6th-tamil-1st term-inba thamizh-Q&A

இளந்தமிழ் - ஆறாம் வகுப்பு

இளந்தமிழ்

பருவம்: 1 | இயல்: 1 | தமிழ்த்தேன் - இன்பத்தமிழ்

மனப்பாடப்பாடல்

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஏற்றத் தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும்.
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு அசதி ஆக இருக்கும்.
3. நிலவு + என்று = நிலவென்று
4. தமிழ் + எங்கள் = தமிழ்எங்கள்
5. அமுதென்று = அமுது + என்று
6. செம்பயிர் = செம்மை + பயிர்

ஆ) பொருத்துக

  • விளைவுக்கு - நீர்
  • அறிவுக்கு - தோள்
  • இளமைக்கு - பால்
  • புலவர்க்கு - வேல்

ஈ) குறுவினா

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

அமுது, நிலவு, மணம்.

2. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

தமிழை உயிரோடு ஒப்பிடுவோம்.

உ) சிறுவினா

1. இன்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

சமூக வளர்ச்சிக்கு நீர் அடிப்படையானது.

ஊ) சிந்தனை வினா

வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது?

  • வேல் கூர்மையான ஆயுதம்.
  • தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள் கூர்மையான கருத்துகளைக் கொண்டது.
  • ஆகவே தமிழ் வேலோடு ஒப்பிடப்படுகிறது.

இளந்தமிழ் கல்வித் தளம் - ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் பக்கம்

பதிவிறக்க பொத்தான் 10 விநாடிகளில் தோன்றும்...

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post