மொழியை ஆள்வோம்
அலுவலகக்
கடிதம்
அனுப்புநர்
ந.தேன்மொழி,
எண் 5,
வேடன்
வயல்,
கூடலூர், நீலகிரி மாவட்டம் - 643 212.
பெறுநர்
உதவி
மின் பொறியாளர்,
மின்
பொறியாளர் அலுவலகம்,
கூடலூர், நீலகிரி மாவட்டம் - 643 212.
மதிப்பிற்குரிய
ஐயா,
பொருள்: பழுது அடைந்துள்ள
தெருவிளக்குகளைச் சரிசெய்ய வேண்டுதல் சார்பு.
வணக்கம். எங்கள் பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து
வருகிறோம். இங்குள்ள
தெருவிளக்குகள் மழை காரணமாகக் கடந்த ஒரு வாரமாக எரியவில்லை. இதனால், இரவு நேரத்தில் வெளியில்
செல்வது மிகவும் கடினமாக உள்ளது. எனவே, பழுது அடைந்துள்ள
தெருவிளக்குகளை மாற்றி, புதிய
விளக்குகள் அமைத்துத் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
இடம்: கூடலூர்
நாள்: 25.06.2025
தங்கள்
உண்மையுள்ள,
ந.தேன்மொழி.
உறைமேல்
முகவரி
உதவி மின்
பொறியாளர்,
மின் பொறியாளர்
அலுவலகம்,
கூடலூர், நீலகிரி மாவட்டம் - 643 212.
கடிதம் எழுதுக.
விடுப்பு விண்ணப்பம்.
அனுப்புநர்
கயல்விழி,
ஆறாம் வகுப்பு - அ,
அரசு உயர்நிலைப்பள்ளி,
வளையசெட்டிப்பட்டி, சேலம்.
பெறுநர்
தலைமை ஆசிரியர் அவர்கள்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
வளையசெட்டிப்பட்டி, சேலம்.
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்.
வணக்கம்.
என் அக்காவின் திருமணம் 22/07/2026 அன்று
நடைபெற உள்ளது. அந்த திருமண விழாவில் கலந்துகொள்வதற்காகவும், வீட்டிலுள்ள விசேஷ
ஏற்பாடுகளுக்காகவும் 22/07/2026 அன்று
எனக்கு ஒரு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
இடம்: வளையசெட்டிப்பட்டி
நாள்: 23/05/2026
தங்கள்
உண்மையுள்ள,
கயல்விழி.
மொழியோடு விளையாடு
‘மை’
என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க.
|
அருமை |
|
சீர்மை |
|
பழமை |
|
புதுமை |
|
பெருமை |
|
இனிமை |
|
வளமை |
|
எளிமை |
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய
சொற்களை உருவாக்குக.
நூல் மொழி கோல் மீன் நீதி எழுது
கண் வெளி தமிழ் மணி மாலை விண்
|
விண்மீன் |
|
தமிழ்மொழி |
|
கண்மணி |
|
கோல்மாலை |
|
நூல்வெளி |
பொருத்தமான
சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக.
(அழகு,ஏற்றம்,இன்பம்,ஊக்கம்,இனிமை,ஆற்றல்,ஈடு,இசை,உணர்வு,ஏடுகள்,உரிமை,என்றும்,எளிதாய்,
உவகை, அன்பு)
|
அ –
அன்பு தருவது தமிழ் |
உ –
உணர்வு தருவது தமிழ் |
|
ஆ
– ஆற்றல் தருவது தமிழ் |
ஊ
– ஊக்கம் தருவது தமிழ் |
|
இ
– இனிமை தருவது தமிழ் |
எ
– எளிதாய் வேண்டும் தமிழ் |
|
ஈ
– ஈடு இல்லாதது தமிழ் |
ஏ
– ஏற்றம் தருவது தமிழ் |
படிப்போம்;
பயன்படுத்துவோம்!
|
வலஞ்சுழி
|
Clock wise |
|
இடஞ்சுழி
|
Anti Clock wise |
|
இணையம்
|
Internet |
|
குரல்தேடல்
|
Voice Search |
|
தேடுப்பொறி
|
Search engine |
|
தொடுதிரை
|
Touch Screen |
|
செயலி |
App |
|
மின்னஞ்சல்
|
email |
