6th-tamil-1st-term-unit-2-Ethili kurivigal-Q&a

ஏதிலிக்குருவிகள் - வினா விடை

🌿 இளந்தமிழ் – 6ஆம் வகுப்பு 🌿

தமிழ் – வினா விடை

பருவம் : 1

இயல் : 2

பாடம் : இயற்கை இன்பம் – ஏதிலிக்குருவிகள்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கூடு கட்டுவதற்கு மரம் கிடைக்காத பறவைகள்______ வேறிடம் சென்றன.

அ) பதிலிகளாக
ஆ) ஏதிலிகளாக ✅
இ) விருந்தாளிகளாக
ஈ) பயணிகளாக

2. ‘முன்பென்றால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) முன்+பென்றால்
ஆ) முன்பு+அன்றால்
இ) முன்பு+என்றால் ✅
ஈ) முன்பு+பென்றால்

3. ‘சுழித்தோடும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) சுழித்து + ஓடும் ✅
ஆ) சுழி + தோடும்
இ) சுழி + ஓடும்
ஈ) சுழித்+ஓடும்

4. வழி + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) வழிஎல்லாம்
ஆ) வழியிலெல்லாம்
இ) வழில்லாம்
ஈ) வழியெல்லாம் ✅

ஆ) குறுவினா

1. முன்பெல்லாம் மழைக்காலம் எவ்வாறு இருக்கும்?

முன்பெல்லாம் மழைக்காலத்தில் நல்ல மழை பெய்து, சுற்றிலும் பசுமையாக இருக்கும்.

2. தூக்கணாங்குருவியின் கூடுகளைக் கவிஞர் ஏன் புல் வீடுகள் என்று குறிப்பிடுகிறார்?

தூக்கணாங்குருவி புல்லால் கூடு கட்டுவதால் கவிஞர் அதை “புல் வீடுகள்” என்று குறிப்பிடுகிறார்.

இ) சிறுவினா

1. குருவிகள் ஏதிலிகளாக ஆனதற்குக் காரணம் என்ன?

மரங்கள் குறைதல், புதர்ச்செடிகள் இல்லாமை, நவீன கட்டடங்கள் அதிகரித்தல், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துதல் ஆகிய காரணங்களால் குருவிகள் ஏதிலிகளாக ஆனது.

ஈ) சிந்தனைவினா

பறவைகள் ஏதிலிகளாகப் போகாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?

  • பறவைகள் ஏதிலிகளாகாமல் இருக்க மரங்களை வளர்க்க வேண்டும்.
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைக்க வேண்டும்.
  • பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைக்க வேண்டும்.
  • புதர்ச்செடிகளையும் இயற்கைச் சூழலையும் பாதுகாக்க வேண்டும்.
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post