9TH-TAMIL-MOZHIYAI AALVOM-ALL UNITS -QUESTIONS-26-PDF

 

இளந்தமிழ்                                                                                          ஒன்பதாம் வகுப்பு

மொழியை ஆள்வோம் – வினாக்கள் தொகுப்பு

இயல் – 1                                                                                          அமுதென்று பேர்

மொழியை ஆள்வோம்

) மொழி பெயர்க்க:-

1. LINGUISTICS -        2. LITERATURE         -        3. PHILOLOGIST                 

4. POLYGLOT -        5. PHONOLOGIST      -        6. PHONETICS -       

அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் __________________(திகழ்)

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் _____________ (கலந்துகொள்)

3. உலகில் மூவாயிரம் மொழிகள் __________________ ( பேசு )

4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா __________________  ( செல் )

5. தவறுகளைத் __________________ ( திருத்து )

வடிவம் மாற்றுக.

பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம் பெறும் அறிவிப்பாக மாற்றுக.

            மருதூர் அரசு மேல்நிலைப் பள்ளி இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கல்விப்பணியை வழங்கி வருகிறது. இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முகப் படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. ஒரு சோற்றுப் பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த “ உள்ளங்கையில் உலகம் “ என்ற நூலின் வெளியீட்டு விழா 21 ஜூன் திங்கள், பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் ( கின்னஸ் சாதனை படைத்த ) முன்னாள் மாணவர் இன்சுவை நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள, அனைவரையும் அழைக்கின்றோம்.

தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி ____________       2. சித்திரமும் கைப்பழக்கம் ___________        

3. கல்லாடம் படித்தவரோடு _________     4. கற்றோருக்குச் சென்ற ___________        

நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க.

          உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் ( பிப்ரவரி 21 ) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றை வடிவமைக்க

இயல் – 2                                                                                            உயிருக்கு வேர்

மொழியை ஆள்வோம்

பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.

1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

2. Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

 பிழை நீக்கி எழுதுக.

 1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.

2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.

5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

 1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.  

3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.

வடிவம் மாற்றுக.

அ) நீர்ச் சுழற்சி குறித்த கருத்து விளக்கப்ப டத்தின் உட்பொருளைப் புரிந்துணர்ந்து பத்தியாக மாற்றி அமைக்க..

 

 

 


           

 

வாயு மண்டலத்தில் உள்ள நீர், பனி மற்றும் உறை பனியில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, பின் குளிர்ந்த காற்றால் மேகமாகி மழைபொழிந்து நிலத்தை அடைந்து. கடல், ஆறு, நிலத்தடி நீர் இவற்றைப் பெருக்குகிறது. பின்னர் மீண்டும் கடல், ஆறு, தரையில் உள்ள நீர் நிலைகள், நிலத்தடி நீர் ஆகியவை சூரிய ஒளியால் ஆவியாக்கப் படுகிறது. ஆவியான நீர்த்திவலைகள் மேகமாகி, குளிர்ந்து மீண்டும் மழையாகி நிலத்தைக் குளிரச் செய்து வளமுடைய தாக்குகிறது.

 பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

                  மதுரை நகருக்கு அருகே உள்ள கீழடி என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருள்கள், உலோகப் பொருள்கள், முத்துகள், கிளிஞ்சல் பொருள்கள், மான் கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு – கறுப்புப் பானைகள், சதுரங்கக் காய்கள், தானியங்களைச் சேகரிக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், எலும்பினால் ஆன கூர் முனைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், நீர் சேகரிக்கும் பெரிய மட்கலன்கள், சிறிய குடுவைகள், உறைக் கிணறுகள், சுடுமண் கூரை ஓடுகள் போன்ற பல்வேறு தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன. மூன்று வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இவற்றுள் தொன்மையான சுமார் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இதுவரை அகழாய்வு செய்யப்பட்ட பெரும்பான்மையான இடங்கள், இறப்புத் தொடர்பான தடங்களை வெளிப்படுத்துவனாக அமைந்திருந்தன. ஆனால் கீழடியில் கண்டறியப்பட்டுள்ள முழுமையான வாழ்விடப் பகுதியும் செங்கல் கட்டுமானங்களும் இதரப் பொருள்களும் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் கண்முன் காட்டும் சான்றுகளாய் அமைந்துள்ளன.

 

 

இயல் – 3                                                                                                உள்ளத்தின் சீர்

மொழியை ஆள்வோம்

பொன்மொழிகளை மொழிபெயர்க்க.

1. A nations’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi

2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru

3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa

4. You have to dream before your dreams can come true – A.P.J.Abdul Kalam

5. Winners don’t do different; they do things differently – Shiv Khera

 வடிவம் மாற்றுக:-

பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கண்டு, வரிசைப்  படுத்தி முறையான பத்தியாக்குக.

 1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

 3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

 1. மேடும் பள்ளமும்                            2. நகமும் சதையும்                3. முதலும் முடிவும்

4. கேளிக்கையும் வேடிக்கையும்       5.  கண்ணும் கருத்தும்.         6. மேலும் கீழும்

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

.           தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று 'காங்கேயம்' கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.

அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை ?

ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்ப டுவது யாது?

இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?

ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?  

2 ) பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

அ) கர்நாடகம்             ஆ) கேரளா                 இ) இலங்கை ஈ) ஆந்திரா

3) பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன

அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்;ளன ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன

இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன           ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.

4) தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் காளைகள் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?

அ) வினாத் தொடர்                            ஆ) கட்டளைத் தொடர்  

இ) செய்தித்தொடர்                            ஈ) உணர்ச்சித் தொடர்

இயல் – 4                                                                            எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க:-

Akbar said, "How many crows are there in this city?

" Without even a moment's thought, Birbal replied "There are fifty thousand five hundred and eighty nine crows, my lord".

 "How can you be so sure?" asked Akbar.

Birbal said, "Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here.

If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere".

Akbar was pleased very much by Birbal's wit.

பிழை நீக்கி எழுதுக.

1. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்.

2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்

3. பவளவிழிதான் பரிசு உரியவள் .

4. துன்பத்தால் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்.

5. குழலியும் பாடத் தெரியும்.

பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.

1. மனிதனையும் விலங்குகளையும் ( வேறு ) _________மொழியாகும்.

2. திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளை ( பெறு ) __________

3. காலந்தோறும் தன்னைப் ( புதுபித்து) __________ மொழி தமிழ்.

4. என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று ( தேடு )

நிகழ்வினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க.

அண்ணாவின் வாழ்க்கையில்…

தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்று அறியாமலே சோதனை செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று," தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் " என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், " இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக்கொள்ளுங்கள் "என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே , அண்ணா, “ நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள் தாம் உயர்பதவிக்கு வரவேண்டும் . அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார்.

1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?

2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக்கொள்ளச் சொன்னார்?

3. அண்ணா, வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?

4. பத்தியில் இடம் பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக.

5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.          

விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க.

 

 

 

 

 

 

 

 

 

 

 


இயல் – 5                                                                                           கலை பல வளர்தல்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

1. Strengthen the body.
2. Love your food :
3. Thinking is great :
4. Walk like a bull. :

5. Union is strength :

6. Practice what you have learnt :         (PUTHIYA AATHISOODI BY BHARATHIYAR)

மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க.

எட்டாக்கனி, உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை , ஆகாயத் தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்.

(எ.கா .)  எட்டாக்கனி :

1. உடும்புப்பிடி :           2. கிணற்றுத்தவளை :           3. ஆகாயத்தாமரை :

4. எடுப்பார் கைப்பிள்ளை :    5. மேளதாளம் :

 மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

2. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள் .

3. நேற்று தென்றல் காற்று அடித்தது.

4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்

5. அணில் பழம் சாப்பிட்டது.

 கவிதை படைக்க.

 மூடநம்பிக்கை, புவியைப் போற்று, அன்பின்வழி

(எ.கா. )

மூடநம்பிக்கை                       புவியைப் போற்று                               அன்பின்வழி

 

 

இயல் – 6                                                                                                வாழிய நிலனே

மொழிய ஆள்வோம்

மொழி பெயர்க்க :-

A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.

பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.

1. புத்தகம் படிக்கலாம் ( நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)

2. விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)

பிழை நீக்குக.

பெறுந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.

செய்தியைப் படித்து நேர்காணலுக்கான வினாக்களை உருவாக்குக.

ஐராவதம் மகாதேவன்

          சங்க காலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வு முன்னோடி ஐராவதம் மகாதேவன். இந்திய ஆட்சிப் பணி அலுவலரான இவர் தொல்லியியலும் எழுத்தியலிலும் ஆர்வம் கொண்டவர்.

கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்ட இவர், சிந்துவெளி எழுத்துருவைத் திராவிட எழுத்துரு எனக் கண்டறிந்தார். தமிழ்மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடிவத்தைத் தமிழ் பிராம்மி என்றழைக்காமல் தமிழி என்றோ பழந்தமிழ் என்றோ அழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1965 ஆம் ஆண்டு, கரூரை அடுத்த புகளுரில் ஆறுநாட்டார் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டினைப் படித்தறியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவை தமது வாழ்நாளில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வு எனக் கூறுகிறார். நாற்பது ஆண்டுகளாகப் படிக்க முடியவில்லை எனக் கைவிடப்பட்ட அந்த கல்வெட்டைத் தாம் படித்ததை ஆனந்தம் பொங்கக் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார்.

“….. கையில் எடுத்து வந்திருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து, கல்வெட்டை எடுத்துக் கூட்டி வாசித்த வண்ணம் படியெடுக்கலானேன். முதல் வரியில் புதுமை எதுவும் இல்லை. யாற்றூர் என்னும் இடததைச் சேர்ந்த சமணத் துறவியான செங்காயபன் வசிக்கும் உறையுள் இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும்பாலும் ஏனைய தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகள் தரும் செய்திகள் போலவே இருந்தது. அடுத்த வரிக்குப் போனேன். இரண்டாவது வரியில் கோ என்ற முதல் சொல்லைக் கண்டவுடன் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது. சங்க காலத் தமிழ் மன்னரின் கல்வெட்டு இது என்பது உறுதியானது. மேலும் படித்தேன் இரண்டாம் வரியை. ‘ கோ ஆதன் செல்லிரும் பொறை மகன் ‘ என்ற  சொற்களைப் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட வியப்பும் மகிழ்ச்சியும் சொல்லி மாளாது! ஆனாலும் தமிழிலும் வரலாற்றுத் துறையிலும் ஈடுபாடு உள்ள அன்பர்களுக்கு எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி வெள்ளத்தை விளக்க அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். அடுத்தடுத்து ‘ பெருங்கடுங்கோன்’. இளங்கடுங்கோ’, இளங்கோ’ என்ற பெயர்களைப் படித்தபொழுது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. சங்க நூல்களில் மட்டும் இதுவரை காணப்பட்ட பண்டைய தமிழ் மன்னர்களின் பெயர்களைத் தமிழகத்தில் முதல்முறையாக ஒரு கல்வெட்டில் கண்டுவிட்ட ஆனந்தத்தில் நோட்டுப் புத்தகத்தை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டு கூத்தாடினேன். என்னுடன் வந்தவர்கள், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்!

            என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அக்கல்வெட்டின் முழுவாசகம் பின்வருமாறு;

…….அம்மண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்

கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்

பெருங் கடுங்கோன் மகன் (இ )ளங்

கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்

          இது கருவூரிலிருந்து ஆட்சி செய்த சேரல் இரும்பொறை மன்னர்கள் பொறித்தது. பதிற்றுப்பத்திலும் ஏனைய சில சங்க நூல்களிலும் பாடப்பெற்ற பழந்தமிழ் மன்னர்கள் இவர்கள். இக்கல்வெட்டு ஏறத்தாழ கி.பி ( பொ.ஆ) இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது.

இயல் – 7                                                                                          என் தலை கடனே

மொழியை ஆள்வோம்

மொழி பெயர்க்க

Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,” You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.”

 சொற்றொடர்களை அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

1) மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார். (நேர்க்கூற்றாக மாற்றுக)

2) ”தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிறோம்” என்று ஆசிரியர் கூறினார். (அயற்கூற்றாக மாற்றுக)

3) அலறும் மயிலும் கூவும் ஆந்தையும் அகவும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்கவேண்டும். (ஒலிமரபுப் பிழைகளைத் திருத்துக)

4) கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக் குஞ்சுகள் ஓடின. (பெயர்மரபுப் பிழைகளைத் திருத்துக

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post