6th-tamil-term-1-unit-2-Siragin Osai - Q&A

சிறகின் ஓசை - வினா விடை

🕊️ இளந்தமிழ் – ஆறாம் வகுப்பு 🕊️

தமிழ் – வினா – விடை

பருவம் : 1

இயல் : 2

பாடம் : சிறகின் ஓசை

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ’தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) தட்பம் + வெப்பம் ✅
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்

2. ’வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள் ✅
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்

3. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.

அ) தரையிறங்கும் ✅
ஆ) தரைஇறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரைய்றங்கும்

4. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.

அ) வழிதடம்
ஆ) வழித்தடம் ✅
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______.

அ) துருவப்பகுதி ✅
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை – ஆர்டிக் ஆலா
2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் – சத்தி முத்தப்ப் புலவர்
3. பறவைகள் இடம்பெயர்வதற்கு – வலசைப் போதல் என்று பெயர்.
4. இந்தியாவின் பறவை மனிதர் – சலீம் அலி
5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று – தட்ப வெப்பம்

இ) சொற்றொடர் அமைத்து எழுதுக

1. வெளிநாடு – பறவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றன.

2. வாழ்நாள் – வாழ்நாள் முழுவதும் பறவைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் சலீம் அலி.

3. செயற்கை – செயற்கை உரங்களை நாம் பயன்படுத்தக் கூடாது.

ஈ) பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக

1. மரங்களை வளர்த்து இயற்கையைக் காப்போம். செயற்கை உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம்.

2. தமிழகத்தில் வலசைப் பறவைகளின் வருகை மிகுந்துள்ளது. தற்போது சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குறுவினா

1. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் ஆகிய காரணங்களுக்காக பறவைகள் இடம் பெயர்கின்றன.

2. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

  • தலையில் சிறகு வளர்தல்
  • இறகுகளின் நிறம் மாறுதல்
  • உடலில் கற்றையாக முடி வளர்தல்

சிறுவினா

1. சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.

  • பறவை : சிட்டுக் குருவி
  • நிறம் : பழுப்பு
  • ஆண்குருவி : தொண்டைப் பகுதி கறுப்பு நிறம்
  • பெண் குருவி : மங்கிய பழுப்பு நிறம்
  • இருப்பிடம் : கூடு கட்டி வாழும்
  • இனப்பெருக்கம் : மூன்று முதல் ஆறு முட்டைகள் இடும். 14 நாட்கள் அடைகாக்கும்
  • உணவு : தானியம், புழுபூச்சி, மலர், அரும்பு, இளந்தளிர், தேன்

2. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

  • உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலைக் காரணமாக வலசைப் போகின்றன.
  • வலசையின் போது பறவையின் உடலில் மாற்றங்கள் உண்டாகின்றன.
  • வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.

சிந்தனைவினா

1. பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

  • மரங்களை வளர்க்க வேண்டும்.
  • மண்ணுக்கு ஏற்ற தாவரங்களை வளர்க்க வேண்டும்.
  • செயற்கை உரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
  • இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.
பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post