, இன்பம் தரும் மொழி.
  • நாள்தோறும் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன.
  • கணினித்தமிழாக விளங்கும் மொழி.

ஊ) சிந்தனை வினா:

1. தமிழ் மொழி படிக்கவும், எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?

  • உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்.
  • உயிரும், மெய்யும் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் உயிர்மெய்யெழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம்.
  • எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழும்.
  • தமிழ்மொழி பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளே. எனவே எழுதுவதும் எளிது.

2. தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.

  • தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள் உருவாகி வருகின்றன.
  • தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post