6TH-TAMIL-1ST TERM-UNIT-1-EZHUTHUKKALIN VAGAIYUM,THOGAIYUM-q&a

தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் - ஆறாம் வகுப்பு

இளந்தமிழ் - ஆறாம் வகுப்பு

பருவம்: 1 | இயல்: 1 | இலக்கணம்

அ) மாத்திரை அளவுக்கேற்பச் சொற்கள்

  • உயிரெழுத்தில் தொடங்கும் 2 மாத்திரை சொல்: உளி
  • 2 மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல்: கோ
  • ஆய்த எழுத்து இடம்பெறும் 2.5 மாத்திரை சொல்: எஃகு

ஆ) குறு வினா

1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்:

  • எழுத்து இலக்கணம்
  • சொல் இலக்கணம்
  • பொருள் இலக்கணம்
  • யாப்பிலக்கணம்
  • அணி இலக்கணம்

2. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்துக:

இனம்எழுத்துகள்
வல்லினம்க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்ய், ர், ல், வ், ழ், ள்

3. தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகள்:

  • உயிர்க் குறில், உயிர்மெய்க் குறில்: 1 மாத்திரை
  • உயிர் நெடில், உயிர்மெய் நெடில்: 2 மாத்திரை
  • மெய்யெழுத்து, ஆய்த எழுத்து: ½ மாத்திரை
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post