10TH-TAMIL-QUARTERLY EXAM-MODEL QUESTION-3-2025-PDF

 


மாதிரி காலாண்டுத் தேர்வு – 2025

வினாத்தாள்  - 3

 மொழிப்பாடம் – தமிழ்

வகுப்பு : 10

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                              மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                          15×1=15

1. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே __________

) பாடிய;கேட்டவர்                    ) பாடல்;பாடிய    

) கேட்டவர்;பாடிய                    ) பாடல்;கேட்டவர்

2. திருவெம்பாவை, திருப்பாவை பாடல்கள் எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படுகிறது.

அ) போர்ச்சுகீசு       ஆ) பிரான்சு        இ) தாய்லாந்து            ஈ) ஜப்பான்

3. பண்என்னாம் பாடற் கியைபின்றேல்;  கண்என்னாம்

   கண்ணோட்டம்  இல்லாத கண் – இக்குறளில் இடம் பெறும் அணி

அ) உவமை அணி                                ஆ) தற்குறிபேற்ற அணி

இ) எடுத்துக்காட்டு உவமை அணி        ஈ) பின்வரு நிலையணி

4. தேமதுரத் தமிழோசை  உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் – எனப் பாடுபவர்

) பாரதிதாசன்      ) பாரதியார்          ) பெருஞ்சித்திரனார்      ) கம்பர்

5. என் அம்மை வந்தாள் என மாட்டைப் பார்த்து கூறுவது

அ) மரபு வழுவமைதி                            ஆ) கால வழுவமைதி      

இ) திணை வழுவமைதி                       ஈ) பால் வழுவமைதி

6. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது.

அ) வேற்றுமை உருபு       ஆ) எழுவாய்          இ) உவம உருபு     ஈ) உரிச்சொல்

7. கூட்டப் பெயரைக் காண்க:-  கல் ___________

அ) குவியல்           ஆ) கட்டு               இ) மந்தை              ஈ) குலை

8. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது --------

அ) சுட்டி      ஆ) கிண்கிணி        இ) குழை     ஈ) சூழி

9. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

அ) யாம்                  ஆ) நீவிர்               இ) அவர்      ஈ) நாம்

10. திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்- தடித்தச் சொல்லின் தொடர் வகையைத் தேர்க_______

அ) பண்புத்தொகை           ஆ) உவமைத்தொகை

இ) அன்மொழித் தொகை          ஈ) வினைத்தொகை

11. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் -    1. மேற்கு      ஆ) கோடை -        2. தெற்கு

இ) வாடை    -        3. கிழக்கு     ஈ) தென்றல் -        4. வடக்கு

அ) 1,2,3,4    ஆ) 3,1,4,2              இ) 4,3,2,1     ஈ) 3,4,1,2

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“ கவிஞன் யானோர் காலக் கணிதம்

 கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

இவைதவ றாயின் எதிர்ப்பதென் தொழில்

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை; அறிக! “

12. பாடல் இடம் பெற்ற நூலைத் தேர்க.

அ. காலக்கணிதம்   ஆ. பரிபாடல்           இ. முல்லைப்பாட்டு          ஈ. மலைபடுகடாம்

13. இப்பாடல் இடம்பெற்றுள்ள  மோனையைத் தேர்க.

அ. நானோர் - வைப்பேன்   ஆ. விலைமிகு – செல்வம்                

இ. கவிஞன் – கருபடு         ஈ. அழித்தல் – எதிர்ப்பதென்

14. ‘ புகழுடை தெய்வம் ‘  என யாரைக் கவிஞர் குறிப்பிடுகிறார்_______

அ. தமிழை   ஆ. கவிதையை      இ. கவிஞரை          ஈ. தொழிலை

15. பாடலின் ஆசிரியரைத் தேர்க_____

அ. கண்ணதாசன்             ஆ. பாரதிதாசன்               

இ. பாரதியார்                     ஈ. பாவாணர்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.           4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. மேற்கிலிருந்து வீசும் போது கோடை காற்று எனப் பெயர் பெறுகிறது.

ஆ. குழந்தையின் தலை -5-6ஆம் மாதங்களில் மென்மையாக அசையும் பருவம் செங்கீரைப் பருவம்.

17. செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?

18. மன்னுஞ் சிலம்பே!மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள    

    காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

 

19. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

20. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக

21.  தரும் – என  முடியும்  குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                    5×2=10

22 கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.

23. படிப்போம்; பயன்படுத்துவோம் :   அ) vowel           ஆ) Culture

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : தணிந்தது

25. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

26. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

அ.  அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
ஆ. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)

27 இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க  :-

அ) கொள் – கோள்                     ஆ) விதி – வீதி

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-  

அ) பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

ஆ) ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

28. கட்டு,சொட்டு,வழிபாடு,கேடு,பாடுதல் – இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.

 

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                           2×3=6

29. ’ இன்மையிலும் விருந்தோம்பல்’ குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் வீசுகிறேன். இவ்வாறாக மழைப்பொழிவைத் தருகின்றேன். இந்தியாவின் முதுகெலும்[பு வேளாண்மை தானே!.இவ்வேளாண்மை சிறப்பதிலும் நாடு தன்னிறைவு பெறுவதிலும் நான் பங்கெடுக்கின்றேன். இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.

அ). இந்தியாவின் முதுகெலும்பு எது?

ஆ). வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலம் எது?

இ). இந்தியாவிற்கு தென்மேற்குப் பருவக்காற்று கொடுக்கும் மழையின் அளவு யாது?

31. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்….. முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது.இவ்வாறு ‘ நீர் ‘ தன்னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.        2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை எழுதுக.

33. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

34. அ) “ விருந்தினனாக “ எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல்  எழுதுக   (அல்லது )

      ஆ) “தலைவர் ” எனத் தொடங்கி “ சட்டம் “ என முடிவும் காலக் கணிதம்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                        2×3=6

35. கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.

)அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அனைவரும் ஏற்பர்என்று கூறினான்.
) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.

36. வேலொடு  நின்றான் இடுவென் றதுபோலும்

      கோலொடு நின்றான்  இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக

37. ”அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாதது, புரிந்தது,புரியாதது,பிறந்தது,பிறவாதது” இவை அனைத்து யாம் அறிவோம்.இக்கூற்றில் தடித்த எழுத்துகளில் இருக்கும் வினைமுற்றுகளை தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                    5×5=25

38. அ) மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

          வளரும் விழி வண்ணமேவந்து

  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

          விளைந்த கலை அன்னமே

  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

          நடந்த இளந்தென்றலேவளர்

  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

          பொலிந்த தமிழ் மன்றமே

  - கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.                 ( அல்லது )

ஆ) ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.

39.’ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் ‘ -குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி  தலைமை ஆசிரியர் ஒப்புதல் பெற வேண்டி கடிதம் எழுதுக       ( அல்லது )

ஆ. மாநில அளவில் நடைபெற்ற ‘ கலைத் திருவிழா ‘ போட்டியில் பங்கேற்று ‘ கலையரசன் ‘ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி  மடல் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

41. திருநெல்வேலி மாவட்டம், நெல்லையப்பர் நகர்,  நெல்லையப்பர் கோவில் தெரு.கதவு எண்; 50 இல் வசிக்கும் தந்தை மா.மணி, தாய் அமிர்தம் அவர்களின் மகள் இந்துஜா , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுப் பிரிவில் மேல்நிலை  வகுப்பினை நிறைவு செய்துள்ளார். மேலும் கணினி பாடப்பிரிவில் எம்.சி.ஏ படித்து, அங்குள்ள தனியார் வங்கியில் மேலாளர் பணி வேண்டி விண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை இந்துஜாவாக நினைத்து உரிய படிவத்தை நிரப்புக.

 42. அ) பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் நடந்துக் கொள்ளும் விதத்தை எழுதுக  ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, Engaland and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

பத்தியைப் படித்து  ஐந்து வினாக்களை  உருவாக்குக..

          ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு ( translation ) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது;ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது  ( Interpreting ) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளருக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் ( Headphone )  கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலி வாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன்  உள்ள காதணி கேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழொயில் புரிந்து கொளவார்.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                3×8=24

43. அ) சங்ககாலத் தமிழரின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

 ( அல்லது )

ஆ) காற்று பேசியதைப் போல,  நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு எழுதுக.

44. அ அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்  கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

 ( அல்லது )

புயலிலே ஒரு தோணி – கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.?

45. அ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக.

 பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக

          குறிப்பு – நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர்    ( அல்லது )

ஆ)  குறிப்புகளைக் கொண்டு “ பசுமையும் பராம்பரியமும் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

          குறிப்புகள் : முன்னுரை – பசுமையின் முக்கியத்துவம் – பாரம்பரியத்தின் அருமை – பசுமையும் பாரம்பரியமும் – இன்றைய சவால்கள் – பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு -நமது கடமை - முடிவுரை

 

 KINDLY WAIT FOR 10 SECONDS



 


பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post