இளந்தமிழ் - ஆறாம் வகுப்பு
பருவம்: 1 | இயல்: 1 | ஒளி பிறந்தது
வினா:
தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?
விடை:
- போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள கனமான செயற்கைக்கால்களை அணிந்து நடப்பதற்கு மிகுந்த சிரமப்படுவதை அப்துல் கலாம் கவனித்தார்.
- பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழைகளைக் கொண்டு, வெறும் முந்நூறு கிராம் எடையிலேயே அந்தச் சிறுவர்களுக்குச் செயற்கைக்கால்களை அவர் உருவாக்கினார்.
- அந்த எடைகுறைந்த செயற்கைக்கால்களை அணிந்துகொண்டு அந்தச் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக நடந்ததைக் கண்டதே கலாம் அவர்களுக்குப் பெருமகிழ்வை அளித்த நிகழ்வாகும்.
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...
